கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, July 31, 2011

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து பல இடங்களில் சாலை மறியல்: திமுகவினர் கைது


திருவாரூர் அருகே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை 30.07.2011 அன்று காலை போலீசார் திடீரென்று கைது செய்தனர். அதை கண்டித்து, சைதாப்பேட்டை பஜார் தெருவில் மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையில் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல, தங்கசாலை ரவுண்டானா அருகே 30.07.2011 அன்று மதியம் 12 மணியளவில் ஆர்கே நகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பி.கே.சேகர்பாபு தலைமையில் பகுதி செயலாளர் டன்லப் ரவி, துறைமுகம் பகுதி செயலாளர் மணிவேலன், கவுன்சிலர் விஜயகுமார், ஏ.பி.மணி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட திமுகவினர் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர்.
ஸ்டாலினை விடுதலை செய்ய கோரியும், திமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். மறியலில் ஈடுபட்டவர்களை வண்ணாரப்பேட்டை போலீசார் கைது செய்தனர். இதனால் தங்கசாலை பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராயபுரம் சிக்னல் அருகே பகுதி செயலாளர் கட்பீஸ் பழனி, மாவட்ட பொருளாளர் இளைய அருணா ஆகியோர் தலைமையில் மறியல் செய்தனர். பொய் வழக்கு போடுவதை கண்டித்து கோஷமிட்ட 100 பேரை கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வில்லிவாக்கம் எம்டிஎச் ரோடு & ரெட்டித் தெரு சந்திப்பில் பகுதி செயலாளர் சதிஷ்குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் மறியல் செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அமைந்தகரை அண்ணா வளைவு பகுதியில் மறியல் செய்த பகுதி செயலாளர் ராமலிங்கம், இளைஞரணி செயலாளர் பரமசிவம், முன்னாள் இளைஞரணி செயலாளர் ஏ.டி.முருகன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மயிலாப்பூர் லஸ் சிக்னல் அருகே பகுதிச் செயலாளர் வேலு தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
திருவொற்றியூர் நகர திமுக செயலாளர் தனியரசு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் சன்னதி தெருவில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை தேரடி பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். அதிமுக அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தனியரசு, முன்னாள் எம்எல்ஏ டி.சி.விஜயன், நகர இளைஞரணி அமைப்பாளர் கவி கணேசன் உட்பட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
எண்ணூரில் நகர செயலாளர் பாண்டியன் தலைமையில் திமுகவினர், கத்திவாக்கம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, நேரு நகரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். எண்ணூர் போலீசார், கத்திவாக்கம் நகராட்சி தலைவர் திருசங்கு, கவுன்சிலர்கள் வீரச்சந்திரன், சிவக்குமார் உட்பட 70க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
வேளச்சேரி பகுதி செயலாளர் இந்திரா நகர் ரவி தலைமையில், திருவான்மியூர் சிக்னல் அருகில் நேற்று மதியம் திடீர் மறியல் போராட்டம் நடத்தினர். 66 பேரை திருவான்மியூர் போலீசார் கைது செய்தனர். வடசென்னை பொறுப்பாளர் ஆர்.டி.சேகர், மாவட்ட அவைத் தலைவர் நெடுமாறன், வட்ட செயலாளர்கள் கமலக்கண்ணன், முருகன், இடிமுரசு, ஆர்.துரைசாமி, ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் வியாசர்பாடி, அம்பேத்கர் சாலையில் நேற்று மறியல் செய்தனர். போலீசார் மறியலில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். இதேபோல் பெரவள்ளூர், அகரம், ஜங்ஷன் ஆகிய பகுதிகளில் மறியல் செய்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

புதுக்கோட்டை திமுகவினர் சாலை மறியல் :

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக செய்திகள் பதவியதால், புதுக்கோட்டை திமுக மாவட்டச் செயலாளர் பெரியண்ணன் அரசு தலைமையில் பேருந்து நிலையத்தில், பேருந்துகள் வெளியேறும் வாயிலில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். மாற்று பாதையில் பேருந்துகள் சென்று கொண்டிருப்பதால் அந்த பாதையில் இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர் பாலு தலைமையில் திமுகவினர் மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செந்துறை திமுகவினர் 25 பேர் கைது :
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக செய்திகள் பரவியதால், குன்னம் தொகுதிக்கு உட்பட செந்துறையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கருணாநிதி, பி.ஆர்.பாண்டியன், ஆதி.சங்கர், பரமசிவம், பாஸ்கர் உள்பட திமுகவினர் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

எ.வ.வேலு தலைமையில் மறியல் - திமுகவினர் கைது
:
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட திமுகவினர் மாவட்ட செயலாளர் எ.வ.வேலு எம்.எல்.ஏ தலைமையில் முன்னால் எம்.எல்.ஏ பிச்சாண்டி, சேர்மன் திருமகன் ஆகியோர் நூற்றுக்கணக்கான திமுகவினருடன் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே சாலை மறியல் செய்தனர்.

போலிசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் கட்சியினர் ஜெ வை எதிர்த்து கோஷமிட்டனர். உடனே போலிசார் அவர்களை கைது செய்தனர்.

பொன்முடி தலைமையில் சாலை மறியல் : விழுப்புரம் ரயில்வே நிலையத்தில் இருந்து, தேசிய நெடுஞ்சாலைக்கு திமுக தொண்டர்களுடன் சென்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி, அங்கு சாலை மறியலில் ஈடுபட்டார். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நெல்லை - மறியல் செய்த திமுகவினர் கைது
:
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து திருநெல்வேலியில் மாவட்டச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், டிபிஎம் மைதீன்கான் உள்ளிட்ட திமுகவினர் ஜெங்ஷன் பகுதியில் மறியல் செய்தனர். பொய் வழககுப் போடாதே உள்ளிட்ட அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகரசெயலாளர் ராமர், யூனியன் சேர்மேன் முருகேசன் தலைமையில் நடந்த மறியலில் 35 திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.


No comments:

Post a Comment