சமச்சீர் கல்வி வழக்கு 28.07.2011 அன்று 3வது நாளாக உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சவுகான், பாஞ்சால், தீபக்வர்மா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பாக வக்கீல் பி.பி.ராவ், குரு கிருஷ்ணகுமார், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆகியோரும், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சார்பாக வக்கீல்கள் அரிமா சுந்தரம், ராஜீவ் தவான் ஆகியோர் வாதாடினார்கள்.
பெற்றோர் சார்பாக மூத்த வக்கீல்கள் அந்திஅர்ஜூனா, ஏ.கே.கங்குலி, ரவிவர்மா, விடுதலை, கே.பாலு ஆகியோர் ஆஜரானார்கள். முதலில் மூத்த வக்கீல் அந்தி அர்ஜூனா வாதத்தை தொடங்கினர்.
அவர் வாதாடியதாவது:
சமச்சீர் கல்வியில் குறைகள் இருந்தால், அதை சரிசெய்து பாடப் புத்தகத்தை வெளியிடலாம். இதற்காக அவசர சட்டம் கொண்டு வந்து சமச்சீர் கல்வியை நிறுத்தி வைத்ததால் மாணவ மாணவிகள் 2 மாதமாக எந்த புத்தகத்தை படிப்பது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.
சமச்சீர் கல்வியில் குறைகள் இருந்தால், அதை சரிசெய்து பாடப் புத்தகத்தை வெளியிடலாம். இதற்காக அவசர சட்டம் கொண்டு வந்து சமச்சீர் கல்வியை நிறுத்தி வைத்ததால் மாணவ மாணவிகள் 2 மாதமாக எந்த புத்தகத்தை படிப்பது என தெரியாமல் தவித்து வருகின்றனர்.
சமச்சீர் கல்வி கேட்டு தற்போது தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழக அரசு நியமித்த நிபுணர்கள் குழுவில் அனுபவமிக்க கல்வியாளர்கள் இல்லை. அரசு நியமித்த குழுவின் கருத்தை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியது சரியானதுதான். சட்டதிருத்தம் செல்லாது என உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக் கூடாது. தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். 200 கோடி ரூபாய் செலவில் சமச்சீர் பாடப்புத்தகம் தயாராக உள்ளது. எனவே இதை உடனே தர உத்தரவிட வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக தீர ஆராய்ந்து பார்த்து, மற்ற மாநிலங்களில் உள்ள நிலைகளை ஆராய்ந்து பார்த்து தான் சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. இதை தமிழக அரசு ஆட்சிக்கு வந்ததும் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்பட்டு, சமச்சீர் கல்வியை தள்ளிவைத்து இதற்காக சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதனால் ஒரு கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசின் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் வாதாடினார்.
இவ்வாறு அவர் வாதாடினார்.
இதையடுத்து நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 2ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அப்போது தமிழக அரசு வக்கீல் பி.பி.ராவ் குறுக்கிட்டு, “2ம் தேதிக்குள் சமச்சீர் புத்தகத்தை தர வேண்டும் என்ற உத்தரவை தள்ளிவைக்க வேண்டும், தி.மு.க. நாளை நடத்தும் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்றார்.
“அடுத்த மாதம் 5ம் தேதிக்குள் சமச்சீர் பாடப் புத்தகங்களை தர வேண்டும், தி.மு.க போராட்டத்திற்கு எந்த தடையும் விதிக்க முடியாது” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment