சமச்சீர் கல்வியை செயல்படுத்தக் கோரி தமிழ்நாடெங்கும் தெருமுனை பொதுக் கூட்டங்களை நடத்திட தி.மு.க. இளைஞரணி தீர்மானித்துள்ளது. தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் - துணை அமைப் பாளர்கள் கூட்டம் நேற்று (2.7.2011) மாலை 5 மணிக்கு சென்னை, அன்பகத்தில் தி.மு. கழகப் பொரு ளாளரும் - தி.மு.க. இளைஞர் அணிச் செய லாளருமான தளபதி மு.க.ஸ்டா லின் அவர்கள் தலைமையில், துணைச் செயலாளர்கள் மேயர் மா.சுப்பிர மணியன், ஈ.ஜி.சுகவனம் எம்.பி, ஆர்.ராசேந்திரன், சுப.த.சம்பத், சுபா.சந்திரசேகர், அசன் முகமது ஜின்னா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. அதுபோது பின்வரும் தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன:-
சமச்சீர் கல்வி
ஏழை, பணக்காரர் வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் சமமான - தரமான கல்வி அளிக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையி லான கழக அரசால் கல்வியாளர்கள், நிபுணர்களைக் கொண்டு ஆராய்ந்து, அனைத்து தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு அமல்படுத்திய சமச்சீர் கல்வியை, ஜெயலலிதா அரசு தடை செய்ததால், தமிழக மாண வர்கள் மற்றும் பெற்றோர்களி டையே பெரும் கொந்தளிப்பும் ஆசிரியப் பெருமக்களிடையே குழப் பமும் ஏற்பட்டுள்ளதோடு, பள்ளி - கல்லூரி களை மாணவர்கள் புறக் கணிப்புச் செய்து ஆர்ப்பாட்டங் களிலும், போராட்டங்களிலும் ஈடு பட்டுள்ளனர். தலைவர் கலைஞர் அரசால் கொண்டு வரப்பட்ட பல் வேறு நலத்திட்டங்களில் ஒன்றான சமச்சீர் கல்வியை அமல்படுத்தத் தவறிய ஜெயலலிதா அரசை இக்கூட் டம் வன்மையாகக் கண்டிக்கிறது.
சமச்சீர் கல்வியை தடை செய்வதன் மூலம் மாண வர்களின் வாழ்க்கைத் தரம் பாதிப்புக்கு உள்ளா வதையும், ரூபாய் 200 கோடி செலவில் அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்களை வீணடிப்பதையும் சுட்டிக்காட்டு வதோடு, கழக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தின் தீர்மானங் களை விளக்கியும், தமிழகம் முழுவதும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி களுக்குட்பட்ட கிரா மங்கள் - குக்கிராமங்கள் - வார்டுகள் - வட்டங்கள்தோறும் தெருமுனைக் கூட்டங்களையும், பொதுக் கூட் டங்களையும் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் நடத்துவதென இக் கூட்டம் தீர்மானிக்கிறது.
தலைமைச் செயலகம் மாற்றம்
தமிழக மக்களின் எதிர்கால நலன் களைக் கருத்தில் கொண்டு தி.மு.கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்களையும், சாதனைகளையும் அரசியல் காழ்ப் புணர்ச்சியால் ரத்து செய்வதி லேயே அ.தி.மு.க. அரசு முனைப்போடு செயல்படுகிறது.
அனைத்துத் தரப்பினரும் பாராட் டும் வகையில் புதுப்பொலிவுடன் திகழும் புதிய தலைமைச் செயல கத்தை பயன்படுத்த முன்வராமல், போலியான கற்பனை கலந்த கார ணங்களைக் கூறி, மீண்டும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கே சட்டப் பேரவை செயலகத்தை மாற்றியிருக் கும் அ.தி.மு.க. அரசின் அடாவடிச் செயலை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள், அறிவுலக மேதை அறிஞர் அண்ணா பிறந்த நாள், திராவிட இனத்தின் நம்பிக்கை நட்சத்திரமாய் திகழும் தி.மு.கழகம் உதயமான நாள் ஆகிய வற்றை இணைத்து முப்பெரும் விழாவாக எழுச்சியோடு கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் கொண் டாடி வருவதன் தொடர்ச்சியாக,
தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர் களின் பிறந்தநாளையொட்டி தமிழ கத்தில் உள்ள அனைத்து மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் பங்கேற்றிடும் வகையில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை ஒப்பித்தல் ஆகிய போட்டி களை நடத்தி, முறையாக தேர்வு செய்து தி.மு.க. இளைஞர் அணி அறக்கட்டளைச் சார்பில் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வரு கிறது. இவ்வாண்டும் அனைத்து போட்டிகளிலும் பெருமளவில் மாணவர் களை பங்கேற்கச் செய்து, நிகழ்ச்சிகளை எழுச்சியோடு ஏற் பாடுகள் செய்திட மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர , பேரூர் மற்றும் பகுதி இளைஞர் அணி அமைப்புகளை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
இளைஞர் அணிக்கு உறுப்பினர்களை பெருமளவில் சேர்த்தல்
தி.மு.க. இளைஞர் அணியின் உறுப்பினர்களை புதிதாக பெரு மளவில் சேர்ப்பதோடு, ஏற்கனவே உறுப்பினராக உள்ளோர் தங்களை புதுப்பித்துக் கொள்ளும் பணியி னைத் தொடர்ந்து, கழக சட்ட திட்ட விதியின்படி கிராமங்கள் - குக்கிராமங்கள் - வார்டுகள் - வட்டங்கள்தோறும் அமையப் பெற் றுள்ள தி.மு.க. இளைஞர் அணி அமைப்புக்களை புதுப்பிப்பதோடு, அமைப்புகள் இல்லாத இடங்களில் புதிதாக இளைஞர் அணி அமைப் புகளை ஏற் படுத்திடவும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி உள்ளிட்ட இளைஞர் அணி அமைப் பாளர் - துணை அமைப்பாளர்களை இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
No comments:
Post a Comment