கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, July 19, 2011

அஞ்சுகம் அம்மையார் பெயரை ஜெயலலிதா அரசு நீக்கியிருக்கிறதே? - கலைஞர் பதில்


கலைஞர் விடுத்துள்ள கேள்வி பதில் விவரம் வருமாறு:-

கேள்வி :- கலப்புத் திருமணத் திட்டத்திற் காக அஞ்சுகம் அம்மை யார் பெயர் சூட்டப்பட் டிருந்ததை ஜெயலலிதா அரசு நீக்கியிருக்கிறதே?

பதில் :- மறைந்த வர்களுக்கு இந்த ஆட்சி செலுத்தும் மரியாதை அது. அஞ்சுகம் அம் மையார் மருத்துவமனை யில் மறைந்து, அவரது உடல் வீட்டிற்கு எடுத்து வரப்படுவதற்கு முன் பாகவே - அந்த வீட் டிலே வந்திருந்து அஞ்சு கம் அம்மையாருக்கு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தியவர் பெருந்தலைவர் காமரா ஜர். குயில் பறந்து விட் டது, நாதம் நிலைத்திருக் கிறது - மலர் உதிர்ந்து விட்டது, மணம் நிரம்பி இருக்கிறது - அஞ்சுகம் மறைந்து விட்டார்கள், அவர்கள் பற்றிய நினைவு நிலைத்திருக்கிறது என்று அந்த அம்மையா ருக்கு இரங்கற்பா எழு தியவர் அறிஞர் அண்ணா.

ஜெயலலிதா அம்மை யாரை அரசியலுக்கு அறிமுகப்படுத்திய மக் கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களோ, சகோதரர் மு.க. அவர்களின் அருமை அன்னையார் அவர்க ளோடு பழகவும், அவர் களுடைய ஈடுகாட்ட இயலாத அன்பு உள் ளத்தை உணரவும் வாய்ப் பைப் பெற்றவன் நான். அத்தகைய அன்னையை, அன்புத் தாயை - உல கத்தை வளர்க்கும் தாய் மையைப் பிரிந்து விட் டால் மறுபடி நமக்கு யார் அன்னை? என்று எழுதினார்.

நடிகர் திலகம் சிவாஜி அவர்களோ, எனக்கு அஞ்சுகம் அம்மையா ரும் ஒரு தாய்- என் நெஞ்சுள்ள வரை அவர் கள் நினைவு இருக்கும். அவர்கள் நினைவு உள்ள வரை எனது கண்ணீரின் காணிக்கையும் அவர் களுக்கு இருந்து வரும் என்றார்.

இப்படிப்பட்டவர்கள் எல்லாம் நெஞ்சம் நெகிழ்ந்து பாராட்டிய அந்த அஞ்சுகம் அம்மை யாரின் பெயரைத்தான் அ.தி.மு.க. அரசு நீக்கி யிருக்கிறது. கற்பூர வாசனை எல்லோருக்கும் எப்படித் தெரியும்.

No comments:

Post a Comment