மே 13ஆம் தேதி வரையில் கலைஞரையும், கழகத்தையும் பாராட்டிக் கொண்டிருந்த பலர், தற்போது தங்கள் நிலையைக் கொஞ்சமும் கூச்சப்படாமல் மாற்றிக்கொண்டு விட்டனர். அறிவாலய விழாக்கள் பலவற்றில் பங்கேற்றுக் கலைஞரைப் புகழ்ந்து தள்ளி, ஜெயலலிதாவைக் கடுமையாய்த் தாக்கிக் கேலி செய்தவர்களுள் கவிஞர் வாலிக்கு முதல் வரிசையில் இடமுண்டு.
இப்போது ஜுனியர் விகடனின் (26.06.11) முதல் பக்கத்தில், ரங்கநாயகி என்னும் தலைப்பில் ஒரு கவிதை வெளியாகியுள்ளது. ஸ்ரீரங்கத்தின் சட்டமன்ற உறுப்பினர் ஜெயலலிதா என்றுதான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கவிஞரோ, அரங்கநாதர் கோயிலில் உள்ள ரங்கநாயகியே அவர்தான் என்கிறார்.
வாக்களித்த ஸ்ரீரங்கத்து மக்கள்
வாழ்த்துகிறார்கள் இன்று
எங்க நாயகிதான் - அந்த
ரங்க நாயகி என்று!
அடடா... எத்தனை பெரிய கண்டுபிடிப்பு!
நன்றி : கருஞ்சட்டைத் தமிழர்
No comments:
Post a Comment