கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, July 30, 2011

சமச்சீர் கல்வி ஆர்ப்பாட்டம் : 2000 திமுகவினர் சிறையில் அடைப்பு




சமச்சீர் கல்வி அமல்படுத்தக்கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் செய்த 2000 திமுகவினர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி திமுக சார்பில் 27.07.2011 அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் மாணவர் திமுக தலைவர் இள.புகழேந்தி, சேலத்தில் முன்னாள் எம்எல்ஏ பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன், பாளையங்கோட்டையில் பூங்கோதை உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது.
சென்னையில் 339 பேர், காஞ்சிபுரம் 768, திருவள்ளூர் 308, திருவாரூர் 19, நாகப்பட்டினம் 52, புதுக்கோட்டை 15, திருச்சி 13, திருநெல்வேலி 54, கன்னியாகுமரி 21, விழுப்புரம் 155, கடலூர் 42, மதுரை 40, சேலம் 60, தர்மபுரி 58, நாமக்கல் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கமாக ஆர்பாட்டம் செய்வோர் மாலையில் விடுவிக்கப்படுவர். ஆனால், திடீரென்று கைதான 2000 பேரும் 27.07.2011 அன்று மாலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். எனினும், திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் யாரும் கைது செய்யப்படவில்லை.

சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் - பள்ளிகள் முன் ஆர்ப்பாட்டம் திமுகவினர் 6000 பேர் கைது :
சமச்சீர் கல்வியை அமல்படுத்த கோரி தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய திமுகவினர் 6000 பேர் கைது செய்யப்பட்டனர்.
திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டத்தை எப்பாடு பட்டேனும் எத்தகைய நீதிமன்றம் ஏறியும் தடுத்து நிறுத்துவது என்ற முனைப்போடு தனியார் பள்ளியினரும் அதற்கு துணை போகும் தமிழக அரசும் மாணவர்கள் எதிர்காலம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று செயல்படுகின்றனர்.
இந்த போக்கை தடுக்கவும் அறிவார்ந்த சமுதாயம் உருவாக்கவும் தமிழக கட்சிகளின் ஏகோபித்த குரலுடன் திமுக குரலும் இணைந்துள்ளது. சமச்சீர் கல்வி ஆதரவுக்கு வலு சேர்க்கும் வகையில் பள்ளிகள், கல்லூரிகளை 29ம் தேதி புறக்கணிக்க வேண்டும் என்று திமுக இளைஞரணி, மாணவரணி வேண்டுகோள் விடுத்தது. அதன்படி தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் அறப்போர் கிளர்ச்சி நடந்தது.
தென் சென்னையில் திமுக மாணவர் அணி செயலாளர் இள புகழேந்தி தலைமையில் நிர்வாகிகள் தாயகம் கவி, ஜெரால்டு, சேக் தாவூத், களக்காடி எல்லப்பன், கோதண்டம் உள்ளிட்ட 100 பேர் சைதை மாந்தோப்பு பள்ளி முன்பு அறப்போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.
தூத்துக்குடியில் புனித மரியன்னை பள்ளி முன் ஜெயக்குமார் ரூபன் தலைமையில் சௌ.ராஜா, ஜான் அலெக்சாண்டர் உள்ளிட்ட 500 பேர் அறப்போரில் பங்கேற்றனர். கோவில்பட்டி நகரில் அம்பேத்கர் சிலை அருகில் ஆர்.ராமர், வி.முருகேசன், மாறன் உள்ளிட்ட 300 பேர் பங்கேற்றனர். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை யில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை தலைமையில் போராட்டம் நடத்திய 50 பேர் கைது செய்யப்பட்டனர். பூந்தமல்லியில் நடுக்குத்தகை ராஜி, ஜெயகுமார் உள்ளிட்ட 50 பேர் பங்கேற்றனர். திருமழிசையில் முனியசாமி, மகாதேவன் உள்ளிட்ட 40 பேர் கைதாகினர். மீஞ்சூரில் பாஸ்கர் சுந்தரம் தலைமையில் 162 பேர் கைதாகினர்.
வேலூர், திண்டுக்கல், தேனி, கிருஷ்ணகிரி, நாமக்கல், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒன்றிய, நகர, பேரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பள்ளிகளில் துண்டுப் பிரசுரம் தந்து அறப்போர் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் கைதாகினர். மொத்தம் 6000 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தஞ்சை:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 27.07.2011 அன்று தி�முகவினர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. நகரில் ஆட்டோ மற்றும் பஸ்களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது.
ஒவ்வொரு பள்ளி முன்பும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கும்பகோணம் பாணாதுறை மேல்நிலைப்பள்ளி வாசலில் நகர்மன்ற தலைவர் தமிழழகன் தலைமையில் திமுகவினர் துண்டு பிரசுரம் வழங்கி கொண்டிருந்தனர். அங்கு வந்த அதிமுக நகர செயலாளர் பி.எஸ்.சேகர், அயூப்கான், ஜான், ராமமூர்த�தி உள்ளிட்டோர் திமுகவினருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
சிலர் திமுகவினரை நோக்கி சோடா பாட்டில்களை வீசினர். இந்த பாட்டில்கள் நடுரோட்டில் உடைந்து சிதறியது. சிலரின் வீட்டின் வாசலில் விழுந்தும் உடைந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:
வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட திமுக அவைத்தலைவர் முகமதுசகி, மேயர் கார்த்திகேயன், மாநகர செயலாளர் அ.மா.ராமலிங்கம், துணை மேயர் முகமதுசாதிக் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முப்பதுவெட்டி, சக்கரமல்லூர், அரப்பாக்கம் ஆகிய பகுதிகளிலும் அரசு பள்ளிகள் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவர்களும் கலந்து கொண்டனர். நெமிலியில் ஒன்றிய செயலாளர் குமார் தலைமையிலும், காவேரிப்பாக்கத்தில் ஒன்றிய செயலாளர் மாணிக்கம் தலைமையிலும், திருப்பத்தூரில் நகர திமுக செயலாளர் ராஜேந்திரன் தலைமையிலும் போராட்டம் நடந்தது.
போராட்டத்தை போலீசார் வீடியோ கேமராவில் பதிவு செய்தனர். பள்ளிகள் முன் ஆசிரியர்கள் நின்று கொண்டு, மாணவர்களை வகுப்புக்குள் செல்லுமாறு எச்சரித்தனர். இருப்பினும் பெரும்பாலான இடங்களில் மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு தர்மபுரி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ரவி, ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் நாகராஜன், பேரூராட்சி துணை தலைவர் பத்தேகான் தலைமையில் 27.07.2011 அன்று காலை கூடிய திமுகவினர், சமச்சீர் கல்வியை அமல்படுத்த மாணவர்களிடையே ஆதரவு திரட்டினர்.
இதையடுத்து, அங்கு கூடியிருந்த திமுகவினர் 14 பேரை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்கள் மீதும் போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர்:
கரூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அதன் வாயில் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின் சாலையில் படுத்து மறியல் செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பழநி:
பழநி அருகே ஆயக்குடி ஐடிஓ மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து, பள்ளி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். டிஎஸ்பி முருகேசன் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி கலைந்து செல்ல அறிவுறுத்தினார். போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
குமரி:
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக நகர செயலாளரும், இளைஞரணி மாவட்ட அமைப்பாளருமான வக்கீல் மகேஷ் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதே போல் ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி அருகில் நின்ற தோவாளை ஒன்றிய திமுக செயலாளர் நெடுஞ்செழியன் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் 27.07.2011 அன்று மாலை நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடலூர்:
கடலூர் நகராட்சி பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் தடுத்ததையும் மீறி வகுப்புகளில் இருந்து வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் சென்று அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்ற திமுகவினர் உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 42 பேரை 27.07.2011 அன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 152 பேர் 27.07.2011 அன்று மாலை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
நெல்லை:
நெல்லை பாளையங்கோட்டை சாராள் தக்கர் மேல்நிலைப்பள்ளி முன் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் முத்துராமலிங்கம் தலைமையில் முன்னாள் அமைச்சர் பூங்கோதை மற்றும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் நடத்திய 34 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல, நெல்லை கல்லணை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா உள்ளிட்ட திமுகவினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட 54 பேரும் நெல்லை ஜே.எம்.2 மாஜிஸ்திரேட் ராபின்சன் ஜார்ஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியில் மிஷன் வீதியில் வஉசி அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே மாநில திமுக இளைஞரணி அமைப்பாளர் சிவா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அறப்போராட்டத்தில் ஈடுபட்ட மாநில அமைப்பாளர் ஜானகிராமன், இளைஞரணி அமைப்பாளர் சிவா உள்ளிட்ட 134 பேரை போலீசார் கைது செய்தனர்.


மகன்களுடன் போராட்டம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பழனிச்சாமி தனது மகன்களான 9ம் வகுப்பு படிக்கும் ஏங்கலேசன், 7ம் வகுப்பு படிக்கும் லெனின் ஆகியோருடன் சமச்சீர் கல்வியை வலியுறுத்தி போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன் 27.07.2011 அன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். போச்சம்பள்ளி வட்டாட்சியர் மற்றும் காவல் ஆய்வாளர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன்பேரில், பழனிச்சாமி தனது மகன்களுடன் அங்கிருந்து சென்றார்.

No comments:

Post a Comment