கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, July 9, 2011

திமுகவினர் மீது பொய் வழக்கு - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு



திமுகவினர் மீது பொய்வழக்கு போடப்படுகிறது. இதை சட்டப்படி சந்திப்போம் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தி.மு.க. பொருளாளரும், தமிழக முன்னாள் துணை முதல் அமைச்சருமான மு.க.ஸ்டாலின் 08.07.2011 அன்று திருச்சி வந்தார். திருச்சி மாவட்ட திமுக துணை செயலாளரும், கம்பரசம்பேட்டை ஊராட்சி தலைவருமான குடமுருட்டி சேகர் கஞ்சா வழக்கிலும், குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 08.07.2011 அன்று திருச்சி மத்திய சிறையில் சந்தித்து பேசினார்.
பின்னர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி:
கேள்வி:
நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளில் திமுகவினர் கைது செய்யப்படுகிறார்களே?
பதில்:
திமுகவினர் பல்வேறு பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களை ஜாமீனில் எடுத்து வருகிறோம். ஆனால் அதையும் தடுப்பதற்காக அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்படுகிறது. ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெயலலிதாவால் குடமுருட்டி சேகர் வசிக்கும் பகுதியில் அதிக ஓட்டு பெற முடியவில்லை. அந்த கோபத்தில் சேகர் மீது பொய் வழக்கு போட்டு, குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். இதை சட்டப்படி சந்திப்போம்.
கேள்வி:
மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதி மாறன் ராஜினாமா செய்து ள்ளாரே?
பதில்:
ராஜினாமா செய்வதற்கான கடிதம் கொடுத்திருக்கிறார். அதுபற்றி செய்தி வந்துள்ளது. ராஜினாமா பிரதமரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக எங்களுக்கு தகவல் வரவில்லை.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment