கடந்த 2 மாதங்களில் மட்டுமே தொமுசாவை சேர்ந்த 17,000 பேரை மிரட்டி அண்ணா தொழிற்சங்க பேரவைக்கு மாற்றியுள்ளனர் என்று தொமுச பொது செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
போக்குவரத்து தொழிலாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக தொமுச உள்ளது. ஆட்சி பொறுப்பேற்றவுடன் எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல், தொமுச பணியாளர்களை பணிமாற்றம், இடமாற்றம், ஊர்மாற்றம் செய்து வருகிறது. மேலும் தொமுச சந்தா உறுப்பினர்களை மிரட்டி அ.தொ.பேரவைக்கு மாற்றி வருகின்றனர்.

இதுவரையில் மொத்தம் 17,000 உறுப்பினர்களை அ.தொ.பேரவைக்கு மாற்றியுள்ளனர். அதுபோல் எங்களின் யூனியன் ஆபீஸ்களையும் அபகரித்துள்ளனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் எங்களுக்கு நியாயமான தீர்ப்பு கிடைத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment