கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, July 23, 2011

எஸ்ஸார் கோபி வீட்டில் எந்த கடிதமும் சிக்கவில்லை!



நில மோசடி வழக்கு தொடர்பாக எஸ்ஸார் கோபி வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் எந்த கடிதமும் சிக்கவில்லை என வக்கீல்கள் தெரிவித்தனர்.
மதுரை அவனியாபுரத்தில் உள்ள திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார் கோபியின் வீடு மற்றும் அவரது பண்ணை வீட்டில் ஜூலை 20ல் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு, எஸ்ஸார் கோபி 2008ல் எழுதிய கடிதம் சிக்கியதாக சில பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. அவ்வாறு எந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றவில்லை என எஸ்ஸார் கோபியின் வக்கீல் ராமச்சந்திரன் மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக 23.07.2011 அன்று காலையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

எஸ்.ஆர்.கோபியின் வீடு, பண்ணை வீடுகளில் ஜூலை 20ல் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது அவரது வீடுகளில் அசல் பத்திரங்கள் மற்றும் பத்திர நகல்கள் மட்டுமே கைப்பற்றப்பட்டன. என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டது என்ற விபரம் குறித்து அதிகாரிகள் அத்தாட்சி சான்று அளித்துள்ளனர். அதில், எந்த கடிதமும் கைப்பற்றப்பட்டதாக குறிப்பிடப்படவில்லை.
இந்நிலையில், மு.க.அழகிரிக்கு எஸ்ஸார் கோபி 2008ல் கடிதம் எழுதியதாகவும், அந்த கடிதத்தில் தா.கிருஷ்ணன் கொலை உட்பட பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருப்பதாக 23.07.2011 அன்று செய்தி வெளியாகியுள்ளது. எஸ்ஸார் கோபி வீட்டில் நடத்திய சோதனையில் எந்த கடிதமும் சிக்கவில்லை. கடிதம் கிடைத்திருந்தால் அத்தாட்சி சான்றிதழில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அந்த கடிதம் எங்கு, எப்போது கிடைத்தது, யாரால் எழுதப்பட்டது என்பதில் சந்தேகம் உள்ளது. கடிதம் போலி யானது. கடிதம் கிடைத்ததாக செய்தி வெளியிட்ட பத்திரிகைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடிதம் உண்மை இல்லாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட பத்திரிகைகள் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது திமுக வக்கீல்கள் மோகன்குமார், செந்தில்வேல், லிங்கதுரை, ஜவஹர், அன்புநிதி, அவனியாபுரம் நகராட்சித் தலைவர் போஸ் முத்தையா ஆகியோர் உடனிருந்தனர்.

அது அழகிரிக்கு அண்ணன் எழுதிய கடிதம் அல்ல - கோபி தம்பி ஆவேசம் :

அழகிரி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். ’’எஸ்ஸார்.கோபி எனக்கு எந்த கடிதமும் எழுதவில்லை. போலீசார் போலியாக ஒரு கடிதத்தை தயார் செய்து அவதூறு பரப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

எஸ்.ஆர். கோபியின் தம்பி போஸ் முத்தையா, ( மதுரை அவனியாபுரம் நகராட்சி தலைவர் உள்ளார்.)இந்த கடித விவகாரம் குறித்து,


’’போலீஸ் தரப்பில் காட்டுவது பொய்க்கடிதம். அப்படி ஒரு கடிதத்தை அன்ணன் எழுதவில்லை. அண்ணன் அரசியல் வாழ்க்கையை அழிக்கப்பார்க்கிறார்கள். இதற்கு போலீஸ் உடந்தையாக இருக்கிறது’’ என்றும் கூறுகிறார்.


மேலும், அந்த போலிக்கடிதத்தை தயாரித்தவர்கள் மீதும், வெளியிட்டவர்கள் மீதும் வழக்கு தொடுப்பேன் தீவிரமாக உள்ளார்.

எஸ்.ஆர். கோபி வீட்டில் சிக்கிய கடிதம் - உண்மை என்ன?

தொடர்ந்து தலைமைறைவாக இருக்கும் கோபி, தானே முன் வந்து நேரில் ஆஜராகும்படி செய்வதற்குத்தான் இப்படி போலீஸ் கடித நாடகம் ஆடுகிறது என்கிறது மதுரை திமுக வட்டாரம்.




No comments:

Post a Comment