கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, July 28, 2011

அதிமுக அரசின் பிடிவாதத்தை கண்டித்து போராட்டம்: அனைத்து தரப்பும் ஒத்துழைக்க கலைஞர் வேண்டுகோள்


சமச்சீர் கல்வி பிரச்சனையில் அதிமுக அரசின் பிடிவாத போக்கை கண்டித்து 29.07.2011 அன்று திமுக சார்பில் நடைபெறும் அறப்போராட்டம் வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


திமுக தலைவர் கலைஞர் 28.07.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுக ஆட்சியில் சமச்சீர் கல்வி அவசரமாக கொண்டுவரப்படவில்லை என்றும், கடந்த 2006ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர்
முத்துக்குமரன் குழு ஆய்வு செய்து அளித்த பரிந்துரையை, விஜயகுமார் குழு சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துவதற்கு ஆலோசனைகள் வழங்கியது என்று கூறியுள்ளார்.


2008ஆம் ஆண்டு கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கல்வியாளர்கள் குழு நேரில் சென்று ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளித்தது. இதன்படி 4 ஆண்டுகள் பரிசீலனை செய்தபிறகுதான் 2010ஆம் ஆண்டில் சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தும் சட்டம் இயற்றப்பட்டது என்றும் கலைஞர் கூறியுள்ளார்.


சமச்சீர் கல்வி திட்டத்தினை தள்ளுபடி செய்யக்கோரி ஒரு சில தனியார் பள்ளிகளால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொரப்பட்ட வழக்குகளில் கடந்த 2010ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பணையில் தமிழக அரசு பிறப்பித்த சட்டம் செல்லத்தக்கது என்றும், நிலைநிறுத்தம் செய்யப்பட்டதையும் கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.


சமச்சீர் கல்விக்கு சாதகமான சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை கோரிய வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை கலைஞர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்பின்னர் 2010-2011ஆம் கல்வியாண்டில் முதல் கட்டமாக ஒன்றாம் வகுப்புக்கு 61 லட்சம் பாடப்புத்தகங்களும், 6ஆம் வகுப்புகளுக்கு 84 லட்சம் பாடப்புத்தகங்களும் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.


இதன் தொடர்ச்சியாக 2011-2012ஆம் கல்வியாண்டிற்கு இரண்டாம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பாடப்புத்தங்கள் 200 கோடி ரூபாய் செலவில் அச்சிடப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன.

இந்நிலையில் அதிமுக அரசு சமச்சீர் கல்வி திட்டத்திற்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்ற மேல்முறையீட்டிலும் சாதகமான உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவில், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது என்றும், ஆகஸ்ட் 2ஆம் தேதிக்குள் சமச்சீர் பாடப்புத்தகங்களை விநியோகிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்து ஐந்து நாட்களாகியும், தமிழக அரசு அதனை மதித்து இதுவரை புத்தகங்களை விநியோகிக்கவில்லை.


இதற்கு மாறாக தமிழகத்தில் நடப்பு ஆண்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதற்கான சாத்தியங்கள் இல்லை என தமிழக அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கூறியிருக்கிறார் என்றால், தமிழக மாணவர்களின் நிலைமை பற்றி தமிழக அரசு கவலையே படவில்லை.


பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்கள் ஆகியும் மாணவர்கள் என்ன பாடப்புத்தகங்களை படிக்க உள்ளோம் என்பதே தெரியாத நிலையில் அதிமுக அரசு நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், தான் பிடித்த முயலுக்கு மூன்றேகால என பிடிவாதம் பிடித்துக்கொண்டிருக்கிறது.


அதனால்தான் 29ஆம் தேதி தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் உள்ள மாணவச் செல்வங்கள் வகுப்பினை புறக்கணித்து, எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும் என்று திமுக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

மாணவர்கள் நினைத்தால், எதிலும் வெற்றிதான் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த அறப்போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அமைதி வழி, அறவழி, அதுவே அண்ணா வழி என்று கலைஞர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment