சமச்சீர் கல்வி வழக்கில் தமிழக அரசின் மேல் முறையீடு வருத்தம் அளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
இந்திய சமூக நீதி இயக்க தின விழா 19.07.2011 அன்று சென்னை கீழ்ப்பாக்கம் இறைவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்,
கடந்த தி.மு.க. ஆட்சியிலே, தலைவர் கலைஞர் உருவாக்கி கொண்டு ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாத சமச்சீர் கல்வியை தொடர முயற்சி எடுத்த போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தினால், சமச்சீர் கல்விக்கு தடை ஏற்பட்டது. இப்போது நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
தி.மு.க. ஆட்சியில் இது போன்று நடந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்பதை நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும். ஆட்சியை விட்டு இறங்கு, பதவியை ராஜினாமா செய்யுங்கள் என்று கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பார்கள் இல்லையா?
ஆனால் அதைப்போல் நாம் செய்யாமல் நம்முடைய தலைவர் என்ன சொன்னார். யாருக்கு வெற்றி, தோல்வி என்று கருதாமல் திட்டத்தை நிறைவேற்றுங்கள் என்று தான் கூறுகிறார். இப்போது ஆட்சியாளர்களின் கூட்டணியில் இருப்பவர்கள் கூட இதை தானே வலியுறுத்துகிறார்கள். இந்த நிலையில் சமச்சீர் கல்வி வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது வேதனையளிக்கிறது.
இது போன்று காலம் கடத்துவது ஏழை மாணவர்கள், பணக்கார மாணவர்களின் கல்வியை கற்க கூடாது என்பதற்காகவா? அதனால் தான் கல்வியே வேண்டாம் என்று ஆடு, மாடுகளை வழங்கி அவர்களை மேய்க்க சொல்கிறார்களோ?
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
No comments:
Post a Comment