கோவை சிங்காநல்லூர் அண்ணா வளாகத்தில் (விஜயா டிரேட் பேர் காம்ப்ளக்ஸ்) 24.07.2011 அன்று காலை 10 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் 1,950 பேர், மத்திய அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளர்கள் 200 பேர் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக பொதுக்குழுவில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இறுதி செய்வதற்காக 23.07.2011 அன்று மாலை 4 மணிக்கு கட்சியின் செயற்குழு கூட்டம் நடக்கிறது. செயற்குழுவில் உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் 200 பேர் பங்கேற்கிறார்கள். அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் சிங்காநல்லூர் அண்ணா வளாகம் அலங்கரிக்கப்படும் பணி இரவு பகலாக நடந்து வருகிறது. முகப்பு அலங்காரம், நுழைவு வாயில் அலங்காரம் பனை ஓலையில் வண்ணங்கள் தீட்டி கோட்டை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
பொதுக்குழு கூட்ட அரங்கு குளிர்சாதன வசதியுடன் தயாராகிறது. தலைவர்கள் அமர 25 அடி அகலம், 30 அடி நீளத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு உணவு வழங்க வசதியாக 10 ஆயிரம் சதுர அடியில் தனியாக உணவு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி 22.07.2011 அன்று இரவு சேரன் எக்ஸ்பிரசில் சென்னையில் இருந்து புறப்படுகிறார். 23.07.2011 அன்று காலை 5.30 மணிக்கு கோவை வரும் அவருக்கு, வடகோவை ரயில் நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது.
செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் பங்கேற்க தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் 22.07.2011 அன்று காலை விமானம் மூலம் கோவை வந்தார்.
கோவை விமான நிலையத்தில் அவருக்கு தி.மு.க.வினர் ஏராளமானோர் கூடியிருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் ராமநாதன், கண்ணப்பன், ஈரோடு முத்துசாமி, மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன், மாவட்ட செயலாளர்கள் பொங்கலூர் பழனிச்சாமி(கோவை), ராஜா(ஈரோடு), சாமிநாதன்(திருப்பூர்), ராமச்சந்திரன்(நீலகிரி), கிருஷ்ணகிரி எம்பி சுகவனம், முன்னாள் எம்.பி சுப்பையன், முன்னாள் எம்எல்ஏ நடராஜன், ஈரோடு சச்சிதானந்தன், பொள்ளாச்சி சந்திரசேகர், திருப்பூர் மேயர் செல்வராஜ், ஈரோடு மேயர் குமார் முருகேசன், பொள்ளாச்சி உமாபதி, மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார், மாநகராட்சி துணை மேயர் கார்த்திக், மண்டல தலைவர்கள் சாமி(கிழக்கு), செல்வராஜ்(மேற்கு), பைந்தமிழ்பாரி(தெற்கு), திமுக மாவட்ட பொருளாளர் நாச்சிமுத்து, மாநகர பொருளாளர் நாச்சிமுத்து, மாநகர இளைஞரணி அமைப்பாளர் முருகவேல், மாநகராட்சி கவுன்சிலர்கள் நந்தகுமார், கார்த்திக் செல்வராஜ், மீனா லோகநாதன், ஜானகி நாகராஜ், எல்பிஎப் பொது செயலாளர் பார்த்தசாரதி, துடியலூர் ஒன்றிய செயலாளர் சுப்ரமணியம், ஈரோடு காஞ்சி குமார், தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் வடவள்ளி துரைசாமி, அறிவரசு, கோவை சுரேஷ், குறிச்சி நகராட்சி தலைவர் பிரபாகரன், ஜெயக்குமார் உட்பட ஏராளமானபேர் வரவேற்றனர்.
No comments:
Post a Comment