கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, July 23, 2011

கோவையில் கருணாநிதிக்கு உற்சாக வரவேற்புதிமுக செயற்குழு கூட்டம் கோவையில் 23.07.2011 அன்று மாலை நடக்கிறது. இதைத் தொடர்ந்து நாளை காலை பொதுக்குழு கூடுகிறது. இதில் பங்கேற்பதற்காக 23.07.2011 அன்று காலை கோவை வந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சட்டசபை தேர்தலுக்கு பிறகு திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கோவை திருச்சி ரோட்டில் உள்ள அண்ணா அரங்கத்தில் (விஜயலட்சுமி டிரேடுபேர் காம்ப்ளக்ஸ்) 23.07.2011 அன்று & 24.07.2011 அன்றும் நடக்கிறது. கட்சி அமைப்புகளில் மாற்றம் கொண்டு வருவது, திமுகவினர் மீது அதிமுக அரசு போட்டு வரும் பொய் வழக்குகளை சந்திப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
கட்சியின் செயற்குழு கூட்டம், 23.07.2011 அன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. பொதுக்குழுவில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள், நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் செயற்குழுவில் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து 23.07.2011 அன்று காலை 10 மணிக்கு பொதுக்குழு கூட்டம் தொடங்குகிறது. கூட்ட ஏற்பாடுகளை கவனிப்பதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 22.07.2011 அன்று கோவைக்கு வந்துவிட்டார்.
செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக திமுக தலைவர் கருணாநிதி, 22.07.2011 அன்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் 23.07.2011 அன்று காலை 5.52 மணிக்கு கோவை வந்தார். வடகோவை ரயில் நிலையத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் செண்டை மேளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்தனர். கருணாநிதியுடன் ராஜாத்தி அம்மாள், முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோரும் வந்தனர்.
ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் மு.கண்ணப்பன், மு.ராமநாதன், ஈரோடு முத்துசாமி, மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் மற்றும் மாவட்ட, ஒன்றிய செயலாளர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் அதிகாலையிலேயே ரயில் நிலையத்தில் திரண்டிருந்து கருணாநிதியை வரவேற்றனர்.
வடகோவை ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் இருந்து டாடாபாத் மின் நிலையம் வரை சாலையில் இரு புறமும் கருப்பு சிவப்பு சீருடை அணிந்த தொண்டர்கள் கட்சி கொடிகளுடன் திரண்டு செண்டை வாத்தியம் முழங்க வரவேற்பு கொடுத்தனர். வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பாலு, மு.கண்ணப்பன், பொங்கலூர் பழனிச்சாமி, ஈரோடு முத்துசாமி, ராஜா, வெள்ளகோயில் சாமிநாதன், ராமச்சந்திரன், திருச்சி செல்வராஜ், முன்னாள் அரசு கொறடா முபாரக், முன்னாள் எம்பிக்கள் ராமநாதன், சுப்பையன், ஈரோடு கந்தசாமி, திருப்பூர் மேயர் செல்வராஜ், ஈரோடு மேயர் குமார் முருகேஷ், கோவை துணை மேயர் கார்த்திக், கூடலூர் எம்எல்ஏ திராவிடமணி, முன்னாள் எம்எல்ஏக்கள் பொன்முடி, பொள்ளாச்சி ராஜூ, காட்டம்பட்டி கந்தசாமி, சவுந்திரபாண்டியன், கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் அவைத்தலைவர் சவுந்திரராஜன், பொருளாளர் நாச்சிமுத்து, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார், தொண்டாமுத்தூர் ஒன்றிய செயலாளர் வடவள்ளி துரைசாமி மாநகர இளைஞரணி அமைப்பாளர் முருகவேல், மாநகராட்சி மண்டல தலைவர்கள் பைந்தமிழ் பாரி, சாமி, செல்வராஜ், கவுன்சிலர்கள் கார்த்திக் செல்வராஜ், மீனாலோகநாதன், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் கோட்டை அப்பாஸ், அறிவரசு, வீரபாண்டி பேரூராட்சி துணைத்தலைவர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ஆணைகட்டி துரைசாமி, 1வது பகுதி திமுக இளைஞரணி அமைப்பாளர் திராவிடமணி, சிங்காரவேலு, முருகானந்தம் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

பின்னர் அவிநாசி ரோட்டில் உள்ள ரெசிடென்சி ஓட்டலுக்கு சென்ற கருணாநிதி, அங்கு ஓய்வு எடுத்தார். 23.07.2011 அன்று மாலை கருணாநிதி தலைமையில் செயற்குழு கூட்டம் நடக்கிறது. இதில் பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் உள்பட கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 200 பேர் பங்கேற்கின்றனர். முன்னதாக 23.07.2011 அன்று காலை கோவை உள்பட 4 மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் ஆலந்தூர் பாரதி தலைமையில் அண்ணா அரங்கத்தில் நடந்தது.
செயற்குழுவில் பங்கேற்க உள்ள முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் நேற்று இரவே கோவை வந்துவிட்டனர். நாளை நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கவும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கட்சியினர் குவிந்து வருகின்றனர். இவர்கள் தங்குவதற்கு தனியே மண்டபங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கோவையில் 18 ஆண்டுக்கு பிறகு கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடக்கிறது. இதனால் நகரின் பல்வேறு இடங்களிலும் கட்சி கொடிகள், தோரணங்களை கட்டியுள்ளனர். தலைவர்களை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

அன்பழகனுக்கு வரவேற்பு
கோவையில் நடக்கும் திமுக பொதுக்குழுவில் பங்கேற்பதற்காக கட்சி பொது செயலாளர் அன்பழகன் 23.07.2011 அன்று காலை நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கோவை வந்தார். ரயில் நிலையத்தில் திமுக மாவட்ட செயலாளர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமையில் கட்சி முன்னணி நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர்

No comments:

Post a Comment