கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, July 22, 2011

ஸி1 கோடி நிலம் அபகரிப்பு அமைச்சர் கைதாவாரா? : அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது அதிமுக மாவட்ட பிரதிநிதி புகார்



தமிழக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நிலமோசடி செய்ததாக, அதிமுக மாவட்ட பிரதிநிதி ஒருவர், திருவண்ணாமலை எஸ்.பி.யிடம் 20.07.2011 அன்று பரபரப்பு புகார் அளித்தார்.
வழக்கு பதியாமலேயே போலீஸ் விசாரணை செய்ய ஆரம்பித்துள்ளது. இந்த புகாரின் பேரில் அமைச்சர் கைதாவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சி மன்ற துணை தலைவர் சி.மூர்த்தி(39). அதிமுக மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். இவர், திருவண்ணாமலை எஸ்.பி. சாமுண்டீஸ்வரியிடம் 20.07.2011 அன்று தமிழக வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மீது கொலை மிரட்டல் மற்றும் நில மோசடி புகார் அளித்தார்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் வேங்கிக்கால் ஊராட்சி மன்ற துணைத் தலைவராகவும், அதிமுக மாவட்ட பிரதிநிதியாகவும் உள்ளேன். வேங்கிக்கால் கோட்டாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பரசுராமன், வேங்கிக்கால் புதூர் அன்பழகன் ஆகியோருடன் சேர்ந்து, கலசபாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் 1.86 ஹெக்டேர் விவசாய நிலத்தை இனாம்காரியந்தல் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம் இருந்து கிரையம் வாங்கினோம்.
அந்த இடம், கலைமகள் சபாவுக்கு சொந்தமாக இருந்தது. பின்னர், முறைப்படி ஏலத்தில் எடுத்து வெங்கடேசன் பெயரில் பதிவு செய்திருந்த கிரைய சொத்தாகும். எனவே,
ஸி11.40 லட்சத்துக்கு கிரையம் பேசி கடந்த 13.2.2008 அன்று கலசபாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு நடந்தது.
பின்னர், குடும்ப கடன் பிரச்னை காரணமாக, அந்த இடத்தை திருவண்ணாமலை கடம்பராயன் தெருவை சேர்ந்த ராஜேந்திரகுமார் என்பவரிடம் ஸி10 லட்சத்துக்கு விக்கிரய ஒப்பந்தம் செய்துகொண்டோம். மேலும், தி.மலை&வேலூர் நெடுஞ்சாலையில் 2 தனியார் கல்லூரிகளுக்கு அருகில் நிலம் இருந்ததால், அதனை மனைப்பிரிவுகளாக்கி, பாரதி நகர் எனும் பெயரில் வீட்டுமனைகளை விற்பனை செய்ய தொடங்கினோம்.
மனைப்பிரிவுக்கு எதிரே, அப்போதைய கலசபாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வும், தற்போதைய வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சராகவும் உள்ள அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்திக்கு சொந்தமான அரவிந்தர் கல்லூரி உள்ளது. எங்களுடைய மனைகளை வாங்குவதற்காக, எங்களை அழைத்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி மிரட்டினார். பணம் தருகிறேன், என் பெயருக்கு மாற்றி எழுதிக்கொடுத்துவிடுங்கள் என்று பயமுறுத்தினார். அதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அவர், வேங்கிக்கால் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.கே.குமாரசாமியை அழைத்து, நிலத்தை வாங்கிக்கொடுத்தால் உனக்கு ஒன்றிய செயலாளர் பதவி வாங்கித்தருகிறேன் என தெரிவித்துள்ளார். அதற்கு ஒப்புக்கொண்ட குமாரசாமி, ஒன்றிய செயலாளர் பதவி கிடைக்கப்போகிறது, எனவே, இடத்தை கொடுத்துவிடுங்கள் என்று எங்களிடம் கேட்டார். பரசுராமன், அன்பழகன் ஆகியோர் அதற்கு கட்டுப்பட்டு அக்ரிமெண்டில் கையெழுத்திட்டனர். ஆனால், நான் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, என்னை மிரட்டி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு வரவழைத்து, சென்ட் ஒன்றுக்கு
^22,500 வீதம் மொத்தம் ^ஒரு கோடியே 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு கிரையம் பேசி, முன்பணமாக ^50,000 கொடுத்தார். மீதித்தொகையை பத்திரப்பதிவு செய்யும்போது செட்டில் செய்வதாக உறுதி அளித்தார்.
பலமுறை அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் மீதி தொகையை கேட்டேன். அதற்கு, நான் எப்போது கொடுக்கிறேனோ அப்போது வாங்கிக்கொள் என்றும், எம்.எல்.ஏ., தொகுதி நிதியில் இருந்து வேலை தருவதாகவும், அதில் பணம் கிடைக்கும் என்றும் கூறி அலைக்கழித்தார். அவமானமாக பேசினார்.
எனவே, நீங்கள் கொ டுத்த முன்பணத்தை தந்துவிடுகிறேன், நிலத்தை தாருங்கள் என்றேன். அப்போது, அடியாட்களை வைத்து மிரட்டி, நீ என்னை பகைத்துக்கொண்டு வாழ்ந்துவிடுவாயா, உன்னை கொலை செய்வேன் என்றும் எச்சரிக்கை செய்தார். இது தொ டர்பான புகாரை போலீசார் ஏற்க மறுத்துவிட்டனர். அதனால், குடும்பத்துடன் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வீட்டு முன்பு தீக்குளிக்க முடிவு செய்தேன்.
அந்த தகவலை தெரிந்துகொண்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கடந்த 8.8.2009 அன்று, ராஜேந்திரகுமாரிடம் நாங்கள் பெற்றிருந்த ^10 லட்சத்தை செட்டில் செய்துவிட்டு, நாங்கள் போட்டிருந்த விக்கிரய ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டார். அதன்பிறகு, அடியாட்களை வைத்து மிரட்டி, என்னை அவரது கல்லூரிக்கு கடத்திச்சென்று, அவரது கல்லூரியிலேயே சார்பதிவாளரை வரவழைத்து, அவரது மகன் கே.அருள்நேசன் பெயரில் நிலத்தை மிரட்டி எழுதி வாங்கிக்கொண்டார். முதல்வரின் உத்தரவுபடி, நில மோசடி, தொடர்பான புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் தனிப்பிரிவினர், எனது புகாரையும் பதிவு செய்து, உரிய விசாரணை நடத்த வேண்டும். எனக்கு சேர வேண்டிய நிலத்தை மீட்டுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

புகார் மனுவை பெற்றுக்கொண்ட எஸ்.பி. சாமுண்டீஸ்வரி, இதுகுறித்து விசாரணை நடத்த குற்றப்பிரிவு மற்றும் நிலமோசடி வழக்குகளை விசாரிக்கும் தனிப்பிரிவு டிஎஸ்பி சிவானந்தம், இன்ஸ்பெக்டர் வெள்ளையன் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சமீப காலமாக புகாரை பெற்றுக்கொண்டு கைது செய்வது வழக்கமாகிவருகிறது. கோர்ட்டில் வாதம் நடக்கும் போது, �ஆவணங்களை சேகரித்து வருகிறோம்� என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது.
இந்த வகையில் 19.07.2011 அன்று மதுரையில் சில திமுக பிரமுகர்களை போலீஸ் கைது செய்துள்ளது. நில மோசடி புகாரில் அமைச்சர் சிக்கியிருப்பது இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. �புகாரின் பேரில் விசாரித்து அவரை கைது செய்ய மேலிட பதிலை எதிர்பார்த்துக்கொ ண்டிருக்கிறோம்� என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment