கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, July 31, 2011

திருவாரூர் அருகே ரோட்டில் வழிமறித்து மு.க.ஸ்டாலின் கைது





திருவாரூர் அருகே திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை நடுவழியில் வழிமறித்து போலீசார் கைது செய்தனர். போலீசாரின் அடக்குமுறையை கண்டித்து மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 5,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 30.07.2011 அன்று காலை திருவாரூர் மாவட்ட எல்லையான கோவில்வெண்ணிக்கு வந்தார். அங்கு மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் ஏராளமான திமுகவினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் கொரடாச்சேரி அருகேயுள்ள கிளரியம் கிராமத்தில் பஸ் விபத்தில் பலியான பள்ளி மாணவன் விஜய் வீட்டுக்கு சென்ற மு.க.ஸ்டாலின், மாணவனின் தந்தை சேகருக்கு ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து திருவாரூர் நகர்மன்ற உறுப்பினர் வி.ஆர்.என்.பன்னீர்செல்வத்தின் தந்தை வாழாச்சேரி நடராஜன் மரணமடைந்ததை அடுத்து கொரடாச்சேரி அடுத்த வாழாச்சேரியில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்ற மு.க.ஸ்டாலின், பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். முன்னாள் எம்பி தாழை.கருணாநிதி நினைவு நாள் என்பதால் கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகேயுள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு அவர் சென்றுகொண்டிருந்தார். அப்போது, ஆலத்தம்பாடி அருகே திருவாரூர் டிஎஸ்பி சீனிவாசன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் நடுரோட்டில் நின்று மு.க.ஸ்டாலின் சென்ற வாகனத்தை வழிமறித்து தடுத்து நிறுத்தினர். உங்கள் வாகனத்தில் உள்ள திமுக திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணனை கைது செய்ய வேண்டும், அவரை எங்களோடு அனுப்புங்கள் என்று டிஎஸ்பி கூறினார்.
அதற்கு ஸ்டாலின், வாரன்ட் இருந்தால் அழைத்து போங்கள் என்றார். அதற்குள் போலீசார் வாகனங்களை சாலையின் குறுக்கும், நெடுக்குமாக நிறுத்தி ஸ்டாலின் வாகனம் மேற்கொண்டு செல்லவிடாமல் தடுத்தனர். இதனால் காரைவிட்டு கீழே இறங்கி வந்த மு.க.ஸ்டாலின், நாங்கள் என்ன தீவிரவாதிகளா, இப்படி சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்தி கைது செய்வதற்கு� என்று போலீசாரிடம் கேட்டார்.
அப்போது, டிஎஸ்பி சீனிவாசன் செல்போனில் உயர் அதிகாரிகளிடம் பேசினார். பின்பு பூண்டி கலைவாணனை கைது செய்கிறோம் என்றார். உரிய ஆவணங்கள் இன்றி கைது செய்ய விடமாட்டோம் எனக்கூறிய மு.க.ஸ்டாலின், திருத்துறைப்பூண்டி&திருவாரூர் சாலை ஆலத்தம்பாடியில் நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். அவருடன் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், பூண்டி கலைவாணன், நாகை மாவட்ட செயலாளரும், எம்பியுமான விஜயன், முன்னாள் அமைச்சர் மதிவாணன் ஆகியோரும் அவருடன் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை திருவாரூர் அழைத்து சென்றனர். இதையறிந்த ஏராளமான திமுக தொண்டர்கள் புலிவலத்தில் சாலையில் திரண்டனர். இது பற்றி தகவலறிந்த போலீசார் புலிவலம் வழியாக செல்லாமல் வெள்ளக்குடி கிராம சாலை வழியாக திருவாரூர் செல்ல முயன்றனர். அவ்வழியாக செல்லக்கூடாது என வாகனம் முன் திரண்டு திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதைதொடர்ந்து புலிவலம் வழியாகவே போலீஸ் வாகனம் திருவாரூர் சென்றது. வெள்ளக்குடி, புலிவலம் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் மத்தியில் ஸ்டாலின் வாகனம் திருவாரூர் வந்தது.

எதற்கும் அஞ்சப்போவதில்லை: மு.க.ஸ்டாலின்


தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டியில்,


இன்று (30.07.2011) காலை தஞ்சாவூரில் இருந்து கிளம்பி திருத்துறைப்பூண்டிக்கு போய்க்கொண்டிருந்தேன். போய்க்கொண்டிருந்த வழியில் நேற்று கொறடாச்சேரியில் பேருந்து விபத்தில் இறந்துபோன மாணவன் இல்லத்துக்கு நானும், விஜயன் எம்பி, மத்திய அமைச்சர் பழணி மாணிக்கம், சுகவனம் எம்பி, திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் கலைவாணன் ஆகியோர் சென்று துக்கம் விசாரித்து ஆறுதல் சொல்லிவிட்டு, காரில் புறப்பட்டோம்.

திருத்துறைப்பூண்டியில் ஒரு படத்திறப்பு விழா இருந்தது. மன்னார்குடியில் பொதுக்குழு விளக்க பொதுக்கூட்டமும், நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டமும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் வந்திருந்தேன். திருவாரூரை தாண்டி ஆலத்தம்பட்டியில் போய்க்கொண்டிருந்தபோது சுமார் 200 போலீசார் எங்கள் வண்டியை வழிமறித்தார்கள். வண்டியை நிறுத்தி என்ன என்று கேட்டோம். பூண்டி கலைவாணனை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிக்கிட்டு போகனும். விசாரணைக்காக என்று சொன்னார்கள். என்ன ரிக்கார்டு இருக்கா. வாரண்ட் இருக்கா. இருந்த அழைத்துக்கொண்டு போங்க. இல்லையென்றால் எப்படி அனுப்ப முடியும். சாலையில் வண்டியை மறித்து சொல்லும்போது எப்படி நம்ப முடியும். எதுவாக இருந்தாலும் ஆதாரப்பூர்வமாக காட்டி அழைத்துச் செல்லுங்கள் என்று சொன்னோம்.


அதன்பிறகு வண்டி போக வழிவிடவில்லை. போலீசார் சாலை மறியல் செய்தனர். ஆனால் நாங்கள் மறியல் செய்ததாக கைது செய்திருக்கிறார்கள். உண்மையில் 15 வாகனங்களை நிறுத்தி அவர்கள் மறியல் செய்தனர். பின்னர் அவர்கள் எங்கெங்கோ போன் செய்தார்கள். பிறகு சாலை மறியல் செய்ததற்காக கைது செய்கிறோம் என்று எங்களை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றார்கள்.

வரும் 1ஆம் தேதி திமுக சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களில் அறப்போராட்டம் நடக்க இருக்கிறது. இந்த போராட்டத்தை நடக்க விடக்கூடாது என்ற எண்ணத்திலும் திமுகவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திமுகவை பயமுறுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். திமுகவைப் பொறுத்தவரை பனங்காட்டு நரி. எவ்வளவோ வழக்குகளை பார்த்து இருக்கிறோம். இதற்கெல்லாம் அஞ்சப்போவதில்லை.


இதுதொடர்பாக மக்கள் மன்றத்தில் அதிமுக அரசு பதில் சொல்லியாக வேண்டும். நாங்கள் நீதிமன்றத்தை நாடப் போகிறோம். மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் பதில் சொல்ல வேண்டிய கடமை அவர்களுக்கு உள்ளது. அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து தலைமைக் கழகம், தலைவர், பொதுச்செயலளர் முடிவு எடுத்து அறிவிப்பார்கள்.


ஆகஸ்ட் 1ஆம் தேதி போராட்டத்தை நசுக்க வேண்டும் என்ற காரணத்துக்காக இன்று காலை தென் சென்னை மாவட்டச் செயலாளர் அன்பழகனை கைது செய்துள்ளனர். அதைப்போல முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் காவல்நிலையத்துக்கு கையெழுத்துப் போட போகும்போது கைது செய்துள்ளனர். இப்படியெல்லாம் மிரட்டி போராட்டத்தை நசுக்க பார்க்கிறார்கள் என்றார்.



திருவாரூர் எஸ்பி அலுவலகம் வந்ததும் ஸ்டாலின் வந்த வாகனம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் எஸ்பி அலுவலகம் செல்லாமல், வாகனம் வேறு இடத்துக்கு சென்றது. திருவாரூர் அடுத்த வைப்பூருக்கு ஸ்டாலினை கொண்டு செல்வதாக கூறப்பட்டது. ஆனால் அங்கும் கொண்டு செல்லவில்லை. திருவாரூர் வர்த்தக சங்க கட்டிடத்துக்கு போலீஸ் வாகனம் சென்றது. கட்டிடத்துக்குள் மு.க.ஸ்டாலினை போலீசார் வைத்திருந்தனர்.
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் திமுகவினர் பஸ் மறியலில் ஈடுபட்டனர். அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது.�போலீசாரின் அடக்குமுறையை கண்டித்து மாவட்டம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட 5,000 திமுகவினர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மதியம் 2.15க்கு ஸ்டாலின், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கம், எம்பி விஜயன், முன்னாள் அமைச்சர் மதிவாணன் ஆகியோர் மட்டும் விடுதலை செய்யப்பட்டனர்.
டெல்டாவில் ஆயிரக்கணக்கானோர் கைது:
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை அடுத்து நாகை மாவட்டத்தில் 28 இடங்களில் நடைபெற்ற சாலை மறியலில் 1,900 திமுகவினர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் 27 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 1,027 பேர் கைது செய்யப்பட்டனர். கரூர் மாவட்டத்தில் 300 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 333 பேரும் கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment