நில மோசடி புகார் தொடர்பாக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் 25.07.2011 அன்று போலீஸ் முன் ஆஜரானார்.
சேலம் புதிய பஸ் நிலைய பகுதியில் உள்ள அங்கம்மாள் காலனி நிலம், 5 ரோடு பிரீமியர் மில் நிலப்பிரச்னைகள் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், காங்கிரஸ் பிரமுகர் எம்.ஏ.டி.கிருஷ்ணசாமி, அதிமுக பிரமுகர்கள் சித்தானந்தம், கனகராஜ், இன்ஸ்பெக்டர் லட்சுமணன் உட்பட 20 பேர் மீது நில அபகரிப்பு மீட்பு குழு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் வீரபாண்டி ஆறுமுகம் முன்ஜாமீன் பெற்றார். உத்தரவில் நீதிபதி, வழக்கு விசாரணைக்காக 25ம் தேதி காலை 10 மணிக்கு சேலம் குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக வேண்டும். 27ம் தேதி மாலை 5 மணிக்குள் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும்.
ஸீ25 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கு இரு நபர் ஜாமீனும் அளித்து வெளியே வரலாம் என உத்தரவிட்டார். 25.07.2011 அன்று காலை 9.57 மணிக்கு வீரபாண்டி ஆறுமுகம், சேலம் குற்றப்பிரிவு நில அபகரிப்பு மீட்பு குழு போலீஸ் முன் ஆஜரானார். அவரிடம் உதவி கமிஷனர் பிச்சை, இன்ஸ்பெக்டர்கள் சங்கரேஸ்வரன், சீனிவாசன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, திமுக தொண்டர்கள் மணிவண்ணன், கலீல் அகமது ஆகியோர் தீக்குளிக்க முயன்றனர். அவர்களை தடுத்து, போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து துணை கமிஷனர் பாஸ்கரன் கூறுகையில், “முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறார்” என்றார். 3 நாட்களும் வீட்டுக்கு அனுப்பாமல் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரணை நடத்தப்படுமா? அல்லது அவரை இரவு தங்குவதற்கு வீட்டுக்கு அனுப்புவீர்களா? என்ற கேள்விக்கு, வீட்டுக்கு அனுப்ப வாய்ப்பு இல்லை� என்றார்.
ஆயிரம் ஜெயலலிதா வந்தாலும் ஒன்றும் செய்து விட முடியாது - திமுக எம்பி ராமலிங்கம் :
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்யசபா எம்.பி., ராமலிங்கம்,
ஆயிரம் ஜெயலலிதா வந்தாலும் ஒன்றும் செய்து விட முடியாது - திமுக எம்பி ராமலிங்கம் :
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்யசபா எம்.பி., ராமலிங்கம்,
தி.மு.க.,வை அழித்து ஒடுக்கி விடலாம் என்ற எண்ணத்தில், அரசு செயல்பட்டு வருகிறது. ஆட்சிக்கு வந்துள்ள ஜெயலலிதா, தி.மு.க.,வை, அழிக்கும் எண்ணத்துடன் செயல்பட்டு வருவது நிச்சயம் நடக்காது.
சேலம் வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்யும் நோக்கில் போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். வழக்கை சந்திக்க தயார். குற்றச்சாட்டில் கொஞ்சம் கூட உண்மையில்லை. தூண்டுதலின் பெயரில் வேண்டும் என்றே வழக்கு போடப்பட்டுள்ளது. பொய்யான குற்றச்சாட்டுகளால், தி.மு.க.,வையும், அதன் தலைவர்களையும் அடக்கி அழித்து விட முடியாது. தி.மு.க., பொதுக்குழுவிலும் தலைவர் கருணாநிதி இதைத் தான் தெரிவித்துள்ளார்.
தி.மு.க.,வையும், அதன் தலைவர்களையும் அழித்து விட ஒரு ஜெயலலிதா அல்ல ஆயிரம் ஜெயலலிதா வந்தாலும் ஒன்றும் செய்து விட முடியாது என்றார்.
No comments:
Post a Comment