கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, July 8, 2011

சமச்சீர் கல்விக்கு எதிரான அறிக்கை கொளுத்தப்பட்டது: ஏராளமானோர் கைது: தி.க. மாணவரணி ஆர்ப்பாட்டம்


சமச்சீர் கல்விக்கு எதிரான தமிழ்நாடு அரசின் போக்கினைக் கண்டித்து திராவிடர் கழக மாணவரணி சார்பில், அண்ணா சாலையிலுள்ள பெரியார் சிலையருகே, திராவிடர் கழக மாநில மாணவரணி துணை செயலாளர் மு. சென்னியப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில இளைஞரணி துணை செயலாளர் செ. தமிழ்சாக்ரடீசு, சென்னை மண்டல மாணவரணி அமைப்பாளர் பா. மணியம்மை ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சமச்சீர் கல்விக்கு எதிராக கல்வி வியாபாரிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை தீயிட்டு கொளுத்தப்பட்டது. தமிழர் வரலாற்றையும், திருவள்ளுவர், பெரியார், அண்ணா, டி.எம். நாயர், தியாகராயர் போன்ற தலைவர்களின் பற்றிய பாடங்களை மறைத்தும், கிழித்தும் பாடத் திட்டத்தை சீரழித்துள்ள மனுதர்ம போக்கினைக் கண்டித்து சென்னை மாவட்டத்திலுள்ள திராவிடர் கழக மாணவரணியினர் திரளாகக் கலந்துகொண்டு முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சமச்சீர் நிபுணர் குழு அறிக்கை எரிப்பு: சென்னை ஐகோர்ட் முன் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது

சமச்சீர் கல்வி தொடர்பாக அதிமுக அரசு அமைத்த நிபுணர் குழுவின் அறிக்கையின் நகல் சென்னை உயர்நீதிமன்றம் முன் எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.


சமச்சீர் கல்வி திட்டத்தை இந்த ஆண்டு தொடர்ந்து நடைமுறைபடுத்த வலியுறுத்தி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் மக்கள் கலை இலக்கியம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


அப்போது சமச்சீர் கல்வி தொடர்பாக தமிழக அரசு நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை நகலை எரித்து, தமிழக அரசுக்கு எதிரான தங்களது ஆதங்கத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளிப்படுத்தினர்.


திமுக மீது உள்ள காழ்ப்புணர்ச்சியால் சமச்சீர் கல்வி திட்டத்தை வேண்டுமென்றே நிறுத்தி வைத்த அதிமுக அரசுக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

திருவள்ளுவர் மீது ஜெயலலிதாவுக்கு என்ன கோபம்? - நாஞ்சில் சம்பத் பேச்சு :

திமுக தலைவர் கலைஞரால் கொண்டுவரப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக சமச்சீர் கல்வி திட்டத்தை அதிமுக அரசு ரத்து செய்ய முயற்சி எடுத்து வருவதாக மதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.


இதுகுறித்து மேலும் பேசிய அவர்,

பாடப்புத்தகத்தின் பின்னால் வள்ளுவர் படம் இருக்கிறது. வள்ளுவர் படத்தை பச்சை அட்டை வைத்து ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். பாவம், பி.ஏ., பி.எட்., படித்தவர்கள் அனைவரும் ஒட்டுகிறார்கள். வள்ளுவர் என்ன திமுக
பொதுச்செயலாளரா? வள்ளுவர் மீது உங்களுக்கு (ஜெயலலிதா) என்ன கோபம். அவர் அப்படி எதுவும் உங்களுக்கு எதிராக சொல்லவில்லையே.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்னது தப்பா. அவர் என்ன சொன்னால் ஏன் வள்ளுவர் மீது ஆத்திரம். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்காமல், உயர்நீதிமன்றத்தையே நீங்கள் அவமதிக்கின்றீர்களா. நீங்கள் செய்தது இமாலய மடத்தனம். நீங்கள் சமச்சீர் கல்விக்கு சமாதி கட்டி விடுவோம் என்று கருதாதீர்கள். சமூக நீதிக்கு சமாதி கட்டுவதற்கு நீங்கள் முயற்சிக்கிறீர்கள் என்றார்.



No comments:

Post a Comment