முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை 28.07.2011 அன்று நேரில் சந்தித்து, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி உடல் நலம் விசாரித்தார்.
நில மோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், சேலம் குற்றப்பிரிவு நில அபகரிப்பு மீட்பு குழுவில் ஆஜரானார். அவரிடம் 3 நாட்கள் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் 27.07.2011 அன்று மாலை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
திமுக தென் மண்டல அமைப்பு செயலாளரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி 28.07.2011 அன்று காலை சேலம் வந்தார். பூலாவரியில் உள்ள வீரபாண்டி ஆறுமுகத்தின் வீட்டுக்கு சென்று நேரில் பார்த்து நலம் விசாரித்தார். போலீஸ் விசாரணை குறித்தும், விசாரணையின் போது நடத்தப்பட்ட விதம் குறித்தும் கேட்டறிந்தார்.
அழகிரியுடன் மதுரை புறநகர் மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி, மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னன் ஆகியோரும் வந்திருந்தனர்.
பின்னர் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி நிருபர்களிடம் கூறுகையில், ‘‘முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் கையில் அடிபட்டு காயம் ஏற்பட்டிருப்பதை அறிந்தேன். அவரை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக வந்தேன்’’ என்றார்.
அப்போது நிருபர்கள், ‘திமுகவினர் மீது தொடர்ந்து வழக்கு போடப்படுகிறதே?’ என கேட்டனர். இதற்கு அழகிரி, ‘‘ஏற்கனவே பொதுக்குழுவில் பேசப்பட்டுள்ளது. அங்கு எடுக்கப்பட்டுள்ள முடிவின்படி கட்சியின் நடவடிக்கை இருக்கும்’’ என்றார்.
இது குறித்து வீரபாண்டி ஆறுமுகம் நிருபர்களிடம் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் என் மீதும், வீரபாண்டி முன்னாள் எம்எல்ஏ ராஜா மீதும் போடப்பட்டிருக்கும் வழக்குகள் பொய்யானவை. ஆட்சியாளர்களின் தூண்டுதலின்பேரில் தமிழகம் முழுவதும் முன்னாள் அமைச்சர்கள், முன்னணி தலைவர்கள் மற்றும் கட்சியினர் மீது அதிமுக ஆட்சியாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக போலீசார் இதுபோல் பொய் வழக்குகளை போடுகின்றனர்.
நிலத்தை ஒருவர் விற்க, ஒருவர் வாங்குவது என்பது நடைமுறை தான். விற்கும் போது இருந்ததை விட ஆண்டுக்கு ஆண்டு அந்த நிலத்தின் மதிப்பும் கூடும். இதை வைத்துக் கொண்டு இன்னார் முன்னிலையில் நிலம் விற்பவரை மிரட்டி குறைந்த விலைக்கு விற்க கட்டாயப்படுத்தியதாக அதிமுகவினர் தூண்டி விட்டு கிரிமினல் செக்ஷனில் பொய் வழக்கு போட வைக்கின்றனர்.
நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தான் போட முடியும். ஆனால் ஜெயலலிதா ஆட்சியில், திமுகவை பயமுறுத்தி விடலாம், செயல்பட முடியாமல் செய்து விடலாம் என நினைத்து சிவில் வழக்குகளை கிரிமினல் வழக்காக மாற்றி பொய் வழக்கு போடுகின்றனர். இதை திமுக கடுமையாக கண்டிக்கிறது. இது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல. இந்த ஆட்சியின் அடக்குமுறையை எதிர்க்கும் ஆற்றலும், சக்தியும் திமுகவிற்கு உண்டு.
மூன்று நாட்கள் போலீஸ் விசாரணையில் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு தெரிந்ததை கூறி னேன். தெரியாததற்கு தெரி யாது என்று பதிலளித்தேன். போலீசாரும் தங்கள் கடமையை செய்த னர். அதிமுகவை ஆதரிக்கும் சில ஊடகங்கள் பொய் பிரசாரம் செய்கின்றன. இது நாகரீகமானதல்ல. விசாரணை முடிந்து வெளியில் வந்ததும் என் உடல்நிலை குறித்து திமுக தலைவர் கருணாநிதி பாசத்துடன் கேட்டார். வேறு வழக்கு எதுவும் போட்டுள்ளார்களா? என்பதையும் விசாரித்தார். அதேபோல் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம் மற்றும் கழக தோழர்கள் என் உடல்நிலை குறித்து விசாரித்தனர். திமுகவினர் மீது போடப்படும் பொய் வழக்குகளை சந்திப்பது குறித்து பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்படி சந்திப்போம். என்மீது சிலர் தேவையில்லாமல் அவதூறு பரப்பி களங்கப்படுத்த நினைக்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். திமுக தொண்டர்கள் என் இரண்டு கண்களைப் போன்றவர்கள். மற்றவர்கள் பொய் பிரசாரம் செய்வது போல் தொண்டர்களால் எந்த கெட்ட பெயரும் இல்லை. என் கீழ் உள்ள தொண்டர்களை நான் அப்படி வளர்க்கவில்லை. என்னைப் பற்றி இந்த மாவட்ட மக்கள் நன்கு அறிவார்கள்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார். 27.07.2011 அன்று காலை முதல் ஏராளமான தொண்டர்கள் நேரில் வந்து அவரிடம் நலம் விசாரித்து சென்றனர்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார். 27.07.2011 அன்று காலை முதல் ஏராளமான தொண்டர்கள் நேரில் வந்து அவரிடம் நலம் விசாரித்து சென்றனர்.
முன்னதாக நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ள வீரபாண்டி ஆறுமுகம், 28.07.2011 அன்று காவல்நிலையத்தில் முதல் நாள் ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன் மீது போடப்பட்டுள்ளவை பொய் வழக்குகள் என்றும், அவற்றை முறைப்படி சந்திப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், பொய் வழக்குகளால் திமுகவை யாரும் அழித்துவிட முடியாது என்றார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் திமுகவினரை கைது செய்வதை காவல்துறை நிறுத்த வேண்டும் - வீரபாண்டி ஆறுமுகம் கண்டனம் :
ஆட்சியாளர்களின் தூண்டுதலின் பேரில் முன்னெச்சரிக்கை என்ற பெயரில் தி.மு.கவினரையும், தோழமை கட்சி நண்பர்களையும் கைது செய்யும் காவல்துறைக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக ஆட்சியாளர்களின் தூண்டுதலின் பேரில் என் மீது பொய் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் உயர் நீதிமன்றத்தால் எனக்கு வழங்கப்பட்டது.
அதிமுக ஆட்சியாளர்களின் தூண்டுதலின் பேரில் என் மீது பொய் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் உயர் நீதிமன்றத்தால் எனக்கு வழங்கப்பட்டது.
உயர் நீதிமன்றம், நான் திமுக தலைமை செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் 23, 24ம் தேதிகளில் கலந்து கொள்ளலாம் என்றும், 25, 26, 27 ஆகிய தேதிகளில் சேலம் மத்திய குற்றவியல் காவல் துறையிடம் சரணடைந்து விசாரணைக்கு என்னை ஒப்படைத்து கொள்ள வேண்டும் என்று வழங்கிய தீர்ப்பை ஏற்று, நான் நேரடியாக காவல் நிலையம் சென்று தொடர்ந்து 3 நாட்களுக்கு முழு ஓத்துழைப்பு தந்திருக்கிறேன்.
காவல்துறை விசாரணை முடித்து 27ம் தேதி மாலை என்னை காவல்துறை வாகனத்தில் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற போது, 10 ஆயிரத்தும் மேற்பட்ட கழக தோழர்களும், மக்களும் கூடியிருந்தனர். அப்போது அங்கு எவ்விதமான வன்முறையிலும் கழக தோழர்களோ, தோழமை கட்சி நண்பர்களோ அல்லது மக்களோ ஈடுபடவில்லை.
என் மீது போடப்பட்ட பொய் வழக்கை கண்டித்து உணர்ச்சி வசப்பட்ட கழக தோழர்களும், மக்களும் கூடியிருந்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல் 27ம் தேதி இரவிலும், நேற்றும் பல்வேறு காவல்நிலையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரால் நூற்றுக்கணக்கானவர்கள் மீது வழக்குபதிவு செய்து கைது செய்து வருகிறார்கள். இந்த பழிவாங்கும் போக்கை ஆட்சியாளர்களின் தூண்டுதலின் பேரில் காவல்துறையினர், கழக தோழர்களை கைது செய்வதை உடனே நிறுத்த வேண்டும். நிறுத்தாவிட்டால், நானே தலைமை ஏற்று இந்த ஆட்சியின் அராஜகத்தை பொது மக்களின் கவனத்துக்கு கொண்டு வர வீதிகளில் நின்று போராட்டத்தில் ஈடுபடுவேன் என்பதை காவல்துறைக்கு தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு மாவட்ட திமுக செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment