கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, July 22, 2011

பொய் வழக்குகள் போடுவதை நிறுத்த வேண்டும் : உள்துறை செயலாளரிடம் திமுக வக்கீல்கள் மனு


திமுக தொண்டர்கள், முன்னணி தலைவர்கள் மீது போலீஸ் அதிகாரிகள் பொய் வழக்கு பதிவு செய்வதை நிறுத்த வேண்டும் என்று உள்துறை செயலாளரிடம் திமுக வக்கீல்கள் 21.07.2011 அன்று மனு கொடுத்தனர்.
திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி, தீர்மான குழு செயலாளர் பொன் முத்துராமலிங்கம், வக்கீல்கள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அசன் முகமது ஜின்னா, கிரிராஜன், இ.பரந்தாமன், எஸ்.ரவிச்சந்திரன், எம்.தண்டபாணி, அருண், தேவராஜ் ஆகியோர் கோட்டையில் 21.07.2011 அன்று உள்துறை செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ராவை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று கொண்டதிலிருந்து, திமுக தொண்டர்கள் மீதும், முன்னணி தலைவர்கள் மீதும், சொத்து அபகரிப்பு போன்ற பொய் குற்றச்சாட்டுக்களை கூறி, தமிழ்நாடு முழுவதும் கைது செய்து சிறையில் அடைக்கப்படும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய தகுதி உள்ள வழக்குகள் தானா என்று கூட விசாரிக்காமல், அதற்கான ஆதாரங்கள் உள்ளனவா என்றும் ஆராயாமல் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தொண்டர்களும், முன்னணி தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இத்தகைய நடவடிக்கைகள் சட்டத்திற்கும், இயற்கை நியாயத்திற்கும் புறம்பானதாகவே கருதுகிறோம்.
தமிழக அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த அதிமுக மாவட்ட பிரதிநிதி சி.மூர்த்தி நில அபகரிப்பு புகார் கொடுத்துள்ளார்.எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. எனவே, தமிழக அரசின் தலைமை செயலாளர் தமிழகம் முழுமையும் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு, பொய் வழக்குகள் திமுகவினர் மீது பதிவு செய்வதை நிறுத்திட வேண்டுமென ஆணை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment