கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Friday, July 22, 2011

கோவை பொதுக்குழுவில் என்ன மாதிரி விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளது? கலைஞர் பதில்


தி.மு.க. தலைவர் கலைஞர் 21.07.2011 அன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:


கேள்வி: சமச்சீர் கல்வித் திட்டம் பற்றி உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு தடை கொடுக்க மறுத்ததோடு ஆகஸ்ட் மாதம் 2 ந் தேதிக்குள் சமச்சீர் கல்விப் பாடத் திட்டப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறதே?

பதில்: அந்த வழக்கினை 26 ந் தேதி இறுதியாக விசாரிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். அப்போது சமச்சீர் கல்விக்குச் சாதகமாக நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறேன். அப்படி வருகின்ற தீர்ப்புக்கு வரவேற்பும் வாழ்த்தும் கூற வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது.


கேள்வி: ஆகஸ்ட் 2 ந் தேதிக்குள் சமச்சீர் கல்விப் பாடத் திட்டப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டதே?


பதில்: மகிழ்ச்சி.

கேள்வி: அ.தி.மு.க. அரசு பொய் வழக்குகள் போடுவதை எதிர்த்து தி.மு.க. சார்பில் ஆகஸ்ட் 1 ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருக்கிறீர்களே?


பதில்: நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். யார் தவறு செய்திருக்கிறார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம், வேண்டுமென்றே, கட்சியைப் பலவீனப்படுத்தவும், கழக தோழர்களைப் பயமுறுத்தவும், பொது மக்களிடையே பீதியை உண்டாக்கவும் முயற்சி செய்யாதீர்கள் என்று நான் தொடக்கத்திலேயே சொல்லியிருக்கிறேன். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். குறிப்பாக இதில் கட்சி வித்தியாசம் பார்க்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறேன். ஆனால்
அதிமுக மந்திரி அக்ரி கிருஷ்ணமுர்த்தி மீது மோசடி வழக்கு கோரி அவர்கள் கட்சி நிர்வாகிகளே புகார் கூறியிருக்கிறார்கள். அ.தி.மு.க.வினர் மீதே குற்றச்சாட்டுகள் இருக்கும் போதே அவர்களுக்கெல்லாம் பாலாபிஷேகம்'' செய்துவிட்டு தி.மு.க.வினரை மாத்திரம் பயமுறுத்துவது என்ன நியாயம்?

கேள்வி: கோவை பொதுக்குழுவில் என்ன மாதிரி விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளது?


பதில்: இதுபோன்ற விஷயங்களும் விவாதிக்கப்படும். இதையெல்லாம் எப்படி தி.மு.க. சந்திப்பது என்பது பற்றி விவாதிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.


கேள்வி: தி.மு.க. ஆட்சியில் தியாகராய நகர் போன்ற பகுதிகளில் பல கட்டிடங்களுக்கு விதிகளை மீறி சி.எம்.டி.ஏ. அனுமதி கொடுத்திருப்பதாகவும், அதனால் அவைகளையெல்லாம் இடிக்கப் போவதாகவும் சொல்கிறார்களே?


பதில்: அப்படி ஏதாவது நடைபெற்றிருந்தால், அவைகளைச் சட்டப்படி சுட்டிக்காட்டினால் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

கேள்வி: நித்யானந்தா அந்தரத்தில் பறக்க வைப்பதாக கூறியது பற்றி என்ன கருதுகிறீர்கள்?

பதில்: எந்த சாமியாரின் லீலைகளையும் அற்புதங்களையும் பகுத்தறிவு ஏற்றுக் கொள்வதில்லை.

No comments:

Post a Comment