கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, July 31, 2011

காகித ஆலையை அபகரித்ததாக புகார் : திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கைது



பேப்பர் மில்லை அபகரித்ததாக தெரிவிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை சேப்பாக்கம் & திருவல்லிக்கேனி திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனை திருப்பூர் போலீசார் 30.07.2011 அன்று அதிகாலை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் ஒருவர் கோவையில் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலையைசேர்ந்தவர் சீனிவாசன் (39). ஸ்பின்னிங் மில் நடத்தி வந்தார். கடந்த 2008ம் ஆண்டு கோவையை சேர்ந்த கிங்ஸ்லி என்பவரிடம் இருந்து கருமத்தம்பட்டி அருகே உள்ள காடுவெட்டிபாளையத்தில் உள்ள ஜியான் பேப்பர் மில்ஸ் எனும் மில்லை வாங்கினார். முதலில் க்ஷீ 2 கோடியை முன்தொகையாக வழங்கிய சீனிவாசன், தொடர்ந்து க்ஷீ 2 கோடி, க்ஷீ 2.69 கோடியை வழங்கினார். ஏற்கனவே மில்லின் மீது இருந்த கடனை, விற்பனை தொகையில் கழித்துள்ளார். மீதம் க்ஷீ 1.91 கோடி மட்டும் வழங்க வேண்டியிருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், சென்னையை சேர்ந்த ஐயப்பன், தென்சென்னை தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன், சன் பிக்சர்ஸ் நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மற்றும் இடைத்தரகர் சுப்புரத்தினம் ஆகியோர் உதவியுடன் தன் வசம் இருந்த பேப்பர் மில்லை மீண்டும் கிங்ஸ்லி, அவரது மனைவி ஜமிலா கிங்ஸ்லி, சகோதரர் ரவி சாம்ராஜ், அவரது மனைவி மர்ஜினா சாம்ராஜ் ஆகியோர், அபகரித்து கொண்டதாக ஸ்ரீனிவாசன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு மையத்தில் புகார் அளித்தார்.
தான் வழக்கு ஒன்றில் சிக்கியுள்ளதை அறிந்து, தன் பலவீனத்தை பயன்படுத்தி, சென்னையில் உள்ள ஜெ.அன்பழகன் அலுவலகத்துக்கு தன்னை அழைத்து, மிரட்டி பேப்பர் மில்லை எழுதி பெற்றதாகவும், க்ஷீ 12.50 கோடி மதிப்பிலான பேப்பர் மில்லை, க்ஷீ 4.50 கோடிக்கு விற்பதாக தன்னிடம் வலுக்கட்டாயமாக கையெழுத்து பெற்றதாகவும், அந்த தொகையையும் தன்னிடம் வழங்கவில்லை என்றும் சினிவாசன் புகாரில் தெரிவித்திருந்தார்.
புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் உட்பட 8 பேர் மீது திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், 29.07.2011 அன்று திருப்பூரில் இருந்து சென்னை சென்ற மாவட்ட குற்றப்பதிவேடுகள் ஆவண காப்பக டி.எஸ்.பி. கவுதமன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படையினர், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தென்சென்னை தி.மு.க. செயலாளரும், சேப்பக்கம்&திருவல்லிக்கேனி எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகனை 30.07.2011 அன்று அதிகாலை சென்னை, தியாகராயநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.
தூக்கத்தில் இருந்த அவர், நான் எம்எல்ஏ, எங்கும் ஓட மாட்டேன், வாரண்ட் இருக்கிறதா சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் போலீசாரோ, வராவிட்டால் இழுத்துச் செல்வோம் என்றவுடன் அவர்களுடன் அன்பழகன் புறப்பட்டுச் சென்றார். அதைத் தொடர்ந்து சென்னையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் 30.07.2011 அன்று மதியம் அன்பழகன், திருப்பூர் அழைத்து வரப்பட்டார். திருப்பூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு மையத்துக்கு அழைத்து வரப்பட்ட அவரிடம், சுமார் 30 நிமிடங்கள் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அங்கு அவருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
பின்னர் திருப்பூரில் இருந்து உடுமலை அழைத்து செல்லப்பட்ட அவர், உடுமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கோவையைச் சேர்ந்த கிங்ஸ்லி (42) என்பவரை போலீசார் 30.07.2011 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஐயப்பன், ஹன்ஸ்ராஜ் சக்சேனா ஆகிய இருவரும் வேறு வழக்கில் கைதாகி சிறையில் உள்ளனர்.

என்னென்ன பிரிவுகளில் வழக்கு?
சீனிவாசன் அளித்த புகாரின் பேரில், க்ஷீ 12.50 கோடி மதிப்பிலான பேப்பர் மில்லை அபகரித்ததாக, கோவையைச் சேர்ந்த கிங்ஸ்லி, அவரது மனைவி ஜமிலா கிங்ஸ்லி, சகோதரர் ரவி சாம்ராஜ், அவரது மனைவி மர்ஜினா சாம்ராஜ், சென்னையைச் சேர்ந்த ஐயப்பன், இடைத்தரகர் சுப்புரத்தினம், சன் பிக்சர்ஸ் நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா மற்றும் தென்சென்னை தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான ஜெ.அன்பழகன் ஆகிய 8 பேர் மீது, இந்திய தண்டனை சட்டம் பிரிவு 342 (சட்டவிரோதமாக சிறை வைத்தல்), 418 (ஆவணங்கள் மூலம் ஏமாற்றுதல்), 420 (மோசடி), 468 (ஏமாற்றுவதற்கு பொய்யாக புணைதல்), 471 (பொய்யான ஆவணத்தை உண்மையென பயன்படுத்துதல்), 387 (மரணம் கொடுங்காயம் விளையும் என அச்சுறுத்துதல்), 506(1) (குற்றமுறு மிரட்டல்) 120 (பி) (கூட்டுச்சதி) ஆகிய 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் அடிப்படையில் சக்சேனா மீது வழக்கு :
பேப்பர் மில் மிரட்டி அபகரித்ததாக தொடரப்பட்ட இந்த வழக்கில், சன் பிக்சர்ஸ் ஹன்ஸ்ராஜ் சக்சேனா சம்பவத்தின் போது, அங்கு இருக்கவில்லை. சந்தேகத்தின் அடிப்படையில் அவர் பெயர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் கூறுகையில், “சீனிவாசனை மிரட்டி கையெழுத்து பெற்றதாக கூறப்படும் நேரத்தில், ஹன்ஸ்ராஜ் சக்சேனா இல்லை. வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஐயப்பன், சக்ஷேனாவின் ஆதரவாளர் என்பதால், அவர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டுச்சதி பிரிவில் சக்சேனா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தென்சென்னை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடந்ததால், எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார்,“ என்றார்.
யார் இந்த சீனிவாசன்? - க்ஷீ 250 கோடி மோசடியில் ஏற்கனவே சிறை சென்றவர் :
எம்எல்ஏ அன்பழகன் கைதாக காரணமாக இருந்த, சீனிவாசன் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர், ஏற்கனவே கோவை, உடுமலை உட்பட பல்வேறு இடங்களில் நலிவடைந்த மில்களை வாங்கி, போலி ஆவணங்கள் மூலம் க்ஷீ 250 கோடிக்கு மேல் மோசடியில் ஈடுபட்டு கடந்த 2009 ஆகஸ்டில் கைதாகி ஜாமீனில் வெளியில் வந்தார்.
நலிவடைந்த மில்கள், வேறு நிறுவனங்களை சீனிவாசன் கண்டறிந்து கடன் பிரச்னையை தீர்த்து, புனரமைப்புக்கு நிதி வசதி செய்து கொடுப்பதாக கூறி அவற்றை தனது பெயருக்கு எழுதி வாங்கிக்கொள்வார். இதற்கு உடுமலையை சேர்ந்த வெங்கடாசலபதி, செல்வக்குமார் உள்ளிட்ட 6 பேர் உடந்தையாக இருந்துள்ளனர். தங்கள் பெயருக்கு நிறுவனங்களை வாங்கிக் கொண்டு விற்பனை செய்பவர்கள் பெயரிலேயே மீண்டும் போலி ஆவணங்களை தயாரித்து, அதிகாரிகள் உதவியுடன் கடன் வாங்கியுள்ளனர். மோசடி மூலம் கிடைத்த பணத்தில் சினிமா தயாரிப்பு, கொடைக்கானல், பெங்களூரில் குதிரை பண்ணை வாங்க பணத்தை பயன்படுத்தியுள்ளார்.
20க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து க்ஷீ 250 கோடி மோசடியில் சீனிவாசனும் அவரது கூட்டாளிகளும் ஈடுபட்ட வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment