கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, July 26, 2011

ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற கம்பெனிகளின் பங்குகள் மாறியது பிரதமர், நிதியமைச்சருக்கு தெரியும் :கோர்ட்டில் ஆ. ராசா வாதம்


ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற கம்பெனிகளின் பங்குகள் வெளிநாட்டு கம்பெனிகளுக்கு மாறியது பற்றி பிரதமர் மன்மோகனுக்கும், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்துக்கும் தெரியும் என்று சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ராசாவின் வக்கீல் கூறினார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் ஒதுக்கீடு செய்தது தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. வழக்கில், முன்னாள் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா உள்பட பலர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்பாக வழக்கு விசாரணை நடக்கிறது.
வழக்கில் கைதானவர்கள் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கு சி.பி.ஐ. தரப்பில் வாதாடப்பட்டது. இதை எதிர்த்து ராசாவின் சார்பில் சீனியர் வக்கீல் சுசில்குமார் 25.07.2011 அன்று வாதாடினார். அவர் வாதாடியதாவது:
ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்ற யுனிடெக், ஸ்வான் நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு விற்றன. யுனிடெக் பங்குகள் டெலிநாருக் கும், ஸ்வான் பங்குகள் எடிசாலட் நிறுவனத்துக்கும் விற்கப்பட்டன. இதன் மூலம், குறைந்த விலைக்கு ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெற்று, அதிக விலைக்கு விற்று ஊழல் நடந்துள்ளதாக சி.பி.ஐ. தெரிவிக்கிறது.
ஆனால், இந்த பங்குகள் பரிமாற்றம் குறித்து பிரதமர் மன்மோகன், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரம் ஆகியோருக்கு தெரியும். �கம்பெனிகள் சட்டப்படி, பங்குகள் கைமாறியதை லைசென்சை விற்றதாக கருத முடியாது� என்று பிரதமர் முன்னிலையில் சிதம்பரம் கூறினார். இதை பிரதமர் மறுப்பாரா?
எனவே, பங்குகள் கைமாறியதை, லைசென்சை விற்றதாக கூற முடியாது என்றால், ஊழல் என்பதே வராது.
மேலும், கடந்த 1993ம் ஆண்டில் (நரசிம்மராவ் ஆட்சி) இருந்து ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் என்ன கொள்கை பின்பற்றப்பட்டதோ, அதையே நானும் பின்பற்றினேன். அது தவறு என்றால், 1993 முதல் பதவி வகித்த தொலை தொடர்பு துறை அமைச்சர்கள் செய்ததும் தவறு. அதே போன்று, 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை ஏலத்தில் விட வேண்டாம் என்று 2003ம் ஆண்டில் மத்திய அமைச்சரவை எடுத்த முடிவைத்தான் நான் பின்பற்றினேன்.
சட்டப்படி செயல்பட்ட என்னை ஏன் தண்டிக்க வேண்டும்?
இவ்வாறு ராசாவின் வக்கீல் வாதாடினார்.

No comments:

Post a Comment