புதுச்சேரி சட்டப்பேரவை கட்டிடத்தில் உள்ள திமுக அலுவலகம் இடிக்கப்பட்டதற்கு காரைக்கால் தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ நாஜிம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காரைக்காலில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரி சட்டப்பேரவை கட்டிடத்தில் எதிர்க்கட்சி தலைவர் அறைக்கு அருகில் திமுக எம்எல்ஏக்களுக்கான அலுவலகத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த அறையில் திமுக தலைவரின் படம், திமுக எம்எல்ஏக்களின் உடமைகள் உள்ளது.
இந்நிலையில் திமுக எம்எல்ஏக்களுக்கு தகவல் தெரிவிக்காமல் அறையின் சுவரை யாரோ சாமியார் சொன்னார் என்பதற்காக இடித்து, ஹோமம் நடத்தி உள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆளும் அரசின் அராஜக போக்கையே இச்சம்பவம் காட்டுகிறது. திமுக அலுவலகத்தை இடித்ததற்கு புதுச்சேரி அரசு வருத்தம் தெரிவிப்பதுடன், 24 மணி நேரத்தில் மாற்று இடம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்பேரவை வளாகத்தில் மரத்தடியில் திமுக அலுவலகம் அமைத்து போராடு வோம்.
தேர்தலுக்கு முன் சேர்க்கப்பட்ட 120 அரசு ஊழியர்களையும், பாப்ஸ்கோ நிறுவனத்தில் 480 ஊழியர்களையும் புதிய அரசு திடீரென பணி நீக்கம் செய்துள்ளது. அவர்களுக்கு உடனே பணி உத்தரவு வழங்க வேண்டும். இல்லாவிட்டால், காரைக்காலுக்கு முதல்வர் உள்ளிட்ட எந்த அமைச்சர் வந்தாலும், அவர்கள் பங்கேற்கும் அரசு விழாக்களில் பங்கேற்காமல் திமுகவினர் புறக்கணிப்போம்.
இவ்வாறு எம்எல்ஏ நாஜிம் கூறினார்.
இவ்வாறு எம்எல்ஏ நாஜிம் கூறினார்.
No comments:
Post a Comment