கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, July 25, 2011

திமுகவுக்கு எந்த அதிருப்தியும் இல்லை காங்கிரஸ் கூட்டணி தொடரும் : கருணாநிதி


காங்கிரஸ் மீது எந்த அதிருப்தியும் இல்லை; திமுக&காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து நீடிக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
கோவையில் திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 2 நாள் நடந்தது. 24.07.2011 அன்று இரவு பொதுக்குழு கூட்டம் முடிந்த பின்னர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
பொதுக்குழுவில் எத்தனை பேர் கலந்து கொண்டனர்?
பொதுக்குழு உறுப்பினர்கள் மொத்தம் 1485 பேர். அவர்களில் வருகை தந்தோர் 1320 பேர். அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மொத்தம் 408 பேருக்கு வருகை தந்தோர் 400 பேர். சிறப்பு அழைப்பாளர்கள் 348 பேருக்கு வருகை தந்தோர் 330 பேர். மொத்தம் 2241 பேர்களில் வருகை தந்தோர் 2050 பேர்.
பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு என்ன?
25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. படிக்க தெரிந்தவர்கள் படித்தே தெரிந்து கொள்வார்கள். புரிய தெரிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.
மத்தியில் காங்கிரஸ் அமைச்சரவையில் திமுகவுக்கு இரண்டு அமைச்சர் இடம் காலியாக உள்ளதே. அந்த இடத்திற்கு யாரை நியமிக்கப்போகிறீர்கள்?
மத்திய அமைச்சரவையில் 2 பேர் சேருவது பற்றி மூத்த மத்திய அமைச்சர்கள் என்னிடம் பேசினார்கள், அது பற்றி நானும், பேராசிரியரும், மற்றும் கழகத்தின் நிர்வாகிகளும், பாராளுமன்ற கழக குழு நிர்வாகிகளும், கலந்து பேசி எடுத்த முடிவைத்தான் இன்றைக்கு பொதுக்குழு இறுதியில் நான் அறிவித்து இருக்கிறேன். அதாவது "ஸ்டேட்டஸ் கோ வில் கன்ட்டினி௯'' என்று சொல்லி இருக்கிறேன். அதாவது இரண்டு மந்திரி பதவிகள் தி.மு.க.விடம் இருந்து போனது போனது தான். அவர்களுக்கு பதிலாக யாரை? நியமனம் செய்ய வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. ஏற்கனவே ராஜா இல்லை. தற்போது தயாநிதிமாறனும் விலகி விட்டார். அந்த 2 இடங்களும் தி.மு.க.வை பொறுத்தவரை வெற்றிடங்களாக இருக்கும். அவற்றை நிரப்ப தி.மு.க. முனையாது. ஆனாலும் அந்த இரண்டு இடங்களும் தி.மு.க. சார்பில் நிரப்பப்படாவிட்டாலும் கூட தி.மு.க. தொடர்ந்து காங்கிரஸ் அணியில் இருக்கும். அதைத் தான் ஆங்கிலத்தில் இங்கே "ஸ்டேட்டஸ் கோ வில் மெயின்டெய்ன்''என்று சொன்னேன்.
தயாநிதிமாறன், ராசாவுக்கு பதில் வேறு யார்?
அந்த இரண்டு இடமும் வெற்றிடமாக தான் இருக்கும். அதை நிரப்ப திமுக முனையாது.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக தொடர்ந்து நீடிக்குமா, இல்லையா என்ற குழப்பம் நிலவுகிறதே?
பதில்: கட்சியின் மீது எங்களுக்கு அதிருப்தி இல்லை. ஆனால் இங்கே சில பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எங்கள் மீது இருக்கிற அதிருப்தியை நாங்கள் எண்ணிப் பார்க்கிறோம். அதாவது சில காங்கிரஸ்காரர்கள் இங்கே கூட்டங்களில் பேசுகிறார்கள். அவர்கள் வெளிப்படுத்துகிற அதிருப்தியைதான் பொதுக்குழுவிலே உறுப்பினர்கள் எல்லாம் எடுத்து சொன்னார்கள். அதன் காரணமாகத்தான் எந்த மாற்றத்தையும், இப்போது நாங்கள் செய்யாமல், மத்திய அமைச்சர் பதவியை ஏற்காமல், புதிய அமைச்சர்களாக யாரையும் நியமிக்காமல், ஏற்கனவே இருக்கிற அமைச்சர்கள் அப்படியே நீடிப்பார்கள் என்பதைத்தான் நான் சொன்னேன்.
கேள்வி: அந்த அமைச்சரவையில் இரண்டு இடத்தையும் திமுகவே நிரப்பவேண்டும் மன்மோகன்சிங் கோரிக்கை விடுத்துள்ளாரே?
பதில்: அவர் டில்லியில் இதை கூறியிருக்கலாம். நாங்கள் ஏற்கனவே எங்கள் பதி லை தெரிவித்து விட்டோம்.
கேள்வி: சிபிஐ ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளீர்களே?
பதில்: ஒட்டு மொத்த சிபிஐயை சொல்லவில்லை. அந்த அமைப்பில் உள்ளவர்கள், பொறுப்பில் உள்ளவர்கள் அப்படி செயல்படுகிறார்கள் என்பதை தான் சுட்டி க்காட்டியுள்ளோம்.
கேள்வி: திமுகவுக்கு புதிய தலைவர் இப்பொதுக்குழுவில் அறிவிக்கப்படும் என பரபரப்பாக பேசப்பட்டதே?
பதில்: ஒவ்வொரு பொது க்குழு கூடும் போதும் மீடியாக்கள் இதை எழுப்புகின்றன.
கேள்வி: அப்படியானால் திமுகவின் எதிர்கால தலைவர் யார்?
(இக்கேள்வி கேட்ட நிருபரிடம் உங்கள் பெயர் என்ன என கேட்டார். அத ற்கு அந்த நிருபர் சேகர் என கூறினார்) இதைத் தொட ர்ந்து கருணாநிதி அளித்த பதில்: சேகர் என்ற நண்பரை தான் எதிர்கால தலைவராக ஆக்குகிறேன் (சிரிப்பு)
கேள்வி: பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு திமுக உள்கட்சியில் ஏதேனும் மாற்றம் நிகழுமா?
பதில்: இல்லை
கேள்வி: மத்திய அமைச்சர் அழகிரி பொதுக்குழுவில் இருந்து வெளிநடப்பு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளதே?
பதில்: நேற்றும் கலந்து கொண்டார். இன்றும் கல ந்து கொண்டார். இன்றும் கலந்து கொண்ட பிறகு தான் புறப்பட்டு சென்றார். அதற்கு பெயர் பாய்காட் இல்லை.
கேள்வி: திமுக தோல்விக்கு காரணம் திமுக தான், காங்கிரஸ் தான், பாமக தான் என மாறி மாறி பேசுகிறார்களே?
பதில்: யாரும் காரணமல்ல. நானே தான் காரணம்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.

காலை பொதுக்குழு கூட்டம் காலை 10.25க்கு துவங்கியது. கூட்டத்தை துவக்கி வைத்து கருணாநிதி பேசினார். அதை தொடர் ந்து 11 மணிக்கு தீர்மானங்களை அமைப்பு செய லாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் வாசித்தார். 12.15 மணி வரை தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் ராமநாதன் பேசினார். அவர் பேசி முடித்ததும் உணவு இடைவேளை விடப்பட்டது.
மீண்டும் 4.30 மணிக்கு பொதுக்குழு கூடியது. தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் பேசினர். பின்னர் சேலம் முன்னாள் நகராட்சி தலைவர் சூடாமணி, அதைத் தொடர்ந்து எம்.பி வசந்தி ஸ்டான்லி ஆகியோர் பேசினர். பின்னர் பொருளாளர் ஸ்டாலின், பொது செயலாளர் அன்பழகன் ஆகியோர் பேசினர். இறுதியில் 7.10க்கு கருணாநிதி பேசினார். 7.45க்கு பொதுக்குழு கூட்டம் முடிந்தது. காலையில் 2.45 மணி நேரமும், மதியத்திற்கு பின்னர் 3.30 மணி நேரமும் நடந்தது.


கூட்டத்தின் நிறைவில் தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது:


கூட்டத்தில் பங்கேற்றுள்ள அனைத்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் நன்றி. இக்கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. தி.மு.க.,வினர் மீது அ.தி.மு.க., அரசு கைது நடவடிக்கை எடுத்து வருகிறது. தி.மு.க., மீது கை வைத்தால் என்னவாகும்...? இதை நான் வன்முறையாக சொல்லவில்லை.மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் மீது கைது நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு, ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவது நல்லது; இதை நான் அறிவுரையாகத்தான் சொல்கிறேன்.


காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க., விலக வேண்டும் என சில பத்திரிகைகள் விரும்புகின்றன; அதற்கேற்ப அவை செயல்பட்டு வருகின்றன. காங்கிரசுடனான கூட்டணி தொடரும். காங்கிரஸ் கூட்டணிக்கு சில காங்கிரசாரே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.நாங்கள் கூட்டணியை தேடி அலைபவர்கள் அல்ல. தி.மு.க., வலிமையான கட்சி; தன்னைத்தானே நிலை நிறுத்திக்கொள்ளும் பலம் உண்டு.


காங்கிரசுடன் உறவு தொடரும். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., தோல்வியடைந்தாலும், தி.மு.க.,வுக்குள்ள ஓட்டு வங்கி குறையவில்லை. மக்களின் ஆதரவை பெற்றுள்ளது. எனவே, தி.மு.க.,வினர் மீது தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் கைது நடவடிக்கை சரியல்ல.


இவ்வாறு தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆவேசத்துடன் பேசினார்.



No comments:

Post a Comment