கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, July 20, 2011

கோவையில் திமுக பொதுக்குழு : ஏற்பாடு தீவிரம்


திமுக செயற்குழு, பொது க்குழு கூட்டம், கோவை சிங்காநல்லூர் உழவர்சந்தை அருகே உள்ள அண்ணா வளாகத்தில் 23, 24ம் தேதிகளில் நடக்கிறது.

இப்பணிகளை ஆய்வு செய்ய திமுக அமைப்பு செயலரும், எம்பியுமான டி.கே.எஸ்.இளங்கோவன், அமைப்பு செயலர் கல்யாண சுந்தரம், தலைமை நிலைய செயலர் ஜெயக்குமார் 19.07.2011 அன்று கோவை வந்தனர்.

பொதுக்குழு நடக்கும் வளாகத்தை பார்வையிட்டனர். அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம்,

’’20,000 ஆயிரம் சதுரடி பரப்பளவில் உள்ள அரங்கில் கூட்டம் நடை பெற உள்ளது. 23ம் தேதி மாலை செயற்குழுவும், 24ம் தேதி காலை 10 மணிக்கு பொதுக்குழுவும் நடக்கிறது. மொத்தம் 2200 பேர் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 30 அடி நீளம், 25 அடி அகலம் கொண்ட பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. அரங்கம் முழுவதும் குளு, குளு வசதி செய்யப்பட்டுள்ளது.

அரங்குக்கு அருகில் சுமார் 10,000 சதுரடி பரப்பளவில் டைனிங் ஹால் அமைக்கப்பட்டுள்ளது. 24ம் தேதி மதியம் கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் உணவு வழங்கப்படும். வெளியூரில் இரு ந்து வருபவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

பல ஓட்டல்களில் 300 அறைகள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்ளும் தொண்டர்கள் தங்குவதற்கு திருச்சி சாலையில் ரங்கா மகால், எஸ்என்ஆர் மகால், வரதராஜபுரம் மாநகராட்சி கல்யாண மண்டபம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செயற்குழு, பொதுக் குழு நடப்பதான அனை த்து பணிகளும் வரும் வெள்ளிக்கிழமைக்குள் முடிந்துவிடும். இதில், பங்கேற்க திமுக தலைவர் கருணாநிதி 23ம் தேதி காலை சேரன் எக்ஸ்பிரஸ் மூலம் கோவை வருகிறார். கூட்டத்தில் கட்சியில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் குறித்து செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களிடையே கருத்து கேட்கப்படும். கட்சி வளர்ச்சி தொடர்பாக கருத்து பரிமாற்றம் செய்யப்படும்’’என்று கூறினர்.

No comments:

Post a Comment