கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, July 13, 2011

திமுகவுக்காக 2 இடங்கள் காலியாகவுள்ளது: பிரதமர்


மத்திய அமைச்சரவையில் திமுகவுக்காக 2 இடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளித்துள்ளார்.

மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை 12.07.2011 அன்று மாற்றியமைக்கப்பட்டது. இந்த மாற்றத்தில் திமுகவினர் யாரும் இடம்பெறவில்லை. ஆ.ராசா, தயாநிதி மாறனுக்கு பதில் எவரும் நியமிக்கப்படவில்லை.

புதிய அமைச்சர் பதவியை தாங்கள் கோரவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில், மத்திய அமைச்சரவையில் திமுகவுக்காக 2 இடங்கள் காலியாக வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தங்களது முடிவை விரைவில் அறிவிப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். கூட்டணி தர்மத்தின்படி, திமுகவுக்கு இடம் தர வேண்டியது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த மக்களவைத் தேர்தல் வரை இனி பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றவர், இந்த ஆட்சியில் இதுவே கடைசி மத்திய அமைச்சரவை மாற்றம் என்று கூறியுள்ளார்.

மேலும், மாநில பிரதிநிதித்துவம் மற்றும் தகுதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

பதவியேற்பு...

புதிய மத்திய அமைச்சர்களின் பதவி ஏற்பு விழா 12.07.2011 அன்று மாலை ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. இதில் ஜெயராம் ரமேஷ், தினேஷ் திரிவேதி, பெனிபிரசாத் வர்மா, வி.கிஷோர் சந்திரதேவ் கேபினட் அமைச்சர்களாகவும், ஜெயந்தி நடராஜன், பபன்சிங் கதோவார் ஆகியோர் தனி பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்களாகவும் பதவியேற்றனர்.

திப் பந்தோபாத்யாய, சரண்தாஸ் மகந்த், ஜிதேந்திரசிங், மிலிந்த் தியோரா, ராஜீவ்சுக்லா ஆகியோர் இணையமைச்சர்களாக பதவியேற்றனர்.

இவர்களுக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பதவி பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இவ்விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment