கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Sunday, July 31, 2011

காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த வீரபாண்டி ஆறுமுகம் திடீர் கைது : திமுகவினர் மீது போலீஸ் தடியடி



சேலத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி காவல் நிலையத்தில் கையெழுத்து போட வந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை 30.07.2011 அன்று போலீசார் திடீரென கைது செய்தனர். இதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட திமுக தொண்டர் கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் அங்கம்மாள் காலனி, பிரீமியர் மில் நில பிரச்னை தொடர்பாக முன் னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட 20 பேர் மீது, சேலம் நில அப கரிப்பு மீட்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சென்னை உயர்நீதிமன்ற முன்ஜாமீன் உத்தரவின்படி, சேலம் குற்றப்பிரிவு நில அபகரிப்பு மீட்பு குழு போலீ சில் வீரபாண்டி ஆறுமுகம் ஆஜரானார். அவரிடம் போலீசார் 3 நாட்கள் விசா ரணை நடத்தினர். இதை யடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டவருக்கு ஜாமீன் கிடைத்தது.
மறு உத்தரவு வரும் வரை சேலம் டவுன் குற்றப்பிரிவு போலீசில் தினமும் காலை 8 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று கூறப்பட்டது.
இதன்படி மூன்றாவது நாளான 30.07.2011 அன்று காலை சரியாக 7.48 மணிக்கு, வீரபாண்டி ஆறுமுகம் டவுன் காவல் நிலையத்தில் உள்ள நில அபகரிப்பு மீட்பு குழு அலுவலகத்திற்கு வந்தார். அவரோடு வழக்கறி ஞர் மூர்த்தி, உதவியாளர் சேகர் ஆகியோர் சென்றனர். ஏராளமான திமுக தொண் டர்கள் காவல் நிலையத்திற்கு முன்பு குவிந்திருந்தனர்.
இந்நிலையில் வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்வதாக போலீசார் தெரிவித்தனர். அப்போது அவர், 'என்னை எதற்காக கைது செய்கிறீர் கள் என்று கேட்டார். தாசநாயக்கன் பட்டியை சேர்ந்த பாலமோகன்ராஜ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் உங்களை கைது செய்கிறோம்’ என்று பதில் கூறினர். 'அவர் யார் என்றே எனக்கு தெரியாதே? யார் புகார் கொடுத்தாலும் கைது செய்து விடுவீர்களா? என வீரபாண்டி ஆறுமுகம் கேட்டார். அதற்கு போலீசார் எந்த பதிலும் அளிக்க வில்லை.
இந்நிலையில் 2 நாட்களாக கையெழுத்து போட்ட 10வது நிமிடத்திலேயே திரும்பி விடும் வீரபாண்டி ஆறுமுகம், 30.07.2011 அன்று 8.15 மணியாகியும் காவல் நிலையத்திலிருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த திமுக தொண்டர்கள், போலீசா ருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இதற்கிடையில் வீரபாண்டி ஆறுமுகத்தை போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றதால், அவர் கைது செய்யப்பட்டது உறுதியானது. இதைக்கண்ட தொண்டர்கள் 'நீதிமன்ற உத்தரவுப்படி கையெழுத்து போட வந்தவரை எப்படி கைது செய்யலாம்� என்று கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் போலீஸ் வாகனம் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்ட னர். இதனால் ஆத்திரமடைந்த போலீசார், தொண்டர்கள் மீது தடியடி நடத்தி விரட்டினர். இதனால் காவல் நிலையத் தின் முன்புறச்சாலை போர்க்களம் போலக் காட்சி யளித்தது. உடல்நலம் பாதித்த வீர பாண்டி ஆறுமுகத்தை போலீசார் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல் வார்கள் என்று கூறப்பட்டதால் அங்கும் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். இந்நிலையில் வீரபாண்டி ஆறுமுகத்தை வேனில் ஏற்றிய போலீசார், அய்யந்திருமாளி கையில் உள்ள 4வது மாஜிஸ்திரேட் ஸ்ரீவித்யா வீட் டிற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை ஆஜர் படுத் தினர். மாஜிஸ்திரேட் உத்தர வுப்படி, வீரபாண்டி ஆறுமுகம் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் மீதான புகார் என்ன?
சேலம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சித்தா டாக்டர் பாலமோகன்ராஜ் (54) விஸ்வ இந்து பரிசத்தின் சேலம் மாவட்ட தலைவராக உள்ளார். இவர் வீரபாண்டி ஆறுமுகம் மீது புகார் செய்துள்ளார். புகாரில் அவர் கூறியிருப்பதாவது:
தாசநாயக்கன்பட்டியில் சுபம் மெட்ரிக் பள்ளி அருகே 20,416 சதுர அடி நிலம் உள்ளது. கடந்த 25&3&2007 அன்று பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிகபூபதி ஆகியோர் நிலத்தை தருமாறு கேட்டனர். ஆனால் நான், எனக்கு இருப்பது ஒரே நிலம் தான். இதனை தர மாட்டேன் என மறுத்தேன். இதையடுத்து 27&3&2007 அன்று வீரபாண்டி ஆறுமுகம் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர் முன் நிறுத்தினர். நிலத்தை தர மறுத்ததால் வீரபாண்டி ஆறுமுகம் கோபமாக எழுந்து சென்று விட்டார். அன்று மாலை 3 மணிக்கு என்னை தொடர்பு கொண்டு மாலை 5 மணிக்கு நிலத்தை கிரயம் செய்து கொடுக்க வேண்டும் என கூறினர். மாலையில் கவுசிகபூபதி பெயரில் பவர் எழுதி வாங்கிக்கொண்டனர். ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்திற்கு ரூ.40 லட்சத்தை என்னிடம் கொடுத்தனர். இதுகுறித்து கேட்டபோது கொடுத்ததை வாங்கிக் கொண்டு போய்விடு என மிரட்டினர். இவ்வாறு புகாரில் பாலமோகன்ராஜ் கூறியுள்ளார். இதன்பேரில் வீரபாண்டி ஆறுமுகம், பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிகபூபதி, நாராயணன், பத்திர எழுத்தர் சுந்தரம் மற்றும் 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
5 பிரிவுகளில் வழக்கு
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த பாலமோகன்ராஜ் என்பவர், சுபம் மெட்ரிக் பள்ளி அருகில் உள்ள தனது நிலத்தை அபகரித்துக் கொண்டதாக கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வீரபாண்டி ஆறுமுகம், பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிகபூபதி, நாராயணன், பத்திர எழுத்தர் சுந்தரம் மற்றும் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது 147 (சட்ட விரோதமாக கூடுதல்) 386, 387 (அச்சுறுத்தி பறித்தல்), 447 (அத்துமீறி நுழைதல்) 506(1) (கொலை மிரட்டல் விடுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பஸ் கண்ணாடி உடைப்பு
சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பெரியார் மேம்பாலம், அண்ணா பூங்கா, திருச்சி ரோடு ஆகிய பகுதிகளில் சென்று கொண்டிருந்த 5க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதிகளில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் இது மினி எமர்ஜென்சி காலம் - சேலம் மாநகர திமுக கண்டனம் :
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை கைது செய்த சம்பவம், தமிழகத்தில் தற்போது மினி எமர்ஜென்சி காலம் நடக்கிறது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது என்று சேலம் மாநகர திமுக செயலாளர் தெரிவித்தார்.
சேலத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி டவுன் காவல் நிலையத்திற்கு கையெழுத்து போடச்சென்ற முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சேலம் மாநகர திமுக செயலாளர் கலைய முதன் கூறியதாவது:
திமுக அரசு, திமுக தொண்டர்கள் மீது திட்டமிட்டு வழக்குகள் போட்டு, பழி வாங்கும் போக்கை கடைபிடித்து வருகிறது. இதை கண்டித்து வரும் ஆகஸ்ட் 1ம் தேதி, மாநிலம் முழுவதும் திமுக சார்பில் அறவழியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள் ளோம். சேலம் மாவட்டத் தில் இதை முடக்க வேண் டும் என்பதற்காகவே வீர பாண்டி ஆறுமுகத்தை திட் டமிட்டு கைது செய்துள் ளனர். சேலம் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக 50 ஆண்டுகளுக்கு மேல் உழைத்து வரும் அவரை, கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
இது போன்ற செயல்களால் தொண்டர் களை முடக்க முடியாது. திட்டமிட்டபடி அறவழிப் போராட்டத்தை நடத்துவோம். கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் அதிமுகவினர் எத்தனையோ போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை. அதிமுக ஆட்சியில் மனிதாபிமானம் மறைந்து விட்டது. தமிழகத்தில் தற்போது மினி எமர்ஜென்சி காலம் நடந்து வருகிறது என்பதை வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்ட விதம், உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலை நீடித்தால் தலைமையின் அனுமதி பெற்று சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட தயங்கமாட்டோம்.
இவ்வாறு சேலம் மாநகர திமுக செயலாளர் கலையமுதன் கூறினார்.




No comments:

Post a Comment