மறைந்த நடிகர் ரவிச்சந்திரன் உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். ரவிச்சந்திரனின் மறைவு திரையுலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று அவர் கூறியுள்ளார்.
71 வயதான நடிகர் ரவிச்சந்திரன் உடல்நிலைக் கோளாறு காரணமாக 25.07.2011 அன்று காலமானார். மறைந்த நடிகர் ரவிச்சந்திரன் உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின்,
ரவிச்சந்திரன் கலைஞரிடம் அன்பும், மரியாதையும் கொண்டவர். ரவிச்சந்திரனின் மறைவு திரையுலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று அவர் கூறியுள்ளார். அவரை இழந்து வாடிக்கொண்டிருக்கின்ற அவரது குடும்பத்தினருக்கு கலைஞர் அவர்கள் சார்பிலும், திமுக சார்பிலும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
No comments:
Post a Comment