ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்து விற்றுவிட்டதாக பெண் புகார் கொடுத்தார். அதன் பேரில், சோழவந்தான் தொகுதி அதிமுக எம்எல்ஏ கருப்பையா உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.
மதுரை லட்சுமிபுரம் 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வெள்ளையப்பன். கீழவாசலில் பாத்திரக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி என்ற மீனாம்பாள்(64). இவர்களுக்கு ரவிச்சந்திரன், குணசேகர் உட்பட 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இன்ஜினீயரிங் படித்த ரவிச்சந்திரனுக்கு சென்னையில் வேலை கிடைத்தது. கணவர் இறந்து விட்டதால் மீனாம் பாள், அவரது மற்ற மகன்கள், மகள் ஆகியோர் சென்னை சூளைமேடு பகுதியில் வசித்தனர்.
சொந்த ஊரிலுள்ள நிலத்தை விற்க கடந்த மார்ச் 1ம் தேதி மீனாம்பாள் ஊருக்கு வந்தார். பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்துக்கு வில்லங்கம் போட்டு பார்த்தபோது அந்த நிலம், 2 பங்காக பிரிக்கப்பட்டு, மதுரை கிருஷ்ணாபுரம் காலனி 4வது தெருவை சேர்ந்த கண்ணன், திருமங்கலம் கற்பகநகர் 4வது தெருவை சேர்ந்த ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு விற்கப்பட்டது தெரிந்தது. சோழவந்தான் தொகுதி அதிமுக எம்எல்ஏ கருப்பையா மற்றும் சிலர் கூட்டாக சேர்ந்து வேறு ஒரு நபருக்கு போலியாக பவர் பத்திரம் தயாரித்து, ரூ.50 லட்சம் மதிப்புள்ள நில விற்பனை யில் ஈடுபட்டிருந்தது தெரிந் தது. இதனால் மீனாம்பாள் அதிர்ச்சியடைந்தார். இந்த மோசடி குறித்து மதுரை எஸ்பி அஸ்ரா கார்க்கிடம் 19.07.2011 அன்று மீனாம்பாள் புகார் அளித்தார்.
புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
மதுரை பொன்னகரம் மோதிலால் 1வது தெருவை சேர்ந்த முத்து மகன் சுதந்திரம் என்பவரிடம் இருந்து கடந்த 30&7&1975ல் வாவிடமருதூரில் 2.20 ஏக்கர் புஞ்சை நிலத்தை ரூ.13 ஆயிரத்துக்கு வாங்கினேன். சென்னையில் குடியிருந்து வந்ததால் வாவிடமருதூரை சேர்ந்த முத்து மனைவி சின்னம்மாள் என்பவரை எங்கள் நிலத்தில் விவசாய பயிர்களை காவல் காக்க நியமித்தேன். தற்போது நிலத்தை விற்பதற்காக வந்தேன். அலங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் மார்ச் 1ம் தேதி நிலத்துக்கு வில்லங்க சான்றிதழ் பெற்று பார்த்தபோது எனது நிலத்தை வாவிடமருதூரை சேர்ந்த ஹரிகரன் என்பவர் பவர் ஏஜென்டாக இருந்து 24&11&2003ம் ஆண்டு மதுரை கிருஷ்ணாபுரம் காலனி 4வது தெருவை சேர்ந்த கண்ணனுக்கு 45 சென்ட் இடத்தை ரூ.44,100 க்கு விற்றுள்ளார்.
திருமங்கலம் கற்பகநகர் 4வது தெருவை சேர்ந்த ஜெயச்சந்திரனுக்கு 45 சென்ட் இடத்தை ரூ.44,100க் கும் விற்பனை செய்துள் ளார். முன்பு பவர் ஏஜென்ட் ஹரிஹரன், நிலம் வாங்கிய கண்ணன், ஜெயச்சந்திரன் மற்றும் சோழவந் தான் எம்எல்ஏ கருப்பையா, வாவிடமருதூரை சேர்ந்த தலையாரிகள் சடாட்சரம், தமிழன் ஆகிய 6 பேர் மீனா ம்பாள் போல் கையெழுத்து போட்டு எழுதி தரும்படி, என் நிலத்தை பாதுகாத்து வந்த சின்னம்மாளை 8 ஆண்டுகளுக்கு முன்பு மிரட்டியுள்ளனர். அதற்காக நிறைய பணம் தருவதாகவும் கூறியுள்ளனர். இதற்கு சின்னம்மாள் உடன்படவில்லை. இது குறித்து யாரிடமும் சொன்னால் தீர்த்துகட்டி விடுவோம் என கூறி மிரட்டி சென்றுள்ளனர். சின்னம்மாள் உடன்படாததால் எம்எல்ஏ கருப்பையா உள்ளிட்ட 6 பேரும் கூட்டாக சேர்ந்து வேறு ஒரு பெண்ணை, ஆள்மாறாட்டம் செய்து என்னை போல் போலி ரேகை வைத்து போலியான பவர் பத்திரத்தை தயார் செய்துள்ளனர். சென்னையில் வசித்துவரும் எனது விலாசத்தை மறைத்து, மதுரை கே.புதூர் ஜவகர்புரம் பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருவதாக போலியான விலாசம் கொடுத்துள்ளனர். படித்துள்ள நான் கையெ ழுத்து மட்டுமே போடுவேன். ஆனால், கைரேகை வைத்து நிலத்தை ஹரிகரன் என்பவருக்கு பவர் பத்திரம் எழுதி கொடுத்ததாக ஆவணங்கள் தயாரித்து இருக்கிறார்கள். எனவே, சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா உள் ளிட்ட 6 பேர் மீதும் சட்டப் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மீனாம்பாள் கூறியுள்ளார்.
புகாரை பெற்றுக்கொண்ட எஸ்பி அஸ்ரா கார்க், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்க உத்தரவிட்டார்.
புகாரை பெற்றுக்கொண்ட எஸ்பி அஸ்ரா கார்க், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்க உத்தரவிட்டார்.
பலரிடம் மோசடி?
புகார்தாரர் மீனாம்பாள், அவரது வக்கீல் சாமுவேல்ராஜ் ஆகியோர் கூறுகையில், �‘வாவிடமருதூரை சேர்ந்த தலையாரிகள் சடாட்சரம், தமிழன் ஆகியோர் ஊரில் யார், யாருடைய நிலங்கள் பராமரிக்கப்படாமல் உள்ளன என்றும், வெளியூரில் உள்ள நில உரிமையாளர்கள் பற்றிய விபரங்களை எம்எல்ஏ கருப்பையாவுக்கு தெரிவிப்பது வழக்கம். இவர்கள் குறிப்பிட்ட நிலத்தின் உரிமையாளர், உறவினர் பெயரில் போலியான பவர் பத்திரம் தயார் செய்து நிலத்தை விற்றுள்ளனர். இதற் கான ஆவணங்களை தயார் செய்யவே 3 மாதங்களாகிவிட்டால் புகார் கொடுக்க தாமதமானது. என்னைப்போல் மேலும் பலரது நிலங்கள் இதேபோல் விற்கப்பட்டிருக்கலாம்’ என்றனர்.
No comments:
Post a Comment