சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இன்று வரை 54 ஆண்டுகளாக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் கொள்கை ஏற்று இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து தமிழ் மொழிக்காகவும்-தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும்-மக்களின் வாழ்வாதாரம் உயரவும், தமிழர்களின் கலாச்சாரம்-நாகரீகத்தின் பெருமையை நம்முடைய மக்களுக்கு எடுத்துரைத்து பகுத்தறிவு கொள்கை வழியில் சுய மரியாதை உணர்வை ஏற்படுத்திய தலைவர்களின் வழி நின்று திராவிட முன்னேற்ற கழகத்தில் 1956-ம் ஆண்டு முதல் இருந்து தொண்டாற்றி வருபவன் நான். சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் உரிமைக்காகவும் குரல் கொடுத்து வருபவன் நான். இந்த கொள்கைக்காக நான் இருப்பதால் இந்த அரசு என் மீது பொய் வழக்கு போட்டு என் பொது வாழ்க்கையை முடக்கி விட முடியாது. கழகத்தை பலவீனமாக்கி விட முடியாது. கழகம் நடத்திய விலைவாசி உயர்வு போராட்டத்தை தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டம். ஈழத் தமிழர்களுக்கான உரிமை போராட்டம் மற்றும் அறிஞர் அண்ணா காலத்தில் அறிவித்த போராட்டங்கள், அண்ணா மறைவிற்கு பிறகு தலைவர் கலைஞர் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்று மக்களுக்காக தியாகங்களை நான் மட்டுமல்ல என்னை பெற்ற தாய் முதல் என் மனைவி, பிள்ளைகள் அனைவரும் பல்வேறு சோதனைகளை தாங்கி கொண்டு தான் திராவிட முன்னேற்ற கழகத்தில் தொடர்ந்து இருந்து மக்களுக்காக உழைத்து வருகிறேன். 1975-ம் ஆண்டு தேசிய நெருக்கடி காலத்தில் 1976-ம் ஆண்டு கழக ஆட்சி கலைக்கட்டப்பின் நானும் எனது குடும்பமும் எவ்வளவு அடக்குமுறைகளை, அச்சுறுத்தல்களை சந்தித்தோம் என்பதை மாவட்ட மக்கள் மட்டுமல்ல தமிழ்நாடே நன்கு அறியும். அரசியல் காரணத்திற்காக பொய் வழக்கு போடுவதால் பொது வாழ்க்கையில் இருந்து நான் ஒதுங்கி விட மாட்டேன். இப்போது என் மீது போடப்பட்டுள்ள வழக்கு முற்றிலும் உண்மை இல்லை. இந்த பொய் வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்க உள்ளேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
வீரபாண்டி ஆறுமுகம் அலர்ஜியால் தவிப்பு :
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் காவல் நிலையத்தில் அலர்ஜியால் பாதிக்கப்பட்டார். இதனால் இரவு முழுவதும் து�ங்க முடியாமல் கடும் அவதிக்கு ஆளானார்.
சேலம் புதிய பஸ் நிலைய பகுதியில் உள்ள அங்கம்மாள் காலனி நிலம், 5 ரோடு பிரீமியர் மில் நிலப்பிரச்னைகள் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, 25.07.2011 அன்று சேலம் குற்றப்பிரிவு போலீசில் வீரபாண்டி ஆறுமுகம் ஆஜரானார். அவரிடம் போலீசார் நேற்றுமுன்தினம் பகல் முழுவதும் 120 கேள்விகளை கேட்டனர். 3 நாட்களும் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், அவரை போலீசார் வீட்டுக்கு அனுப்பவில்லை.
சிறிய அளவிலான அறையில் அவரை 25.07.2011 அன்று இரவு படுக்க வைத்தனர். அறையில் மின்விசிறி மட்டுமே உள்ள தால், வேர்வை காரண மாக அவ ருக்கு அலர்ஜி ஏற்பட்டது. இதையடுத்து தோல் சிகிச்சை நிபுண ரும், இருதய நோய் சிகிச்சை நிபுணர் முருகபாண்டியனும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சிகிச்சை அளித்தனர்.
அலர்ஜி, கொசுத்தொல்லையால் பாதிக்கப்பட்ட அவர், இரவு முழுவதும் து�ங்கவில்லை. து�க்கத்துக்கான மாத்திரை கொடுத்தும் அவர் பாதிக்கப்பட்டார்.
அவர் தங்கியுள்ள அறையில் போதிய காற்றோட்ட வசதி இல்லை, இதனால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர். 26.07.2011 அன்று 2வது நாளாக போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கூடுதலாக துணை கமிஷனர் ரவீந்திரன், உதவி கமிஷனர் காமராஜ் ஆகியோர், விசாரணை அதிகாரி பிச்சையுடன் சேர்ந்து துருவி துருவி கேள்விகளை கேட்டனர்.
அதிகாரிகள் கேட்ட கேள்வி வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சரியாக கேட்காததால், கேள்வியை திரும்ப கேட்டுள்ளார். 'கேள்வியை திருப்பி கேட்க கூடாது' என அதிகாரி ஒருவர் வீரபாண்டி ஆறுமுகத்தை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்தார். என்றாலும் அவர் அமைதி காத்தார்.
முதல்நாள் வீரபாண்டி ஆறுமுகம் அமர வயர் பின்னப்பட்ட சேர் கொடுத்திருந்தனர். ஆனால் 26.07.2011 அன்று பிளாஸ்டிக் சேர் கொடுத்தனர். அதில் அவரால் உட்கார முடியாமல் அவதிப்பட்டார். பகல் 1.05 மணிக்கு விசாரணையை முடித்த அதிகாரிகள், 1.45 மணிக்கு விசாரணை தொடரும் என்றனர்.
இதய நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு கூடுதல் நேரம் ஓய்வு தேவை என தெரிவிக்கப்பட்டது. என்றாலும் அதிகாரிகள் அவருக்கு நெருக்கடி கொடுத்தனர். அதனை பொறுத்துக்கொண்ட வீரபாண்டி ஆறுமுகம், அதிகாரிகளின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்தார்.
�கழிவறையிலேயே குளிக்க� உத்தரவு :
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேசனில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு அதிகாரிகள் போதிய வசதிகள் செய்து கொடுக்க மறுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்பிரிவில் 2க்கு 3 அடி அளவில் உள்ள கழிவறையை பயன்படுத்துமாறு போலீசார் கூறினர். அங்கே தான் குளிக்க வேண்டும் எனவும் போலீசார் தெரிவித்தனர். ஆனால் குளிப்பதற்கு வேறு இடம் ஏற்பாடு செய்யுமாறு கேட்கப்பட்டது. அதற்கு போலீசார் மறுப்பு தெரிவித்து விட்டனர். மிகுந்த சிரமத்திற்கு இடையில் அவர் அதனை பயன்படுத்தினார்.
எம்.பி.க்கு அனுமதி மறுப்பு :
திமுக எம்பி கே.பி.ராமலிங்கம் 26.07.2011 அன்று காலை, சேலம் டவுன் குற்றப்பிரிவு காவல்நிலையத்துக்கு வந்தார். அவர், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை பார்க்க அனுமதி கேட்டார். இதற்கு துணை ஆணையர் ரவீந்திரன் மறுத்துவிட்டார். நீண்ட நேரம் முறையிட்டும் அனுமதி வழங்கவில்லை. இதனால் அவருடன் 200க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்களும் காவல்நிலையம் முன்பு திரண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment