நிலம் வாங்கிய பிரச்னையில் மோசடியில் ஈடுபட்டு மிரட்டியதாக மதுரை நகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு உள்பட 4 பேரை மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 19.07.2011 அன்று கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வெங்கடசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த சிவனாண்டி, இவரது மனைவி பாப்பா ஆகியோர் போலீசில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது:
கோபிசெட்டிபாளையத்தில் நூற்பாலை அமைக்க திருமங்கலம் அருகே செங்குளத்தில் உள்ள 5.14ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில்(டிக்) அடகுவைத்து 1.40கோடி வாங்கினேன். தொழில் நஷ்டத்தால் பணத்தை திருப்பித்தர முடியவில்லை. இதனால் நிலம் ஏலத்திற்கு வந்தது. காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நரேஷ்குமார் ரூ. 2 கோடிக்கு அந்த நிலத்தைப் பெற்றுக்கொண்டு, டிக்கிற்கு ரூ. 1.40 கோடியை செலுத்துவதென முடிவானது. இதன்படி நரேஷ்குமாருக்கு பவர் எழுதித் தந்தேன். ஆனால் நரேஷ்குமார் எனக்கு வழங்க வேண்டிய பணத்தைக் கொடுக்காமல் இழுத்தடித்து வந்தார். எனவே நான் பவரை ரத்து செய்தேன். இதற்காக என்னை அவர் மிரட்டினார். இந்நிலையில் நிலத்தை விற்க முடிவு செய்து, ஒரு சென்ட் 85ஆயிரம் என விலை பேசினேன். இதற்கு ஒத்துக் கொண்டு நான்கரை கோடி ரூபாய் தருவதாக மதுரை நகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதி கூறினார். திருநகர் பேரூராட்சி தலைவர் இந்திராகாந்தியின் கணவர் பெயருக்கு என்னிடம் பவர் எழுதி வாங்கினர். ஆனால் ஒத்துக் கொண்டபடி பணம் தராமல் ரூ. 40லட்சம் மட்டுமே கொடுத்தனர். மீதிப்பணத்தை கேட்டபோது, தரமறுத்து திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு, தளபதி, திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் கொடி சந்திரசேகர், தாய்மூகாம்பிகை சேதுராமன் உள்ளிட்ட பலர் மிரட்டினர். வெற்று பேப்பரிலும் கையெழுத்து வாங்கி னர். எனது நிலத்தை மீட்டுத் தர வேண்டும்
இவ்வாறு புகாரில் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு புகாரில் தெரிவித்திருந்தார்.
இப்புகார் குறித்து மதுரை எஸ்பி, அஷ்ரா கார்க் உத்தரவில், கூடுதல் எஸ்பி, மயில்வாகனன், டிஎஸ்பி தங்கவேல், இன்ஸ்பெக்டர் திருமால் அழகு தலைமையிலான மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. கடந்த 2 நாட்களாக விசாரணை நடந்தது. இந்நிலையில் 19.07.2011 அன்று மதுரை நகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதி, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ்பாபு, திருமங்கலம் ஒன்றிய பெருந்தலைவர் கொடி சந்திரசேகர், திருப்பரங்குன்றம் நகர் திமுக செயலாளர் கிருஷ்ணபாண்டி ஆகிய 4 பேர் மீது சட்டப்பிரிவு 420, 506(2), 120(பி) உள்பட 7 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்து 19.07.2011 அன்று கைது செய்தனர்.
இவர்களை இரவு 8.50 மணியளவில் மதுரை முதலாவது மாஜிஸ்திரேட் முத்துக்குமார் வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். 4 பேரையும் ஆக.2 வரை ரிமாண்ட் செய்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். போலீசார் துன்புறுத்தினார்களா என மாஜிஸ்திரேட் கேட்டார். இதற்கு கிருஷ்ணபாண்டி உள்ளிட்ட 4 பேரும், ‘துன்புறுத்தவில்லை. 8 மணி நேரம் விசாரணை என்ற பெயரில் காக்க வைத்து மனஉளைச்சலை ஏற்படுத்திவிட்டனர்’ என்றனர். எஸ்பி அலுவலகம் மற்றும் மாஜிஸ்திரேட் வீட்டருகே திமுகவினர் ஏராளமான கூடியிருந்ததுடன் பொய் வழக்கு போடுவதாக போலீசாரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
No comments:
Post a Comment