கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, July 16, 2011

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சாட்சிகள் மறு விசாரணை வேண்டாம் : கர்நாடக ஐகோர்ட்டில் திமுக ரிட் மனு


தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சாட்சிகளிடம் மறு விசாரணை நடத்தக்கூடாது என்று தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக முதல்வராக கடந்த 1991 முதல்1996ம் ஆண்டு வரை ஜெயலலிதா இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீதும், அவருக்கு உதவியாக இருந்த சசிகலா, இளவரசி மற்றும் வி.என்.சுதாகரன் ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இதற்காக சென்னையில் தனி நீதிமன்றமும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக முதல்வராக இண்டாவது முறையாக 2001ல் ஜெயலலிதா பதவியேற்றார். அவர் முதல்வராக இருப்பதால், அவர் மீது நடந்து வரும் வழக்கு விசாரணை நியாயமாக நடக்காது. ஆகவே வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். இதை விசாரணைக்கு ஏற்றுகொண்ட நீதிமன்றம், பெங்களூரில் தனி நீதிமன்றம் அமைத்து விசாரணை நடத்தும்படி கடந்த 2003ல் உத்தரவிட்டது. அதன்படி கடந்த 2004 பிப்ரவரி 14ம் தேதி முதல் பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தனி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறுகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று ஜெயலலிதா தாக்கல் செய்த மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 2010 மார்ச் 18ம் தேதி தள்ளுப்படி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பெங்களூர் தனி நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கில் இருந்து ஜெயலலிதாவை நீக்ககோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை 2010 ஏப்ரல் 22ம் தேதி நீதிபதி தள்ளுப்படி செய்தார். இதை தொடர்ந்து வழக்கில் முக்கிய சாட்சிகளிடம் விசாரணை முடிந்து வக்கீல்கள் வாதம் மட்டுமே பாக்கியுள்ளது. இந்நிலையில், வழக்கில் ஏற்கனவே விசாரிக்கப்பட்ட சாட்சிகளிடம் மறு விசாரணை நடத்த வேண்டும் என்று ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கடந்த 14 ஆண்டுகளாக நடந்து வரும் வழக்கில் முக்கிய சாட்சிகள் அனைவரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்றுள்ளதால், அவர் மீதான வழக்கில் சாட்சிகளிடம் மறு விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுள்ளார். அவரின் கோரிக்கை ஏற்று மறு விசாரணைக்கு வாய்ப்பு கொடுத்தால், சாட்சிகளை மிரட்டி தனக்கு சாதகமாக்கி கொள்ள வாய்ப்புள்ளது. ஆகவே சாட்சிகள் மறு விசாரணைக்கு வாய்ப்பு கொடுக்ககூடாது என்று கூறியுள்ளார்.
அன்பழகன் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுகொண்டது. இம்மனு வரும் திங்கள்கிழமை (18.07.2011) நீதிபதி கேசவநாராயண் முன்பு விசாரணைக்கு வருகிறது.

No comments:

Post a Comment