கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, July 27, 2011

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவை முடக்க பொய் வழக்கு - கே.என்.நேரு


திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு கலைஞர் அறிவாலயத்தில் 26.07.2011 அன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது அவர், ‘’தி.மு.க.வினர் மீது அ.தி.மு.க. அரசு வேண்டும் என்றே பொய்வழக்கு போட்டு வருகிறது. திருச்சியை பொறுத்தவரை மாவட்ட துணை செயலாளர் குடமுருட்டி சேகர், பகுதி செயலாளர் காஜாமலை விஜய் மற்றும் குடமுருட்டி ஆறுமுகம் ஆகியோர் மீது போலீசார் மூலம் பொய்வழக்கு போடப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போல தி.மு.க. பிரமுகர் மூர்த்தி மீதும் பொய் வழக்கு போட முயற்சி நடக்கிறது. இந்த நிலையில் என்மீதும் துணை மேயர் அன்பழகன் மீதும் நாமக்கலை சேர்ந்த டாக்டர் கதிர்வேல் போலீசாரிடம் பொய்யான புகார் கொடுத்து உள்ளார்.


அதில் நாங்கள் இருவரும் அவரை மிரட்டி சொத்தை அபகரித்ததாக தெரிவித்து உள்ளார். விரைவில் திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வர உள்ளது.

இதனால் எங்கள் மீது பொய்யான புகார் அளித்து பொதுமக்கள் மத்தியில் எங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. நாங்கள் தப்பு செய்து இருந்தால் தண்டனை அனுபவிக்க தயார் நாங்கள் யார் நிலத்தையும் அபகரிக்கவில்லை. நீதிமன்றத்தில் சட்டப்படி வழக்கை சந்திப்போம். திருச்சியில் உள்ள ஒரு அ.தி.மு.க. பிரமுகர் கிராப்பட்டி ராணுவமைதானம் அருகே உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையை 3 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளார். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. டாக்டர் கதிர்வேல் ஏற்கனவே 9.1.2008-ல் போலீசில் புகார் கொடுத்து உள்ளார். அதில் எங்களது பெயர்கள் இடம்பெறவில்லை. ஆனால் இப்போது எங்களது பெயர்களை குறிப்பிட்டு புகார் கூறி உள்ளார். டாக்டர் கதிர்வேல் மீது சேலத்தில் உள்ள ஐ.ஓ.பி.பாங்கியில் அவரது சொத்துக்களை ஜப்தி செய்து உத்தரவிட்டு 18.8.2008ல் பத்திரிகையில் விளம்பரம் வெளியானது. டாக்டர் கதிர்வேல் முதலில் போலீசில் புகார் செய்தார். பிறகு சி.பி.ஐ.விசாரணைக்கு கோரி கோர்ட்டுக்கு சென்றார். மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தள்ளுபடியானது. பின்னர் ஐகோர்ட்டிலும் இந்த வழக்கு தள்ளுபடியானது.அதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு போட்டார். பின்னர் அதை அவரே வாபஸ் பெற்றுக் கொண்டார். இந்த நிலையில் தற்போது திருச்சி போலீசில் பொய்புகார் கொடுத்து உள்ளார்


நான் யாருடைய நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை. இதுபோன்ற புகார்களை நாங்கள் சட்டப்படி சந்திப்போம். நாங்கள் தவறு செய்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள். திருச்சி மேற்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலின் போது திமுகவினரின் செயல்பாடுகளை முடக்க வேண்டும் என அதிமுக அரசு இப்படி செய்துவருகிறது. அது நடக்காது"


இவ்வாறு கே.என்.நேரு தெரிவித்தார்.


அ.தி.மு.க. பிரமுகரை கைது செய்வார்களா?
செய்யாத குற்றங்களுக்காக பொய் வழக்கு போட்டு திமுகவினரை கைது செய்யும் காவல்துறை, திருச்சி மன்னார்புரம் அருகே அரசுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, பொதுமக்கள் நடந்து செல்லக்கூட வழியில்லாமல் அடைத்து வைத்துள்ள அதிமுக பிரமுகரை கைது செய்யுமா?, அவரிடமிருந்து அந்த நிலத்தை மீட்குமா? என்று நேரு கேள்வி எழுப்பினார்.

No comments:

Post a Comment