மத்திய அமைச்சர் நாராயணசாமி 13.07.2011 அன்று மாலை 5.30 மணிக்கு, கோபாலபுரம் இல்லம் வந்து திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். 6 மணி வரை இந்த சந்திப்பு நடந்தது.
பின்னர், நிருபர்களிடம் நாராயணசாமி கூறுகையில், “திமுக தலைவர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவரை சந்திப்பேன். கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் வந்தபோது, கருணாநிதியுடன் பேசுவதற்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே, இன்று வந்து சந்தித்தேன்” என்றார்.
பின்னர், நிருபர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்:
மத்திய அமைச்சரவை மாற்றத்தில் அதிருப்தி நிலவுகிறதே?
அப்படிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. ஒரு அமைச்சரை தவிர அனைவரும் பதவியேற்றனர்.
வீரப்பமொய்லி அதிருப்தி தெரிவித்துள்ளாரே?
அப்படி ஒன்றும் இல்லை.
திமுகவுக்கு 2 மந்திரிகள் உண்டு என்று பிரதமர் கூறியிருக்கிறாரே?
இதற்கு பதில் கூற எனக்கு அதிகாரம் இல்லை. பிரதமரும், கருணாநிதியும்தான் இதுபற்றி கூறமுடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment