நில ஆக்கிரமிப்பு வழக்குகளில் சிறுதாவூர், கொடநாடு போன்றவற்றையும் சேர்த்து, உரியவர்களுக்கு நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்று சிஐடியு தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இந்திய தொழிற்சங்க மையத்தின் 41வது ஆண்டு நிறைவு விழா சேலத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய சிஐடியு தொழிற்சங்க பொதுச்செயலாளர் சௌந்திரராஜன்,
பல்வேறு கட்டண கொள்ளைகளில் ஈடுபடும் கல்வி நிறுவனங்களை, தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்காமல் மாணவர்களின் நலன் கருதி, சமச்சீர் கல்வியை பழைய முறையிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும்.
நில ஆக்கிரமிப்பு வழக்குகளில் சிறுதாவூர், கொடநாடு போன்றவற்றையும் சேர்த்து, உரியவர்களுக்கு நிலத்தை ஒப்படைக்க வேண்டும். எந்த நிலமாக இருந்தாலும், யாரிடம் இருந்து யார் பறித்திருந்தாலும் உரியவர்களுக்கு போக வேண்டும் என்பதில் நாங்கள் பின்வாங்கியதில்லை. அதற்கான வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கின்றபோது, நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது என்றார்.
No comments:
Post a Comment