கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, July 20, 2011

2001 &06 நில பத்திரப்பதிவுகளை எடுத்தால் சிறுதாவூர், கொடநாடு என்று அதிமுகவின் பட்டியல் நீளும் - திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்


�2006 முதல் 2011 வரை நடந்த பத்திரப் பதிவுகளை கணக்கெடுக்கச் சொல்லி, அதுவும் திமுகவினர் மட்டுமே வாங்கிய சொத்துக்கள் குறித்து கணக்கெடுக்கின்றனர். 2001&2006 வரை நடந்த பத்திரப் பதிவுகளை எடுத்தால் சிறுதாவூர், கொடநாடு போன்ற அதிமுகவினரின் நிலப் பதிவு பட்டியல்கள் வரும்� என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
காஞ்சிபுரம் மாவட்ட திமுக சார்பில் உயர்நிலை செயல்திட்ட குழு தீர்மான விளக்க பொதுக் கூட்டம் மறைமலை நகர் அண்ணா திடலில் 19.07.2011 அன்று நடந்தது. மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் ஜெ.சண்முகம் வரவேற்றார். கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:
திமுக ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு தோல்விகளை சந்தித்துள்ளது. ஆனால் துவண்டுவிடவில்லை. சமச்சீர் கல்வியை கருணாநிதி மட்டுமே தயாரிக்கவில்லை. கல்வியாளர்கள் உட்பட பல நிபுணர்கள் சேர்ந்து தயாரித்தது. அதை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்தார். ஆனால் உயர் நீதிமன்றமோ அதை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. இது ஜெயலலிதாவுக்கு வெட்கக்கேடான விஷயம். இதேபோல தீர்ப்பு எங்கள் ஆட்சியில் கொடுக்கப்பட்டிருந்தால், எங்களை பதவி விலக கோரியிருப்பார். ஆனால் நாங்கள் அவரை பதவி விலகச் சொல்லவில்லை. ஜெயலலிதாவின் அக்கிரமங்களை தினகரன், முரசொலி பத்திரிகைகளை தவிர, வேறு எந்த பத்திரிகையும் கண்டிக்கவில்லை. தீர்ப்பு குறித்து செய்தி மட்டுமே வெளியிடுகின்றனர்.
2006 முதல் 2011 வரை நடந்த பத்திரப் பதிவுகளை கணக்கெடுக்கச் சொல்லி, அதுவும் திமுகவினர் மட்டுமே வாங்கிய சொத்துக்கள் குறித்து கணக்கெடுக்கின்றனர். 2001&2006 வரை நடந்த பத்திரப் பதிவுகளை எடுத்தால் சிறுதாவூர், கொடநாடு போன்ற அதிமுகவினரின் நிலப் பதிவு பட்டியல்கள் வரும். அதை ஏன் இவர்கள் செய்யவில்லை.
திமுகவினர் மீது கட்டாயப்படுத்தி புகார் கொடுக்க வைக்கின்றனர். அரசுக்கு அடிபணிந்து திமுகவினருக்கு எதிராக அதிகாரிகள் நடந்தால், அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவோம். அதிகாரிகள் நியாயமாக செயல்பட வேண்டும். பாதிக்கப்படும் திமுகவினருக்கு, திமுக வக்கீல்கள் அணி துணை நிற்கும். எங்களுக்கு ஆட்சி முக்கியமல்ல, கொள்கைதான் முக்கியம். ஐந்து ஆண்டுகள் அல்ல, அதற்கு முன்பாகவே நாங்கள் ஆட்சிக்கு வருவோம். அதற்கு ஜெயலலிதாவே காரணமாக இருப்பார்.
மறைமலை நகர இளைஞர் அணி செயலாளர் ஆர்.சீனிவாசன், துணைச் செயலாளர்கள் டி.கே.கமல், பரணி, ஸ்ரீதர், ஆப்பூர் கிளைச் செயலாளர்கள் சந்தானம், ரவிச்சந்திரன், கண்ணையன், நகர பொருளாளர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment