கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Thursday, July 14, 2011

கலைஞர் வாழ்க்கையின் முக்கிய சம்பவங்கள்! கலைஞரே பாராட்டி அளித்த சிறப்புப் பேட்டி


கலைஞர் அவர்களின் வாழ்க்கைப் பதிவுகளை கலைஞருக்காக ஒரு பயணம் என்ற நிகழ்ச்சி ரசிகன் நிகழ்ச்சியில் ஞாயிறுதோறும் ஒளிபரப்பானது.

தனது வாழ்க்கைப் பதிவுகளை திரும்பிப் பார்த்து தலைவர் கலைஞர் அவர்கள் அதே நிகழ்ச்சியில் பேட்டி அளித்தார். அப்போது, எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு - என்ற சங்க நாதம் தொடரும், தொடர வேண்டுமென்பது தான் என் விருப்பம் என்று தலைவர் கலைஞர் அவர்கள் கூறினார். கல்லக்குடி போராட்டம் என் இளமைக்கால நினைவுகளில் ஒரு எழுச்சி மயமான போராட்டம் என்று குறிப்பிட்ட தலைவர் கலைஞர் அவர்கள், பாளையங் கோட்டை சிறையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் வந்து என்னை பார்த்தது மறக்க முடியாதது என்று கூறி மனம் நெகிழ்ந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் என்னை மாபெரும் வெற்றி பெற வைத்த திருவாரூர் தொகுதிக்காக என் சார்பிலும், இயக்கத்தின் சார்பிலும் பல்வேறு பணிகளை ஆற்றுவேன் என்றும் தலைவர் கலைஞர் அவர்கள் குறிப் பிட்டார்.

நமது கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ரசிகன். நிகழ்ச்சித் தயாரிப்பு கிராஜிவிட்டி எண்டர்டெயின் மென்ட் நிறுவனத்தின் சார்பில் பி.விஜயகுமார், சுவிசந்தர் சாவ்லா. தமிழ்த் திரையுலகில் சாதனைப் படைத்த சாதனையாளர்களின் ரசிகர்கள் கலந்து கொண்டு அந்தக் கலைஞர்களைப் பெருமைப் படுத்தும் நிகழ்ச்சி இது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வாழ்க் கைப் பதிவுகளை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கலைஞருக்காக ஒரு பயணம் என்று 20 வார நிகழ்ச்சியாக ஒளிபரப் பானது. நிகழ்ச்சியினை பார்த்து ரசித்த கலைஞர் மிகவும் மகிழ்ச்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் தனது இனிய நினைவுகளை மீட்டிப்பார்த்து அளித்த சிறப்புப் பேட்டி வருமாறு :-

ரசிகர்கள் அல்ல; என்னுடைய ஆர்வலர்கள்

செய்தியாளர் : அய்யா வணக்கம். கலைஞர் தொலைக்காட்சியில் கடந்த பதினெட்டு வாரங் களாக உங்கள் ரசிகர்கள் கலந்துகொண்டு சிறப் பித்த ரசிகன் நிகழ்ச்சியைப் பற்றி உங்கள் கருத்து என்ன? கலைஞர் : நான் அவர்களை ரசிகர்கள் என்று சொல்லமாட்டேன். (சிரிக்கிறார்..) ரசிகர்கள் என்றால் அவர்கள் வேறு. ஆர்வலர்கள் என்பது வேறு. அந்த வகையில் நான் ரசிகர்கள் என்றால் ஒரு கால கட்டத்தில் என்னிடமிருந்து வெளிவருகின்ற ஒன்றை ரசித்து அதோடு விட்டுவிடுவார்கள். நிலையாக உள்ளத்திலே அந்தக் கருத்துக்களை பதிய வைத்துக் கொண்டு, அதன்படி செயல்பட, வாழ்ந்திட விரும்புகின்றவர்கள், நினைப்பவர் கள் ரசிகர்கள் என்று சொல்ல முடியாது. அவர்கள் என்னுடைய ஆர்வலர்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

செய்தியாளர்: தமிழகம் முழுவதும் உங்களுடைய பதிவுகளைத் தேடிப்போய் படம் பிடித்து கலைஞருக்காக ஒரு பயணம் என்று அந்தப் பதிவுகளை காண்பித்தோம். அதை நீங்கள் பார்க்கும்போது உணர்வுகள் எப்படி இருந்தது?

கலைஞர் : நான் பார்த்த வரையில் மிக அற்புத மாக அது தயாரிக்கப்பட்டிருக்கிறது. எதையும் விடாமல் எல்லாவற்றையும் நினைவிலே நிறுத்திக் கொண்டு எடுக்கப்பட்ட காட்சிகள் என்னை பிரமிக்க வைத்தது. உதாரணமாக நான் பல படங்களில் பாட்டு எழுதியிருக்கிறேன். இந்தப் படங்களுக்கு எல்லாம் பாட்டு எழுதியிருக் கின்றேனா என்பதை இந்த நிகழ்ச்சியின் காட்சி களைப் பார்த்த போதுதான் ஞாபகத்திற்கு வந்தது. அந்தளவுக்கு என்னைப்பற்றி துருவித் துருவி ஆராய்ந்து படம் எடுத்திருந்த அந்த முறை மிக மேன்மையானது. மிகவும் விரும்பத்தக்கது.

செய்தியாளர் : கருப்பு வெள்ளைக் காட்சி களில் உங்களுடைய இளமைக்காலத் தோற்றங் களை காண்பித்திருந்தோம். இளமைக் காலங்களில் நீங்கள் சுயமரியாதை திருமணம் செய்து வைப்பது, குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவது, வெளிநாடு பயணம் செல்வது, கலையுலக நண்பர்களுடன் இருக்கக்கூடிய அந்தக் காட்சிகளை எல்லாம் பார்க்கும்போது உங்களுக்கு எப்படி இருந்தது?

கலைஞர் : இளமைக்காலத் தோற்றக் காட்சி களைப் பார்க்கும்பொழுது 90 வயது கிழவருக்குக் கூட ஆர்வமாகத்தான் இருக்கும். அற்புதமானக் காட்சிகளாகத்தான் தெரியும். அதே நிலையை நானும் உணர்ந்தேன்.

படப்பிடிப்பில் இளமையிலேயே எனக்கு ஆர்வம் நிறைய உண்டு

செய்தியாளர் : பல திரைப்படங்களுக்கு நீங்கள் கதை வசனம் தீட்டியிருக்கிறீர்கள். படப்பிடிப்புத் தளத்திற்கு நீங்கள் போய் பார்த்து திருத்திய சம்பவங்களைச் சொல்ல முடியுமா?

கலைஞர்: நான் தொடக்க காலத்தில் நிறைய படங்களுக்கு நான் நிறையவே சென்று இயக்குநர் களோடு ஒத்துழைத்திருக்கின்றேன். பாடலாசிரியர் கள், வசனகர்த்தாக்கள் அவர் களோடு பழகியிருக் கிறேன். நடிகர், நடிகைகளுக்குத் தேவையான வசனங்களை ஞாபகப்படுத்தியிருக்கிறேன், சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அதனால் எனக்கு படப் பிடிப்பில் அந்தக்காலத்திலேயே, இளமை யிலேயே ஆர்வம் நிறைய உண்டு. என்னை விட ஒரு எழுத் தாளன் தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு படப் பிடிப்பின் பொழுது சென்றிருக்க முடியுமா என்பது எனக்குச் சந்தேகமே.

செய்தியாளர் : உங்கள் கைவண்ணத்தில் உருவான பல திரைப்படங்களுக்கு முக்கிய மான சூழல்களுக்கு பாடல்கள் எழுதியிருக்கிறீர்கள். பாட்டுத்திறன் உங்களுடைய பக்கத்தில் இருந்தும் கூட நீங்கள் அதிகமான பாடல்களை எழுத வில்லை. மற்ற பாடலாசிரியர்களுக்கு அதை நீங்கள் விட்டுக்கொடுத்து விட்டீர்கள் என்று சொல்லலாமா?

கலைஞர் : விட்டுக் கொடுத்ததாகச் சொல்ல முடியாது. மற்றவர்கள் நன்றாக எழுதுவார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களும் எழுதட்டும் என்று நான் அந்த ஆர்வத்தைத் தூண்டினேன். அதிலே எனக்கு வெற்றி கிடைத்தது.

செய்தியாளர் : நீங்கள் எழுதிய பாடல்களில் உங்களைக் கவர்ந்த பாடல்கள் ஒன்றிரண்டு சொல்லுங்கள்.

கலைஞர் : பராசக்தி படத்தில் நான் எழுதிய பூமாலை நீயே.. புழுதி மண் மேலே.. என்ற பாடலும், மறக்கமுடியுமா என்ற படம். முரசொலி மாறன் டைரக்சன் செய்த படம். அந்தப் படத்தில் காகித ஓடம்.. கடலலை மீது போவது போலே மூவரும் போவோம்.. என்ற பாடலும், நாம் படத்தில் அந்தப் பாடல்கள் இப்போது ஒளிபரப்பாவதில்லை என்று கருதுகின்றேன். அந்த நாம் படத்தில் சிதம்பரம் ஜெயராமன் அவர்கள் பாடிய எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.. என்ற அந்தப் பாடல்க ளெல்லாம் மனதை விட்டு அகலாதவைகள்.

செய்தியாளர் : திரைப்படங்களுக்கு ஒரு புதிய யுக்தியாக மேடை நாடகங்களை நீங்கள் பயன் படுத்தியிருக்கீங்க. இப்போ நீங்க மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிற அந்த நாடகக் காட்சிகள் எது?

கலைஞர் : அனார்கலி, சாக்ரடீஸ் இவைகள் தான் மீண்டும் மீண்டும் பார்க்க ஆசைப் படுகின்ற காட்சிகள். சிவாஜியும் நானும் நண்பர்கள் அல்ல; இணை பிரிக்க முடியாத சகோதரர்கள்

செய்தியாளர் : நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களிடம் உங்களுக்கு மிகப்பெரிய நட்பு உண்டு. அதைப்பற்றி சொல்லுங்கள்.

கலைஞர் : சிவாஜியும் நானும் நண்பர்களாக மாத்திரமல்ல; இணை பிரிக்க முடியாத சகோதரர் களாகவும் இருந்திருக்கிறோம். என் தாய் அஞ்சுகம் அம்மையார் மறைந்தபோது அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் அஞ்சுகம் அம்மையார் கலைஞ ருக்கு மாத்திரம் தாயல்ல; எனக்கும் தாய்தான் என்று குறிப்பிட்டு எழுதிய அந்த வரிகளை நினைத்து நினைத்து இன்றைக்கும் நான் பூரித்துப் போகிறேன். கடைசி வரையில் நானும் அவரும் நண்பர்களாக இருந்தோம். அதனுடைய நிலையான சின்னமாகத் தான் சென்னை கடற்கரை யிலேயே பலருடைய, மிக முக்கிய மானவர்களுடைய எதிர்ப்புகளுக்குக்கூட ஈடுகொடுத்து அவருடைய சிலையை வைத்ததாகும்.

செய்தியாளர் : நீங்கள் எழுதிய வசனத்தில் திருத்துவதற்கு அனுமதித்தது உண்டா? அது குறித்து ஏதாவது ஒரு சம்பவம் சொல்லுங்கள்.

கலைஞர் : வசனத்தைத் திருத்திப் பேசுவதற்கு யாராவது முன் வந்தால் ஒன்று வசனத்தைப் பேச வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் அரங்கத்தை விட்டு வெளியேறி விடுங்கள் என்றுதான் சொல்லி யிருக்கிறேன். அப்படி சில நிகழ்ச்சிகள் நடந்தது உண்டு. நிகழ்ச்சிகளை நினைவுபடுத்த விரும்ப வில்லை.

திரையுலகில் கவிஞர்களைப் பொறுத்து கவிப்பேரரசு வைரமுத்து நெருக்கமானவர்

செய்தியாளர்: திரையுலகில் உங்களுக்கு மனதுக்கு நெருக்கமானவர்கள் அன்று - இன்று யார் என்று சொல்லுங்கள்?

கலைஞர் : அன்றைக்கு சிவாஜி, எஸ்.எஸ்.ஆர். இவர்கள் நெருக்கமானவர்கள். இன்றைக்கு திரை யுலகில் என்று பார்த்தால் நடிகர்கள் என்று யாரும் நெருக்கமானவர்கள் இல்லை. திரையுலகத் தில் கவிஞர்களைப் பொறுத்து கவிப்பேரரசு வைரமுத்து நெருக்கமானவர்.

திருவாரூரில் முரசொலி பத்திரிகையை
துண்டறிக்கையாக எழுதி வெளியிட்டேன்

செய்தியாளர் : ஒரு வாசகனாக, எழுத்தாள ராக, பத்திரிகை ஆசிரியராக, விமர்சகராக, கட்டுரையா ளராக, உடன் பிறப்புகளுக்கு கடிதம் எழுதுபவராக தலையங்கம் தீட்டுபவராக இப்படி பத்திரிகைத் துறையின் அனைத்து அம்சங் களையும் அறிந்தவர் நீங்கள். பத்திரிகைகள் உங்களை எப்படி விமர்சித் தாலும்.. அதன் சுதந்திரத்தின் பாதுகாவலராக இன்றும் இருக்கிறீர்கள்.. பத்திரிகைத்துறையில் உங்கள் அனுபவப் பக்கங்களை சொல்லுங்கள்..

கலைஞர் : இப்போ நீங்க சொன்னதுவே அனுபவம்தான்.. (சிரித்துக்கொண்டே..) இப்போ நீங்க சொன்னீங்களே.. அதெல்லாம் பத்திரிகைத் துறையில் எனக்கு அனுபவம்தான். நான் முதன் முதல் திருவாரூரில் முரசொலி பத்திரிகையை துண்டு அறிக்கைகளாக எழுதி அதை ஒரு சிறிய அச்சகத் திலே கிருஷ்ணா அச்சகம் என்கின்ற ஒரு அச்சகத் திலே அச்சிட்டு வெளியிட்டேன். அது ஒரு ஆயிரம், இரண்டாயிரம் பிரதிகள் அப்பொழுது வெளியி லேயே விற்பனைக்குச் செல்லும். அப்படி செல்லு கின்ற அந்த பிரதிகளைக்கூட நானே அச்சேற்றி, நானே புரூப் பார்த்து, நானே அதை தபாலில் அனுப்புகின்ற அந்தப் பணியிலே ஈடுபட்டேன்.சில நேரங்களில் கடன் தொல்லையாலும் பத்திரிகையை நடத்த முடியாமல் சிரமப்பட்டிருக்கிறேன். அது பொதுவாக பத்திரிகை நடத்துபவர்களுக்கு ஏற்படு கின்ற ஒரு நிலை. அந்த நிலையிலும் சமாளித்து வீட்டிலே உள்ள நகை நட்டுகளை எல்லாம் அட மானம் வைத்துக் கூட பத்திரிகை நடத்தியிருக்கிறேன். இப்படி 1942ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த கையெழுத்துப் பிரதி முரசொலிதான் இன்றைக்கு நாளேடாக பல்லாயிரக்கணக்கான பிரதிகள் அச்சிடப்படுகிற நிலைக்கு வளர்ந்திருக்கிறது.

செய்தியாளர் : உங்களுடைய முதல் படைப்பு சங்கிலிச்சாமி, கிழவன் கனவு முதல் சங்கத்தமிழ், குறளோவியம், பாயும்புலி பண்டாரக வன்னியன், பொன்னர்-சங்கர், தாய்க்காவியம், தொல்காப் பியப்பூங்கா வரையிலும் தொடரும் உங்கள் படைப் புலகம் மிகப்பெரியது. இப்படி ஏகப்பட்ட இலக் கியப் படைப்புகளைத் தந்து சமுதாய மறு மலர்ச்சியை உண்டாக்கியிருக்கிறீர்கள். அன்றைய காலகட்டத்தில் அது ஒரு மிகப்பெரிய எழுச்சியை உருவாக்கியது. இப்போது உள்ள இலக்கியங்கள் அதுமாதிரி ஒரு எழுச்சியை உருவாக்க முடிய வில்லையே. அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

கலைஞர் : காரணம், எழுதுகின்றவர்கள் - அந்த இலக்கியகர்த்தாக்கள் பல பேர் அத்தகைய எழுச் சியை உண்டாக்கக் கூடாது என்ற எண்ணத்திலேயே எழுதுகின்றார்கள். அதுதான் காரணம்.. (சிரிக்கிறார்..)

செய்தியாளர்: உங்களுடைய திருக்குவளைப் பதிவுகளை, இடங்களை நாங்கள் இந்த கலைஞருக்காக ஒரு பயணம் நிகழ்ச்சியில் காண்பித்திருந்தோம். பக்கத்து வீட்டு நண்பர் நவநீத தியாகராசன், பட்டு மேஸ்திரி இவர்களும் உங்களைப் பற்றி நெகிழ்ந்து போய் பேசியிருந்தார்கள்.

கலைஞர் : (ஆர்வத்துடன்..) பார்த்தேன்.. எல்லாம் பார்த்தேன்..

செய்தியாளர் : அந்த நிகழ்ச்சியில் நீங்கள் பார்த்த அந்த திருக்குவளைப் பதிவுகளைப் பற்றிச் சொல் லுங்கள்.

கலைஞர் : (பரவசத்துடன்..) என்னுடைய உடம் பெல்லாம் புல்லரித்தது. பட்டு மேஸ்திரி பேசியதும், நவநீத தியாகராசன் பேசியதும் கேட்டபோது எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. அதைத்தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. (உணர்ச்சிவசப்படு கிறார்..)

செய்தியாளர் : நமது நிகழ்ச்சிக்காக திருவாரூருக்குச் சென்றால் திரும்பியப் பக்கம் எல்லாம் உங்கள் பதிவுகள்தான். உங்கள் வீடு, திருமணம் நடந்த இடம், நீங்கள் படித்த பள்ளிக்கூடம் எனச் சுற்றிச் சுற்றி உங்களுடைய பதிவுகள். அதையெல்லாம் அந்த மக்கள் பெருமையாகக் கருதுகிறார்கள். அதைப் பற்றிச் சொல்லுங்கள்.

கலைஞர் : அவர்கள் பெருமையாக நினைப் பதற்கு அடையாளம்தான் தமிழகம் முழுவதும் தி.மு.க தோற்றும்கூட அந்த ஊரில் 50000 வாக்குகள் எனக்கு வித்தியாசம் கிடைத்தது, அதிகம் கிடைத்தது அந்த காரணங்களிலே ஒன்று. நான் அந்த மக்களை முதலமைச்சராக மீண்டும் பதவியேற்று அவர்களுக்கு ஆவன செய்ய வேண்டும், அவர்களுடைய தேவை களை எல்லாம் நிறைவு செய்ய வேண்டும் என் றெல்லாம் எதிர் பார்த்திருந்தேன். அந்த எதிர்பார்ப்பு நிறைவேற வில்லை. இருந்தாலும் இன்று உள்ள அரசாங்கத் தின் ஆதரவோடு அதனை நிறைவேற்ற முடியும் என்று நம்புகிறேன். முடியாவிட்டால் என்னுடைய சார்பிலும் என்னுடைய இயக்கத்தின் சார்பிலும் அந்தப் பணிகளை ஆற்றுவேன்.

செய்தியாளர் : கோவை சிங்கா நல்லூரில்.. நீங்கள் குடியிருந்த.. குருவிக் கூண்டு போல.. என்று உங்களால் எழுதப்பட்ட அந்த வீட்டுக் குப் போய் படம் பிடித்துக் காண்பித்தோம்.

கலைஞர் : (முக மலர்ச்சியுடன்..) பார்த்தேன்.. பார்த்தேன்..

செய்தியாளர் : அந்தக் காட்சிகளை யெல்லாம் பார்க்கும் பொழுது உங்களுக்கு அந்த பழைய நினைவுகள் எல்லாம் வந்ததா?

கலைஞர் : எப்படி வராமல் இருக்க முடியும்? எவ்வளவோ நினைவுகள். அந்த வீட்டில்தான் நானும் என்னுடைய முதல் மனைவி பத்மாவும் குடியிருந் தோம். அந்த நினைவுகள் எல்லாம் வராமல் இருக் காது. இப்பொழுது நான் கோவைக்குச் சென்றாலும் சிங்காநல்லூர் பகுதிக்குச் சென்றால், ஒரு ஆச்சரிய மாக.. இப்பொழுது பொதுக்குழு நடைபெறுகின்ற இடம் சிங்காநல்லூரில் அந்த வீட்டுக்கு அருகா மையிலேதான் என்று கேள்விப்படுகின்ற போது எனக்கு உடம்பெல்லாம் புல்லரித்து விட்டது.

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் என்னால் மறக்க முடியாத ஒரு இடம்

செய்தியாளர் : சேலம் மாடர்ன் தியேட்டர் ஸில் உங்களுக்குத் தொடர்புடைய எல்லா இடங் களையும் நாங்கள் ஒளிப்பதிவு செய்து வழங்கினோம். உங்களுடைய மந்திரிகுமாரி திரைப் படத்திற்காக நீங்கள் கைப்பட எழுதிய கதைவசன நோட்டுப் புத்தகத்தை ஒரு பொக்கிசமாக வைத்துப் பாதுகாக்கி றார்கள். அதில் தேவி நாடக சபா முத்திரையோடு முதல் பக்கத்தில் நீங்கள் ஆங்கிலத்தில் கையழுத் திட்டிருக்கீறீர்கள் . . . கலைஞர் : அப்படியா?.. (ஆச்ச ரியத்துடன் கேட்கிறார்..) நீங்கள் சொல்லித்தான் தெரியும் எனக்கு அது. (மகிழ்ச்சியுடன் சிரிக்கிறார்..) செய்தியாளர்:சேலத்து மாடர்ன் தியேட்டர்ஸில் உங்களது மறக்க முடியாத நினைவுகளைச் சொல்ல முடியுமா?

கலைஞர் : ஏராளம் இருக்கு.. ஏனென்றால் அங்கிருந்துதான் பல படங்களுக்கு வசனம் எழுதுகின்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. மந்திரி குமாரி மகத்தான வெற்றி பெற்ற படம். இரண்டு நாளைக்கு முன்பு கூட அந்தப் படத்தைப் பார்த்தேன். அத்தகைய படங்கள் வெளி வருவதற்கு ஆரம்ப இடமாக இருந்தது சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ். அதைவிட மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர். சுந்தரம் அவர்கள் என்னிடத்தில் அளவற்ற அன்பும், மிகுந்த மரியாதையும் உள்ளவர். அவருடைய இழப்பு கலை உலகத்திற்கு மாபெரும் இழப்பு என்று அப்போதே கூறியிருக்கிறேன்.சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில்தான் நண்பர் கண்ண தாசனையே நான் சந்தித்தேன். அதனால் அது என்னால் மறக்க முடியாத ஒரு இடம்.

செய்தியாளர்:உங்களுடைய கல்லக்குடி போராட்டத்தை அப்போது எடுக்கப்பட்ட புகைப் படங்களைக் கொண்டும், கல்லக் குடிக்கு நேரடியாக சென்று படம் பிடித்தும் நீங்கள் தண்டவாளத்தில் தலைவைத்துப் போராடு வதாகக் காண்பித்தோம். கல்லக்குடி மண்ணில் நின்றுகொண்டு நாங்கள் படம் பிடித்தபோது மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. அந்த கல்லக்குடி நினைவுகளை சொல்லுங்கள்!

கல்லக்குடி போராட்டத்திற்குப் பின்னரே அரசியலில் எனக்கு உயர்வு

கலைஞர் : கல்லக்குடிப் போராட்டம் எனது இளமைக்கால நினைவுகளில் ஒரு எழுச்சி மயமான போராட்டம். அந்தப் போராட்டத்திற்குப் பிறகுதான் அரசியலில் எனக்கு ஒரு உயர்வே ஏற்பட்டது.அந்தப் போராட்டத்திற்குப் பிறகுதான் அண்ணாவினுடைய அன்பைப் பெற முடிந்தது. புரட்சிக்கவிஞர் பாரதி தாசனுடைய பாராட்டினைப் பெற முடிந்தது. அந்தப் போராட்டத்திற்குப் பிறகுதான் தமிழ் மக்களுடைய பெருத்த ஆதரவு எனக்குக் கிடைத்தது.செய்தியாளர் : தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்திய படம் பராசக்தி. அந்தப் படத்தினுடைய முதல்காட்சி யில் திரையரங்கில் மக்களுடைய வரவேற்பு ஹரனநைஉந சுநயஉவடி எப்படி இருந்தது?

கலைஞர் : அந்தப்படத்தில் முதன் முதல் வாழ்க! வாழ்கவே. வளமான எமது திராவிட நாடு என்ற பாடலில் முதன்முதலாக தமிழ்நாட்டில் ஒரு திரைப்படத்திலே ஒலித்ததே பராசக்தி படத்திலே தான்.அந்தப் படத்தைப் பார்ப்ப தற்காக பிற்பகல் காட்சிக்கு நானும் நண்பர்களும் சென்றிருந்தோம். பல தயாரிப்பாளர்களும் வந்திருந்தார்கள். அப்பொழுது அந்தப்பாட்டு வரும்பொழுது படம் பார்க்க வந்த இளை ஞர்கள் எழுந்து நின்று நாற்காலியில் ஏறி நின்று கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். அதுதான் என் நெஞ்சில் இன்றைக்கும் நிலைத்திருக்கக் கூடிய பாடலுக்கான ஒரு படக்காட்சியாகும்.

செய்தியாளர் : தமிழ்த் திரைப்பட வரலாற்றில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்திய படம் பராசக்தி. அந்தப் படத்தினுடைய முதல்காட்சி யில் திரையரங்கில் மக்களுடைய வரவேற்பு Audience Reaction எப்படி இருந்தது?

கலைஞர் : அந்தப்படத்தில் முதன் முதல் வாழ்க! வாழ்கவே. வளமான எமது திராவிட நாடு என்ற பாடலில் முதன்முதலாக தமிழ்நாட்டில் ஒரு திரைப்படத்திலே ஒலித்ததே பராசக்தி படத்திலே தான்.அந்தப் படத்தைப் பார்ப்ப தற்காக பிற்பகல் காட்சிக்கு நானும் நண்பர்களும் சென்றிருந்தோம். பல தயாரிப்பாளர்களும் வந்திருந்தார்கள். அப்பொழுது அந்தப்பாட்டு வரும்பொழுது படம் பார்க்க வந்த இளைஞர்கள் எழுந்து நின்று நாற்காலியில் ஏறி நின்று கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். அதுதான் என் நெஞ்சில் இன்றைக்கும் நிலைத்திருக்கக் கூடிய பாடலுக்கான ஒரு படக்காட்சியாகும்.

செய்தியாளர் : ஈரோட்டில் தந்தை பெரியாரிடம் குருகுலமாக இருந்து பணியாற்றியிருக் கிறீர்கள். அந்த நினைவு களையெல்லாம் நாங்கள் இந்த நிகழ்ச்சியில் காண்பித்தோம். தந்தை பெரியாரிடம் உங்களுக்குப் பிடித்த, உங்களைக் கவர்ந்த அம்சம் என்று எதைச் சொல்வீர்கள்?

கலைஞர் : அவருடைய அறிவு, சிந்தனை இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு அவ ருடைய உழைப்பு, நேரம் தவறாமை இவை களெல்லாம் எனக்குப் பெரியாரிடத்திலே பிடித்த அம்சங்கள். அதை என்னுடைய வாழ்க்கையிலே பயன்படுத்திக் கொண்டேன். பெரியார் வாரம் ஒரு முறைதான் குளிப்பார். (சிரிக்கிறார்..) காரணம், நான் வேடிக்கைக்காக சொல்லவில்லை, அவர் ஒரு பெரிய மகான் என்று சித்தரிக்க விரும்பவில்லை. அப்படி யிருந்தாலும் கூட அவர் பக்கத்தில் உட்கார்ந்தால் அழுக்கு வாடை வீசாது. அது போல பெரியார் உழைத்தார். எனக்கு பெரி யாரிடத்தில் மிகவும் பிடித்தது என்னைப் போன்ற இளைஞர்களை தட்டிக் கொடுத்துப் பணியாற்றச் செய்ததுதான் மிகவும் பிடித்தது. நேரம் தவறாமை எனக்கு மிகவும் பிடிக்கும். எட்டு மணிக்கு ரயிலுக்கு போக வேண்டும் என்றால் ஏழரைக் கெல்லாம் ரயில்வே ஸ்டேசனில் இருப்பார்.

செய்தியாளர் : திருச்சி மத்திய சிறைக்கு உரிய அனுமதி வாங்கிக்கொண்டு நீங்கள் இருந்த இடத்தை யெல்லாம் ஒளிப்பதிவு செய்து வழங்கினோம்.அது போல இதுவரை யாரும் பார்த்திடாத பாளையங் கோட்டை சிறைச் சாலைக்கும் சென்று ஒளிப்பதிவு செய்தோம். நீங்கள் அடைபட்டிருந்த குவாரண் டைன் யார்டு பகுதி, உங்களது அறை, நீங்கள் படுத்திருந்த கல் மேடை இவற்றையெல்லாம் பார்த் தோம். அந்தப் பாளையங்கோட்டை நினைவுகளை மீட்டிச் சொல்லுங்கள்.

கலைஞர்: பல கற்பனைகள், பாளையங் கோட்டையில் நான் இருந்தபொழுது. அதில் மிக முக்கியமானது அண்ணா அங்கு வந்து என்னைப் பார்த்தது. அவர் வருவார் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஏனென்றால் நான் அடைபட்டிருப்பதோ பாதுகாப்புச் சட்டக் கைதியாக. யாரும் என்னைப் பார்க்க முடியாது. 132 கூடாரங்கள் உள்ள ஜெயிலில் ஒரே ஒரு கூடாரம் மாத்திரம், ஒரே ஒரு அறை மாத்திரம் எனக்காக ஒதுக்கப்பட்டு அதைப் பூட்டி வைத்திருந்தார்கள். அதற்குள்ளே என்னை வைத் திருந்தார்கள். பாக்கி 131 அறைகளும் காலியாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு தனிமைச் சிறையில் இருந்தபொழுது அண்ணா வந்து பார்ப் பதற்கு அனுமதி கொடுக்கவில்லை. அப்பொழுது திரு.பக்த வச்சலம் அவர்கள் முதலமைச்சராக இருந்தார். அனுமதி கொடுக்க வில்லை. அதற்குப் பிறகு என்னு டைய சகோதரர், குடும்ப உறுப்பினர்கள்தான் பார்க்கலாம் என்று ஆணை பிறப்பித்து விட்டார்கள். ஜெயிலில் இருப்பவர்களை நண்பர்கள் பார்க்க முடியாது. குடும்ப உறவினர் தான் பார்க்கமுடியும் என்று. அண்ணா நான் அவருக்கு அண்ணன்.. குடும்ப உறவுதான்.. என் தம்பி அவரு. நான் பார்க்கனும் என்று சொல்லி Permission வாங்கிட்டு வந்தார். அண்ணா வந்து பார்த்தது எனக்கு மறக்க முடியாது. அப்போது அண்ணா பாளையங்கோட்டையிலே பார்த்துவிட்டுத்தான் மாலையிலே நெல்லைப் பொதுக்கூட்டத்தில் பேசும்பொழுது என் தம்பி கருணாநிதி அடைபட்டிருக்கும் பாளையங் கோட்டை எனக்கு யாத்திரை ஸ்தலம் என்று அந்த வார்த்தை சொன்னார் - அதுதான்.

செய்தியாளர் : உங்களுடைய முதல் சட்டமன்றத் தொகுதி.. குளித்தலை. அங்கு உங்களது வெற்றிக்குக் காரணமான வெள்ளி யணை, மேல்நங்கவரம், தண்ணீர் பள்ளி போன்ற பல பகுதிகளுக்கு சென் றோம். நங்கவரம் பண்ணையாரை எதிர்த்து நீங்கள் ஏர் உழுது போராடிய வயல்வெளிக்கு போனோம்.

நீங்கள் போராடி சீலிங்கில் வாங்கிக் கொடுத்த விவசாய நிலத்தை...

கலைஞர் : கையேர் வாரம் மாட்டேர் வாரம்.. (கூலிகொடுக்கும் முறையை எதிர்த்துப் போராடியது) குளித்தலை தொகுதி மக்களுடன் இன்று வரையில் எனக்கு தொடர்பு உள்ளது

செய்தியாளர்: ஆமாம். அந்த நிலத்தை வைத்துக் கொண்டு வாழ்ந்து வரும் ஏழை மக்களைப் பார்த் தோம். குளித்தலைப் பகுதி முழுவதும் உங்களைப் பற்றிப் பேசாத மனிதர்களே இல்லை. அந்தக் குளித்தலை வெற்றி, தேர்தல் நினைவுகளைச் சொல்லுங்கள்.

கலைஞர் : நான் குளித்தலையில் நிற்பதாக இல்லை. திருவாரூரில் நிற்பதாக எண்ணிக் கொண்டி ருந்தேன். திடீரென்று அதிகாரிகள் சொல்லி விட்டார்கள் தேர்தல் அதிகாரிகளை சந்தித்தபோது, நீங்கள் இங்கே நிற்கமுடியாது. ஏனென்றால் இது சுநளநசஎநன ளுநயவ. ஆதி திராவிடர்தான் நிற்கமுடியும். நீங்கள் நிற்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். பிறகு எங்கே நிற்பது என்று யோசித்துப் பார்த்து, திருவாரூருக்கு அருகிலே உள்ள நாகப்பட்டிணத்தில் நிற்கலாம் என்று அங்கே சுற்றிப் பார்த்துவிட்டு வந்து சென்னைக்குத் திரும்பி விட்டேன். நாகப் பட்டிணத்தில் நிற்கப் போகின்றேன் என்ற நம்பிக்கையில் அந்த ஊர் மக்களெல்லாம் எனக்கு மாலை போட்டு வரவேற்று வாழ்த்துக் கூறி, கூட்டம் போட்டு ஆதரித்துப் பேசி வழியனுப்பி வைத்தார்கள் . நான் அங்கேயிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தேன். அண்ணாவை சந்திப்பதற்காக வந்தேன். அப்போது அண்ணா அவர் வீட்டில் இல்லை. ராயபுரத்தில் அறிவகம் என்ற தி.மு.க தலைமைக் கழகம் அங்கே இருந்தது. அங்கே என்ன நடந்தது என்றால் வேட்பாளர்களுடைய பட்டியல் தயாராகிக்கொண்டு இருக்கிறது. போனவுடன், வா வா உன்னைப் பற்றி எழுதி விட்டேன் என்றார். என்ன செய்தாய்? என்றார். நாகப்பட்டிணத்தில் நிற்பதாக முடிவு பண்ணிவிட்டு வந்திருக்கிறேன். உங்கள் Permisson க்காக வந்திருக்கிறேன் என்றேன். நாகப்பட்டிணம் வேண்டாம், உனக்கு எங்கே எழுதியிருக்கேன் பாரு என்று List எடுத்து காமிச்சாரு (சிரிக்கிறார்..) கருணாநிதி -குளித்தலை. என்னது குளித்தலையா? எனக்கு அறிமுகமே இல்லாத ஊராச்சே அண்ணா? என்றேன். நீதான் எத்தனையோ தடவை போயிருக்கியே. பரவாயில்லை நீ போ என்றார். குளித்தலை ஒரு பெரிய நங்கவரம் ஜமீன்தாருடைய ஆதிபத்தியத்திற்கு கட்டுப்பட்ட ஊர். ஏராளமான அக்ரஹாரங்கள் உள்ள ஒரு பகுதி. பாமர மக்கள் அதிகம். நான் யோசித்தேன். நீ போ என்று அண்ணா ஆணையிட்ட பிறகு நான் நிறைவேற்றியே தீரவேண்டும் என்று குளித்தலைக்குச் சென்றேன். இருபதாயிரம் வாக்கு வித்தி யாசத்திலே வென்றேன். அதற்குப் பிறகு குளித்தலையிலே அந்த மக்களுடைய கோரிக்கைகள் பலவற்றை நிறை வேற்றிக் கொடுத்தேன். அப்படி நிறைவேற்றியதிலே ஒன்றுதான் முசிறி - குளித்தலை அந்தப் பாலம் கூட. எனவே குளித்தலை மக்களுக்கும் எனக்கும் அன்றைக்கு நான் தேர்தலிலே நின்றிருந்தாலும் கூட இன்று வரையில் அந்தத் தொடர்பு இருந்து கொண்டிருக்கிறது.

செய்தியாளர் : அறிஞர் அண்ணாவிடம் உங்களைக் கவர்ந்தது.. உங்களுக்குப் பிடித்தது?

கலைஞர் : அண்ணா.. எனக்கு அண்ணன். நான் அவருக்குத் தம்பி. இதைவிட கவர்ந்தது எது என்று எதைச் சொல்லமுடியும்.

செய்தியாளர் : உங்கள் வாழ்க்கைப் பதிவுகளை படம் பிடித்துக் காண்பித்த இந்த கலைஞருக்காக ஒரு பயணம் நிகழ்ச்சி கடந்த 20 வாரங்களாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இது உங்களுக்காக நாங்கள் படைத்த ஒரு படைப்பு. இந்தப் படைப்பைப் பற்றி உங்களது கருத்து, விமர்சனம்?

கலைஞர் : என் காலத்திற்குப் பிறகு யார் என்னைப் பற்றி நினைக்கப் போகிறார்கள் என்று நான் கொண்டிருந்த கவலையை அறவே நீக்கியது நீங்கள் எடுத்த அந்தப் படக்காட்சி.. பயணம் என்ற படக்காட்சி. அவ்வளவுதான் சொல்ல முடியும் என்னால்.

இன்றைய சமூகத்திற்கு எங்களின் சங்கநாதம் தொடரும்

செய்தியாளர் : எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு என்ற இந்த வரிகளுக்கு வாழ்க்கை விளக்கமாக வாழும் சரித்திரம் நீங்கள். இன்றைய சமூகத்திற்கு உங்கள் சங்கநாதம் என்னவாக இருக்கும்?

கலைஞர் : சங்க நாதம் தொடரும்.. தொடர வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம்.
- இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் பேட்டியளித்தார்.

(கலைஞருக்காக ஒரு பயணம், எனக்குப் பிறகு இந்த உலகம் தெரிந்து கொள்ள என்னைப் பற்றிய உங்களது இந்தப் படைப்பு சிறந்த பதிவு என சான்றளித்து நமது பல ஆண்டுகால உழைப்பை அங்கீகரித்த கலைஞரின் அன்பினைக் கண்டு மகிழ்கிறோம். கலைஞரின் சங்கநாதம் மட்டுமல்ல; அவரது பொது வாழ்வுச் சரித்திரமும்தொடர்ந்து கொண்டே இருக்கும். நாமும் அவரது காலடிச் சுவடுகளோடு கலைஞருக்காக ஒரு பயணத்தை தொடர்ந்து கொண்டே இருப்போம். கலைஞர்.. ஒரு வாழும் சரித்திரம்.)

ரசிகன் - கலைஞருக்காக ஒரு பயணம்
நேர்காணல், எழுத்து, இயக்கம்
கி.மணிவண்ணன்.

No comments:

Post a Comment