கடந்த காலத்தில் அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்ட நிலைதான் சமச்சீர் கல்வி விஷயத்தில் தற்போது மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று சமச்சீர் குழு தலைவர் கூறினார்.
�அரசியலாக்கப்பட்ட சமச்சீர் கல்வி & உண்மை நிலை என்ன� என்னும் நூல் வெளியிட்டு விழா சென்னையில் 28.07.2011 அன்று நடைபெற்றது. நூலை சமச்சீர் குழு தலைவரும், பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தருமான முத்துக்குமரன் வெளியிட மனோன்மணியம் பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் வே.வசந்திதேவி பெற்றுக்கொண்டார்.
பின்னர் முத்துக்குமரன் பேசியதாவது:
சமச்சீர் கல்வியில் அரசின் செயல்பாடு மிகவும் வருத்தப்பட வைக்கிறது. கட்டாய இலவச கல்வி என்று கூறிவிட்டு கட்டண பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது ஏன்? சமச்சீர் கல்வியில் சரியான நிலைப்பாட்டை காட்ட அரசு தவறிவிட்டது. சமச்சீர் கல்வி பிரச்னையில் கல்வித்துறை எந்த பதிலும் இதுவரை தெரிவிக்கவில்லை.
ஏன் என்றால் அரசின் குறுக்கீடுதான் காரணம். ஒவ்வொரு துறையில் உள்ளவர்களும் தங்கள் வேலைகளை சரியாக செய்தாலே போதும். ஆனால் ஒவ்வொரு துறையிலும் அரசு குறுக்கீட்டால் எதுவும் பண்ண முடியாது. இது ஆட்சியாளர்களுக்கு நல்லதல்ல. அரசின் பிடிவாதத்தால் தான் சமச்சீர் கல்வி செயல்படுத்த முடியவில்லை. கடந்த காலங்களில் 1.5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்ட நிலைதான் 1.15 கோடி பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
வசந்திதேவி பேசியதாவது:
சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் தரமில்லை என்று இந்த அரசு கூறியிருப்பது அனைத்து ஆசிரி யர்களையும், மாணவ& மாணவிகளையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. இதற்கு குறுகிய எண்ணம்தான் காரணம். தரம், தரமற்றவை என்பதை யார் நிர்ணயிக்க வேண்டும். அந்த துறை வல்லுனர்கள். ஆனால் அரசு அமைத்த கமிட்டி உறுப்பினர்களுக்கு தமிழ் தெரியாது. சமச்சீர் கல்வி பாட புத்தகங்களில் உலக தரமில்லை என்று கமிட்டி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.உலக தரம் என்றால் என்ன? இவர்கள் பார்வையில் அமெரிக்கா போன்ற நாடுகளைத்தான் உலக தரம் என்று கூறுகிறார்கள். ஆனால் அங்கெல்லாம் தொடக்க பள்ளிகள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது. மாலை நேரங்களில் டியூசன் எதுவும் கிடையாது. கல்வியை ஒரு விளையாட்டாக்கி விட்டது இந்த அரசு.

70 சதவீத மாணவர்கள் தமிழகத்தில் அரசு பள்ளிகளில்தான் படிக்கிறார்கள். அவர்கள் பற்றி ஒரு துளிகூட அரசு யோசிக்கவில்லை. தனியார் பள்ளிகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? குறுகிய எண்ணம், பிடிவாதத்தால் அரசு பள்ளி மாணவர்களை உதாசீனப்படுத்துகிறது இந்த அரசு. தமிழகத்தில் ஒரு மாணவனுக்கு கல்விக்காக க்ஷீ 606 மட்டுமே செலவு செய்கிறது அரசு. ஆனால் மற்ற மாநிலங்களில் 1500க்கு மேல் செலவு செய்யப்படுகிறது.
இவ்வாறு வசந்திதேவி பேசினார்.
இவ்வாறு வசந்திதேவி பேசினார்.
இந்த விழாவில் சமச்சீர் குழு உறுப்பினர் எஸ்.எஸ்.ராஜகோபாலன், ஆவணப் பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார், நூல் ஆசிரியர் சாவித்திரி கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment