கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, July 23, 2011

பொய் வழக்குகளை முறியடிப்போம் : திமுக சட்டத்துறை சபதம்



அதிமுக அரசு திமுகவினர் மீது போடும் பொய் வழக்குகளை சட்டரீதியாக முறியடிப்போம் என்று திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்ட திமுக வக்கீல்கள் ஆலோசனை கூட்டம், பொதுக்குழு நடைபெறும் சிங்காநல்லூர் விஜயா டிரேட் பேர் அரங்கில் 23.07.2011 அன்று காலை நடந்தது. திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிசாமி, ராஜா, சாமிநாதன், இளித்துறை ராமச்சந்திரன், மு.கண்ணப்பன், முன்னாள் எம்பி ராமநாதன் மற்றும் வக்கீல் அணி நிர்வாகிகள் கிரிராஜன், பரந்தாமன், தண்டபாணி, ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கோவை மாவட்ட திமுக வக்கீல் அணி அமைப்பாளர் பி.ஆர்.அருள்மொழி, முன்னாள் அரசு வக்கீல் கே.எம்.தண்டபாணி வக்கீல்கள் கணேஷ்குமார், மகுடபதி, ரவிச்சந்திரன், தமிழ்செல்வி, ஜி.டி.ராஜேந்திரன், பரமேஸ்வரன், கனகராஜ், ராஜப்பன் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் ஆர்எஸ் பாரதி பேசியதாவது:
கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தில் எப்படிப்பட்ட சூழ்நிலை நிலவுகிறது என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மீது அதிமுக அரசு காவல்துறையை ஏவி பொய் வழக்கு போட்டு வருகிறது.
1978, 1991, 2001 ஆகிய காலகட்டங்களில் இதே மாதிரி நிலைமைகளை நாம் எதிர்கொண்டோம். அப்போது போடப்பட்ட பொய் வழக்குகள் அனைத்தையும் முறியடித்தோம். குறிப்பாக ஜெயலலிதா மீது நானும், சண்முகசுந்தரமும் டான்சி வழக்கு தொடர்ந்தோம். இதற்காக, சண்முகசுந்தரம் அரிவாளால் வெட்டப்பட்டார். அவர் மீது 32 இடங்களில் வெட்டு விழுந்தது. இந்த ஒரு வழக்கில் மட்டுமே ஜெயலலிதா நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.
இந்த வழக்கு ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய பேரிடியாக விழுந்தது. இதற்கு திமுக வழக்கறிஞர் அணிதான் காரணம். அதேபோல் நம் அணியினர் முழு சக்தியை பயன்படுத்தி திமுகவினர் மீது போடப்படும் பொய் வழக்குகளை எதிர்கொண்டு முறியடிப்போம்.
சமச்சீர் கல்வி விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கு நீதிமன்றத்தில் அடிமேல் அடி விழுகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் அடி விழுந்துள்ளது. இதேபோல் நம்மீதான வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொண்டு முறியடித்துக் காட்டுவோம்.
இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி பேசினார்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

* நீதிமன்றங்களில் வக்கீலாக பணியாற்ற சட்டப்படிப்பு படித்தால் மட்டும் போதும் என்ற நிலையை மாற்றி தற்போது, ஆல் இந்தியா பார் கவுன்சில் நடத்தும் கட்டாய பார் எக்சாமினேசன்(தேர்வு) எழுத வேண்டும் என்பதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

* அந்த தேர்வை அகில இந்திய பார் கவுன்சில் ரத்து செய்ய வேண்டும்.

* தமிழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களிடையே ஏற்ற, தாழ்வுகளை போக்குவதற்கு தி.மு.க. அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித்திட்டம் செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.

* ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை ஏற்று உடனடியாக அதை அமல்படுத்தாமல், மாணவர்களின் நிலையை எண்ணி பார்க்காமல் மீண்டும், மீண்டும் மேல்முறையீடு என்ற பெயரில் உச்சநீதிமன்றத்தை அணுகி, இன்னும் பிடிவாத போக்கை கடைபிடிக்கும் அ.தி.மு.க. அரசை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

* .தி.மு.க. அரசு பொறுப்பு ஏற்றவுடன் தி.மு.க.வின் அனைத்து பொறுப்பில் இருப்பவர்கள் மீதும் பழிவாங்கும் நோக்கத்தோடு, தொடர்ந்து காவல்துறையை ஏவி விடுவது வாடிக்கையாக உள்ளது. இதில் காவல்துறை நடுநிலையோடு செயல்படாமல், தி.மு.க.வினர் மீது பொய் வழக்கு போடுவதை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது.

* அது மட்டுமில்லாமல் பொய் வழக்கு போடும் காவல்துறை அதிகாரிகள் மீது தி.மு.க. வக்கீல்கள் சட்டப்படி மனித உரிமை ஆணையத்திடமும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடமும் முறையான முறையீடு செய்து பொய் வழக்கு போடும் காவல்துறைக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


No comments:

Post a Comment