
சென்னை தண்டையார்பேட்டை கைலாசம் தெருவில் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 7&வது வட்ட திமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. நிவாரண பொருட்களை திமுக பொது செயலாளர் அன்பழகன் வழங்கினார். அருகில் சற்குணபாண்டியன், டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., சேகர்பாபு, டன்லப் ரவி மற்றும் பலர்.
தண்டையார்பேட்டை கைலாசி முதலி தெருவில் கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் 450-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலானது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 450 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, புடவை, லுங்கி, சட்டை, போர்வை, ஸ்டவ், பக்கெட், தட்டு, டம்ளர், கரண்டி, மக்கு, பாய், உள்பட 17 பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டன.
தி.மு.க. பகுதி செயலாளர் டன்லப் ரவி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆர்.கே.நகர் தொகுதி முன்னாள் எம்.எ.ல்.ஏ. பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார்
No comments:
Post a Comment