கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, July 12, 2011

மத்திய அமைச்சரவையில் திமுக இடம்பெறாதது ஏன்? - கருணாநிதி பேட்டி


மத்திய அமைச்சரவையில் திமுக இடம் பெறாதது பற்றி முன்னாள் முதல்வர் கருணாநிதி பதில் அளித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவர் 12.07.2011 அன்று அளித்த பேட்டி விவரம் வருமாறு:

கேள்வி: நில அபகரிப்பு குறித்து தி.மு.க.வினர் மீது வரும் புகார்கள் பற்றி விசாரிக்க காவல்துறை சிறப்பு பிரிவை தொடங்கவிருப்பதாக அரசு அறிவித்ததையொட்டி, நீங்கள் அண்ணா அறிவாலயத்தில் கட்சியினரின் கோரிக்கைகளை கேட்பேன் என்று சொல்லியிருந்தீர்களே அதற்கு ஏதாவது பலன் உள்ளதா?


பதில்: கழக தோழர்கள் அதுபற்றி என்னிடத்தில் முறையிடுகிறார்கள். வழக்கறிஞர்கள் மூலமாகவும் அவற்றை விசாரித்து அறிந்து கொள்கிறேன். உண்மையிலேயே நில அபகரிப்பு நடைபெற்றிருந்தால் அவர்கள் நடவடிக்கைக்கு உரியவர்களே ஆவார்கள்.

கேள்வி: விலைவாசி வெகுவாக உயர்ந்துள்ள நிலையில் அரசு ஸீ3900 கோடிக்கு வரிகளில் மாற்றம் செய்து அறிவித்துள்ளதே?
பதில்: பொதுமக்கள் தலையில் விழுந்துள்ள இந்த வரிச்சுமை, அவர்களே அவர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டதாகும்.


கேள்வி: விஜயகாந்த் எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்து அரசை தட்டிக்கேட்குமா? போராட்டம் நடத்துமா?


பதில்: தி.மு.க. எதிர்க்கட்சியா இல்லையா என்பதைவிட திராவிடர்களின் நலன்களுக்காக பாடுபடுகின்ற ஒரு இயக்கம் என்பது தான் நிதர்சன உண்மை.


கேள்வி: சமச்சீர் கல்வி பிரச்சினை காரணமாக பள்ளிகள் திறந்து 2 மாதங்கள் ஆகியும் மாணவர்கள் பாடங்களை படிக்க தொடங்காத நிலை உள்ளதே?


பதில்: மாணவர்கள் படிக்காமல் இருக்கிறார்கள். அவர்களை பெற்றவர்களும், இந்த அரசுக்கு வாக்களித்தவர்களும் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


கேள்வி: மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி 2 நாட்களுக்கு முன்பு உங்களை சந்தித்த போது என்ன பேச்சுவார்த்தை நடைபெற்றது?


பதில்: என்ன பேச்சுவார்த்தை என்பதையும், என்ன முடிவெடுக்கப்பட்டது என்பதையும் வரவிருக்கின்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு வெளியிடப்படும்.


கேள்வி: பிரணாப் முகர்ஜியுடன் பேசும்போது கனிமொழி பற்றி அவரிடம் பேசினீர்களா?


பதில்: நான் பேசவில்லை.


கேள்வி: இன்றைக்கு நடைபெறும் மத்திய மந்திரிகள் மாற்றத்தின் போது தி.மு.க.வில் யாருக்காவது அமைச்சர் பதவி வேண்டுமென்று கேட்டீர்களா?


பதில்: கேட்கவில்லை.


கேள்வி: கேட்காததால் மத்திய மந்திரிகளில் தமிழகத்திற்கான முக்கியத்துவம் குறையுமல்லவா?


பதில்: அதைப்பற்றியெல்லாம் பொதுக்குழுவில் விவாதிப்போம்.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

No comments:

Post a Comment