திமுக தலைவர் கருணாநிதி 14.07.2011 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
ஒவ்வொரு பள்ளிகளுக்கும் 2007&08ம் ஆண்டு முதல் தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதியை கல்வி வளர்ச்சி நாள் என்ற பெயரால் அனைத்து பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும் என அறிவித்தோம். அவ்வாறு தொடர்ந்து வரும் அரசுகளும் கொண்டாட வேண்டும் என்பதற்காக அந்த அறிவிப்பினை சட்டமாகவே இயற்றினோம்.
கடந்த ஆண்டு கூட சென்னையில் காமராஜர் பிறந்த நாள் விழாவை கல்வி வளர்ச்சி நாள் என்ற பெயரில் அரசின் சார்பில் பெருவிழாவாக எடுத்து, அந்த விழாவில் நானே கலந்து கொண்டேன்.
அதில் மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், மத்திய இணை அமைச்சராக இருந்த தங்கபாலு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
ஆனால் இந்த ஆண்டு அரசின் சார்பில் அமைச்சர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி மட்டுமே விளம்பரமாக வந்துள்ளது. எனவே, திமுக சார்பில் தொண்டர்களும், முன்னணியினரும் ஆங்காங்கே காமராஜரின் சிலைகளுக்கும், திருஉருவ படங்களுக்கும் மாலைகளை அணிவிப்பதோடு, ஆசிரியப் பெருமக்கள் கல்வி வளர்ச்சி நாளாகவும் அதனை கொண்டாட கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார். ரஜினியின் உடல்நலம் - கருணாநிதி விசாரிப்பு :
சென்னை திரும்பியுள்ள ரஜினியின் உடல் நலம் குறித்து அவரிடம் தொலைபேசி மூலம் திமுக தலைவர் கருணாநிதி கேட்டறிந்தார்.
திமுக தலைமைக் கழகம் 14.07.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பி ஓய்வு எடுத்து வரும் நடிகர் ரஜினிகாந்தை கருணாநிதி தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, அவரின் உடல் நிலை குறித்தும், செய்யப்பட்ட சிகிச்சைகள் பற்றியும் கேட்டறிந்தார். மருத்துவர்களின் பரிந்துரைப்படி உடல் நலத்தைப் பேணிட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார். ரஜினி நன்றி கூறியதோடு, கருணாநிதியின் உடல்நிலை குறித்தும் கனிமொழி நலன் குறித்தும் கேட்டறிந்தார்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment