கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Tuesday, July 19, 2011

தோல்வியாக கருதாமல் சமச்சீர் கல்வியை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் : கலைஞர் வேண்டுகோள்


தி.மு.க. தலைவர் கலைஞர் சென்னையில் 18.07.2011 அன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்துள்ள பதில்களும் வருமாறு:


கேள்வி: சமச்சீர் கல்வி குறித்து ஐகோர்ட்டு அளித்துள்ள இன்றைய தீர்ப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?


பதில்: இந்த தீர்ப்பை இன்றுள்ள தமிழக அரசு தங்களுக்கு கிடைத்த தோல்வியாக கருதாமல் ஏழையெளிய நடுத்தர மக்களுக்கும், மாணவர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதமாக கருத வேண்டும். வழக்காடியதில் கிடைத்த தோல்வி என்று ஆட்சியினர் கணக்கிடாமல் எதிர்கால புதிய சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட வழிக்காட்டுதல் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.


கேள்வி: இந்த தீர்ப்பினை நீங்கள் எதிர்பார்த்தீர்களா?


பதில்: நான் முதலிலேயே இது யாருக்கும் கிடைத்த வெற்றி தோல்வி அல்ல, எல்லோருக்கும் வழிக்காட்டக்கூடியது என்று சொல்லியிருக்கிறேன். இன்றைய அரசு அப்படி எடுத்துக்கொண்டால் அது அவர்களுக்கு நல்லது, எதிர்கால சமுதாயத்திற்கும் நல்லது.


கேள்வி: சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்போவதாக சொல்லியிருக்கிறார்களே?


பதில்: தி.மு.க. ஆட்சியில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்ட போதே சிலர் இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை சென்றனர். அங்கே எல்லாம் இந்த திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன்.


கேள்வி: பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டவை விநியோகிக்கப்படுமா? அல்லது மாற்றங்கள் செய்யப்படுமா?


பதில்: இந்த கேள்விக்கும் சேர்த்து தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. தீர்ப்பிலேயே இந்த கேள்விக்கு வழி காட்டப்பட்டுள்ளது.


கேள்வி: தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூடவிருக்கிறதே, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதா?


பதில்: ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இடையில் இருப்பது இரண்டொரு நாட்கள் தானே. எனவே அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.


கேள்வி: நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்ற அறிவிப்பு வந்த பிறகு புதிய வரி விதிப்புகளையெல்லாம் தமிழக அரசு வெளியிட்டுள்ளதே? அதில் சட்டமன்ற உரிமை மீறல் உள்ளது என்பதை சட்டப்பேரவையில் எழுப்புவீர்களா?


பதில்: ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள எல்லோரும் சட்டமன்ற மரபுகளைப்புரிந்து கொண்டிருப்போரும் இதனைச்சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது என்றார்.

No comments:

Post a Comment