திமுக தலைமைக் கழகம் 06.07.2011 அன்று வெளியிட்ட அறிக்கை:
�கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக� திமுக தலைவர் கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த
ணீ5
கோடி வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டுள்ளது. அதில் கிடைக்கும் வட்டியை கொண்டு மாதந்தோறும் ஏழை, எளிய நலிந்தோருக்கு உதவித்தொகையாக 2005 நவம்பர் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டது.
வைப்பு நிதியாக போடப்பட்ட
ணீ5
கோடியில், 30வது புத்தக கண்காட்சியினை 2007 ஜனவரி 10ம் தேதி திறந்து வைத்து கருணாநிதி பேசுகையில், “கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் & பதிப்பாளர் சங்கத்துக்கு
ணீ1
கோடி வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டது. அந்த சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள
ணீ4
கோடியில் வரும் வட்டித்தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித்தொகை வழங்கப்படுகிறது.
2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி
ணீ2
கோடியே 4 லட்சத்து 65 ஆயிரம். மேலும், 2011 ஜூன் மாதம் வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல் உதவி நிதியாக 32 பேருக்கு மொத்தம்
ணீ3
லட்சத்து 20 ஆயிரத்தை 06.07.2011 அன்று வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களில் இருந்து வந்துபோகும் செலவினத்தை தவிர்க்க, உதவித்தொகை தபால் மூலம் வரைவு காசோலையாக அனுப்பப்படுகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment