2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் ஒதுக்கீடு செய்தது தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. வழக்கில், முன்னாள் மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா உள்பட பலர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்பாக ராசாவின் சார்பில் சீனியர் வக்கீல் சுசில்குமார் 25.07.2011 அன்று வாதாடினார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற கம்பெனிகளின் பங்குகள் கைமாறியது பற்றி பிரதமருக்கும், அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்திற்கும் நன்றாக தெரியும் என்று அவர் வாதாடினார்.
இந்நிலையில், 26.07.2011 அன்று 2வது நாளாக சுசில்குமார் வாதாடினார். அவர் கூறியதாவது:
பிரதமரையும், சிதம்பரத்தை வழக்கில் சேர்க்க வேண்டுமென 25.07.2011 அன்று நான் கூறவில்லை. ஆனால், பத்திரிகைகள் தவறாக வெளியிட்டுள்ளன. எனவே, உண்மையை வெளியிடா விட்டால், நிருபர்களை நீதிமன்றத்தில் அனுமதிக்கக் கூடாது.

முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததை குற்றமாக கூறுகின்றனர். அப்படியானால், ராசாவை விட உயர் பதவியில் உள்ள பிரதமர், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பற்றி முடிவெடுக்க அமைச்சர்கள் குழுவை நியமித்திருக்கலாமே? அவர் அப்படி செய்யாததன் மூலம் கடமையில் இருந்து தவறி விட்டார்.
இவ்வாறு அவர் வாதாடினார்.
மேலும், வழக்கை உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணிப்பதற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும், வழக்கை உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணிப்பதற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
No comments:
Post a Comment