கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Wednesday, July 6, 2011

தோல்வியை கண்டு துவண்டுவிடாத கூட்டம் தான் தி.மு.க. :மு.க.ஸ்டாலின் பேச்சு


தோல்வியை கண்டு துவண்டுவிடாத கூட்டம்தான் தி.மு.க. என்று 04.07.2011 அன்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.


சென்னை மயிலைப் பகுதிக் கழகம் சார்பில் 04.07.2011 அன்று மாங்கொல்லையில் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பகுதிச் செயலாளர் மயிலை த.வேலு தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், ‘’அண்மையில் ஒரு பெரிய தோல்வியைச் சந்தித்து, அதற்குப் பிறகு கழக உயர்நிலை செயல்திட்டக் குழுக்கூடி அந்தக் கூட்டத்தில் வடித்தெடுக்கப்பட்ட தீர்மானங்களை அடிப்படையாக வைத்து நாம் தமிழகத்தில் இருக்கக்கூடிய தலைநகரப் பகுதிகளில், நகரப் பகுதிகளில், ஒன்றியப் பகுதிகளில், கிராமப் பகுதிகளில், குக்கிராமப் பகுதிகளில் பட்டி- தொட்டிகள்தோறும் அதை எடுத்து விளக்கக்கூடிய வகையிலே பொதுக்கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள் என்ற நிலையிலே நமது தி.மு.கழகத்தின் சார்பில் தொடர்ந்து கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

தோற்றோம், தோற்றோம் என்று சொல்கிறார்கள். தோற்ற கூட்டமா இது? தோல்வியைக் கண்டு துவண்டுவிடாத கூட்டம்தான் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டம். திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா வடசென்னையில் உள்ள ராபின்சன் பூங்காவிலே கொட்டும் மழையிலே துவக்கி வைத்த நேரத்திலே குறிப்பிட்டுச் சொன்னார்.

`வெற்றியைக் கண்டு வெறிகொண்டு அலைந்து கொண்டிருக்க மாட்டோம்' `தோல்வியைக் கண்டு துவண்டுவிட மாட்டோம்' என்று. எனவே வெற்றியை, தோல்வியை இரண்டையும் ஒன்றாகக் கருதி உழைத்துக் கொண்டிருக்கக் கூடிய உன்னதமான தொண்டர்களை கொண்ட இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம். துவண்டுவிடாமல் தொடர்ந்து நம்முடைய பணியை நிறைவேற்றிட உறுதி எடுத்துக்கொள்ளக்கூடிய கூட்டமாகத் தான் நாம் கருதிட வேண்டும்.

வாக்களித்தவர்களும் வருத்தப்படுகிறார்கள். கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாமல் போய்விட்டதே என்று. வாக்களிக்காதவர்களும் வருத்தப்படுகிறார்கள். அதனால் வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காத மக்களுக்கும் நன்றி சொல்லத்தான் இந்தக் கூட்டம்.

கடந்த ஐந்தாண்டுக் காலத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பிலே இருந்தபோது தலைவர் கலைஞர் அரசு நிறைவேற்றிய திட்டங்கள் - சாதனைகள் -நினைத்தே பார்க்கமுடியாத காரியங்கள் எத்தனை எத்தனை! ஐம்பது ஆண்டு காலம் கலைஞர் ஆட்சிலே இருந்து என்னனென்ன திட்டங்களை செய்திருப்பாரோ அவை அத்தனையும் கடந்த ஐந்து ஆண்டிலே செய்து முடித்திருக்கக்கூடிய வரலாற்றை நம்முடைய தலைவர் கலைஞர் உருவாக்கி தந்திருக்கிறார்.

தலைவர் கலைஞர் மிகத்தெளிவாக ஐந்து வருடம் நாம் ஆட்சியிலே இருந்தபோது மின் உற்பத்திக்காக என்னென்ன பணிகள் எல்லாம் செய்திருக்கிறோம் என்று ஆதாரத்தோடு காட்டியிருக்கிறார். 2011 - 2012-லே 3316 மெகாவாட், 2012 - 2013-லே 1222 மெகாவாட், 2013 - 2014-லே 1860 மெகாவாட். ஆக மொத்தம் 7,798 மெகாவாட் மின் உற்பத்தி கிடைக்கக்கூடிய வழி வகையை செய்த ஆட்சி தலைவர் கலைஞர் ஆட்சி.

இன்றைக்கு ஜெயலலிதா அரசு விரைவில் மின் பற்றாக்குறை தீரும் என்று சொல்கிறது என்றால் அது தலைவர் கலைஞர் ஆட்சியில் செய்த மின் உற்பத்தி திட்டங்களால் தான். செய்த காரணத்தால் தீரும். இதுதான் உண்மை.

நில ஆக்கிரமிப்பு என்ற பெயரிலே இன்றைக்கு பொய் வழக்குகளை போட்டு தி.மு.கழகத்தின் மீது, அரசியல் நோக்கத்தோடு பலரை கைது செய்யலாம். நியாயமாக இருந்தால் கைது செய்யுங்கள். நாங்களே அதற்கு உடன்படுகிறோம். நாங்கள் அதை விமர்சிக்க தயாராக இல்லை. ஆனால் நீங்கள் யோக்கியராக இருந்தால் தலித் மக்களிடமிருந்து ஆக்கிரமித்த சிறுதாவூர் நிலத்தை தலித் மக்களுக்கு தந்து விட்டு அந்த நடவடிக்கையில் ஈடுபட்டால் உங்களை நான் வரவேற்க காத்திருக்கிறேன்.

நாங்கள் (திமுக) சந்திக்காத வழக்குகள் இல்லை. கமிஷன்கள் இல்லை.


அதிமுக அரசின் இந்த பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு அஞ்ச மாட்டோம். திமுக என்பது பனங்காட்டு நரி. எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டோம். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 6 மாதம் பொறுத்திருந்து பார்ப்போம் என்றுதான் முடிவு செய்திருந்தோம். ஆனால் பதவியேற்ற ஒரு மாதத்திலேயே மக்களின் எதிர்ப்பை இந்த அரசு சம்பாதித்துள்ளது.


திமுகவுக்கு வாக்களித்தவர்கள் மட்டுமல்ல, வாக்களிக்காதவர்கள் கூட, திமுக ஆட்சிக்கு வரவில்லையே என வருத்தப்படுகிறார்கள். அதனால் 2016க்கு முன்பாகவே திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் வாய்ப்புள்ளது. அதுவரை மக்களுக்காகப் போராடுவோம்

’’ என்று பேசினார்.

No comments:

Post a Comment