கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Monday, January 17, 2011

பொங்கல் திருநாள் முதல்வர் - துணை முதல்வர் வாழ்த்து


முதல்வர் கருணாநிதி:
உலகெங்கும் தமிழ்ச்சமுதாயத்தின் தனித்தன்மையை எடுத்துக்காட்டும் திருநாள் பொங்கல் நன்னாள். இந்நாளில் தமிழ்ப்புத்தாண்டு திருநாளையும் இணைத்து கொண்டாடும் அருமை தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கிறேன்.
பொங்கல் திருநாள் அறுவடைத் திருநாள், உழுது பயிரிட்டு வளர்த்து பாதுகாத்து, அறுவடை செய்து அனைவரும் வயிறார உண்ண உணவு தருபவன் ஏழை விவசாயி. அந்த விவசாயிகளின் வாழ்வு செழித்திட கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டில் கூடுதல் மழைபொழிந்து இந்த ஆட்சிக்குப் பெருமை சேர்த்துள்ளது இயற்கை. இயற்கையோடு இணைந்து விவசாயிகள் வளம்பெற 7000 கோடி ரூபாய்க் கடன் தள்ளுபடி, வட்டியில்லாப் பயிர்க்கடன், பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 50 விழுக்காடு காப்பீட்டுத் தொகை.
இந்த அரசின் பணிகள் மக்களின் பேராதரவுடன் வரும் ஆண்டுகளிலும் தொடரும் எனும் நம்பிக்கையோடு அருமைத் தமிழக மக்களுக்கு எனது புத்தாண்டு & பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் தெரிவித்து மகிழ்கிறேன்.
துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்:
எல்லா திசைகளிலும் நம்பிக்கை ஒளியைப் பரவச்செய்கிறது புத்தாண்டு சூரியன். இது தமிழ்ப் புத்தாண்டு. தமிழர்களின் புத்தாண்டு. நமக்கென்று ஆண்டுக்கணக்கு இல்லை என்கிற அவலத்தை நீக்கிய தலைவர் கருணாநிதியின் வரலாற்று சாதனையை நினைத்துப் பார்க்கின்ற நாள்தான் தை முதல் நாளாம் தமிழ்ப் புத்தாண்டு&பொங்கல் திருநாள். கருணாநிதி தலைமையிலான கழக அரசின் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் ஒவ்வொரு நாளுமே சாதனை திருநாள்தான். மகிழ்ச்சி பொங்கிய நாட்கள்தான். அவற்றைத் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நன்றியுடன் நினைவுகூர்கிறார்கள் தமிழக மக்கள்.

No comments:

Post a Comment