கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, January 15, 2011

தணிக்கை அதிகாரியின் அறிக்கை தவறானது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த இழப்பும் இல்லை - மத்திய அமைச்சர் கபில்சிபல் அறிவிப்பு


ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என்ற தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரியின் அறிக்கை முற்றிலும் தவறானது என்றும், இதில் அரசுக்கு எந்த இழப்பும் இல்லை என்றும், மத்திய அமைச்சர் கபில்சிபல் அறிவித்தார். 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, மத்திய தணிக்கை கட்டுப் பாட்டு அதிகாரி வெளியிட்ட அறிக்கை கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த 77 பக்க அறிக்கையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு காரணமாக மத்திய அரசுக்கு ரூ.ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாற்றப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் பெரிய அரசியல் சர்ச்சையாக உருவெடுத்தது. பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இதுகுறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டு குழு அமைக்க வேண்டும் என்று வற்புறுத்தி வந்தன. அந்த கோரிக்கையை மத்திய அரசு நிரா கரித்ததால், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் முற்றிலுமாக செயலிழந்தது. இந்த விவகாரத்தில் மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் பதவியை ஆ.இராசா பதவி விலகியதைத் தொடர்ந்து, அந்தத் துறையின் புதிய அமைச்சராக கபில் சிபல் பொறுப்பு ஏற்றார். நேற்று டில்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த கபில் சிபல், தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரியின் அறிக்கையை நிராகரித்தார்.

பேட்டியின்போது அவர் கூறியதாவது:-


2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட இழப்பை கணக்கிடுவதற்கு தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி பின்பற்றிய வழிமுறை வேதனை அளிக்கிறது. அவர் குறிப்பிட்ட இழப்புத் தொகைக்கு (ரூ.ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி) எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை. அந்த புள்ளிவிவரம் முற்றிலும் தவறானது. உண்மையில் இந்த விவகாரத்தில் அரசு கஜானாவுக்கு எந்தவித இழப்பும் ஏற்படவில்லை. இழப்பு தொடர்பாக நம்பகமான புள்ளி விவரங்களை அவர் வெளியிட்டு இருக்கக்கூடாது. இதன்மூலம் அரசுக்கும் இந்த நாட்டிற்கும் நெருக்கடியை அவர் ஏற்படுத்திவிட்டார். கணக்கு தணிக்கை அதிகாரி தனது மனசாட்சிக்கு அநீதி இழைத்துவிட்டார். எதிர்க்கட்சிகள் நாட்டின் சாமானிய மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டனர். மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதுபோல், இழப்புக்கு காங்கிரஸ் காரணம் அல்ல. தொலைத் தொடர்பு துறையில் உரிமம் வழங்குவதற்கு, `முதலில் வருகிறவர்களுக்கு முன் னுரிமை' என்ற கொள்கை பா.ஜனதா தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில்தான் அறிமுகம் செய்தது.


கடந்த 1999ஆம் ஆண்டில், அவர்களுடைய ஆட்சியின்போது நிலையான உரிமக் கட்டண முறை, வருவாயில் பங்கு அடிப்படையிலான கட்டண முறை கொள்கையாக மாற்றப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பு மட்டும் ரூ. ஒன்றரை லட்சம் கோடி ரூபாயாகும். கடந்த 2002ஆம் ஆண்டின் 10ஆவது அய்ந்தாண்டுத் திட்ட அறிக்கையில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு வருவாய் மட்டுமே அடிப்படை அளவுகோல் அல்ல என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதே கொள்கையைத்தான் நாங்களும் பின்பற்றினோம். இருந்தபோதிலும், 2-ஜி ஸ்பெக்ட் ரம் ஒதுக் கீட்டில் சில மனித தவறுகள் நடந்து இருக்கலாம். அது இயல்புதான். அதற்காகத்தான் தொலை தொடர்பு துறை சார்பில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் அறிக்கை வந்தவுடன், முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் இந்த விவகாரத்தில் நடைபெற்றுள்ள குற்றம் தொடர்பாக, உச்சநீதி மன்றத்தின் மேற்பார்வையில் சி.பி.அய். விசாரணை நடத்தி வருகிறது''. -

இவ்வாறு கபில்சிபல் கூறினார்.

No comments:

Post a Comment