கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, January 29, 2011

திமுகவில் இணைந்தார் எம்எல்ஏ சேகர்பாபு
முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில், எம்எல்ஏ சேகர்பாபு சனிக்கிழமை (29.01.2011) காலை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். இந்த சந்திப்பின்போது துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக வடசென்னை மாவட்டச் செயலாளர் வி.எஸ்.பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

"கலைஞர் சுட்டிக் காட்டும் திசையில் எட்டிப் பாயும் சிப்பாய்களில் இனி நானும் ஒருவன் " - பி.கே. சேகர்பாபு :

அ.இ.அ.தி.மு.க. விலி ருந்து விலகி, திமுகவில் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர் செய்தியா ளர்களுக்கு அளித்த பேட்டியில்,

தி.மு.க தலைவர் கலைஞர் அவர்களின் அணுகுமுறையின் சிறப் பையும், அதே நேரத்தில் அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளரின் அணுகு முறை குறித்தும் கூறியுள் ளார்.

பத்திரிகையாளர்: அ.தி.மு.க. வினுடைய ஸ்டார் எம்.எல்.ஏ வாக இருந்த நீங்கள்-திறம் படச் செயல்பட்ட ஒரு எம்.எல்.ஏ.வாக இருந்த நீங்கள்- அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா வினுடைய நம்பிக்கைக் குரியவராக இருந்த நீங்கள்- அந்தக் கட்சியி லிருந்து விலகி வந்து தி.மு.கழகத்தில் இணை வதற்கான காரணம் என்ன?

பி.கே.சேகர் பாபு: நான் நம்பியிருந்த தலைமை- என்மீது நம்பிக்கையை இழந்துவிட்டது. என்னை நம்பி அழைத் திருக்கின்ற தலைமை யின் ஆதரவை ஏற்றுக் கொண்டு-நம்பிக்கை யோடு நான் என்னை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டிருக்கிறேன். என்னை அடித்துத் துவைக்க கைகளும், எட்டி உதைக்கக் கால் களும் துணிந்திருந்த நேரத்தில், இதோ அரவ ணைக்க நாங்கள் இருக் கிறோம் என்று இரு கரங்களை நீட்டி தமிழ கத்தின் முதலமைச்சர்-ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவர் கலை ஞர் அவர்கள் அணைக் கக் கரங்கள் நீட்டிய தால்-இன்றைக்கு நான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் என்னை இணைத்துக் கொண்டி ருக்கிறேன். (பலத்த கைதட்டல்) (டாக்டர் கலைஞர் வாழ்க என பலத்த ஒலி முழக்கம்)

பத்திரிகையாளர்: தொடர்ந்து அ.தி.மு.க விலிருந்து பல முன்னாள் அமைச்சர்கள், முன்ன ணித் தலைவர்கள் எல் லாம் விலகி- தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அ.இ.அ.தி.மு.க.வில் எத்தனை பொதுச்செயலாளர்கள்?

பி.கே.சேகர்பாபு: திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத் தளவில், இந்த இயக்கத் திற்கு ஒரே தலைவர் டாக்டர் கலைஞர் அவர் கள்தான். ஆனால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன் னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில், பொதுச்செயலாளர் என்று புரட்சித்தலைவி அவர்கள் அந்த இயக் கத்தில் தொண்டர் களால் ஏற்றுக் கொள் ளப்பட்டிருந்தாலும், பல்வேறு பொதுச்செய லாளர்கள் அந்தக் கட் சியில் திரைமறைவில் இருப்பதால், தொடர்ந்து யாரும் மக்கள் செல் வாக்கு பெற்று, தொண் டர்கள் செல்வாக்கு பெற்று தொடர்ந்து அந்த இயக்கத்தில் இருக்க முடியாது என்ற நிலைக்கு இன்றைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். (சத்தியம்-சத்தியம் என்று தொண்டர்கள் ஒலி முழக்கம்)

பத்திரிகையாளர்: இதுபோன்ற நிலையில் வருகின்ற தேர்தல் முடிவுகள் எப்படியி ருக்கும்?

பி.கே.சேகர்பாபு: வருகின்ற தேர்தலைப் பொறுத்தளவில், தி.மு.கழகத்தினுடைய மக்கள் நலப்பணி களுக்கு, ஏழை, எளிய மக்கள், பாடுபடுகின்ற பாட்டாளிவர்க்கம், தி.மு.க ஆட்சியில் தீட்டப்பட்டிருக்கின்ற திட்டங்களால்-மக்க ளாக மனமுவந்து மீண் டும் 6ஆறாவது முறை யாக டாக்டர் கலைஞர் அவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்து வார்கள். (பலத்த கைதட்டல்).

பத்திரிகையாளர்: தலைவர் கலைஞர் அவர்கள் உங்களுக்கு ஏதாவது ஆலோசனை சொன்னாரா? என்ன உத்தரவிட்டார்?

பி.கே.சேகர்பாபு: அ.தி.மு.க.வில் இருந்த போதும், தூய விசுவா சிமிக்க தொண்டனாக இருந்துதான் பணி யாற்றினேன். என்னை வீசியெறிந்த பிறகு, என் னைத் தாங்கிப் பிடித்த கைகளுக்கு விசுவாச மாக அவர்கள் சுட்டிக் காட்டுகின்ற திசை நோக்கி எட்டிப்பாய் கின்ற சிப்பாய்கள் கூட் டத்தில் நானும் ஒருவ னாக இருந்து செயல் படுவேன்.

பத்திரிகையாளர்: அ.தி.மு.க.விலிருந்து விலகிய முன்னணித் தலைவர்கள் செல்வ கணபதி, முத்துசாமி, அழகு திருநாவுக்கரசு, அனிதாராதாகிருஷ்ணன், ஜோதி உள்பட அனை வரும் சொல்கின்ற பொதுவான காரணம், அ.தி.மு.க ஒரு பிரை வேட் லிமிடெட் கம் பெனி என்றும், பொதுச் செயலாளர் ஜெயல லிதா-சசிகலா குடும் பத்தினரின் கஸ்டடியில் இருப்பதாகச் சொல் கிறார்கள். நீங்கள் அ.தி. மு.க.வின் தலைமைக்கு நெருக்கமாக இருந்த காரணத்தால், இதுகுறித்து என்ன சொல்கிறீர்கள்?

பி.கே.சேகர்பாபு: டாக் டர் கலைஞர் அவர் களைச் சந்தித்தபோது, வெளியில் பத்திரிகை யாளர்கள் செய்தி சேக ரிக்க வந்திருக்கிறார்கள் என்ன கூற வேண்டு மென்று கேட்டபோது, அவர் கூறிய கருத்து, என்னை உள்ளபடியே மெய்சிலிர்க்க வைத்தது. அந்த அம்மையாரை எதுவும் காரசாரமாக பேசி விடவேண்டாம் என்று கூறினார். இப் படிப்பட்ட பண்புமிக்க ஓர் இயக்கத்திலே இணைந்திருக்கின்ற நான் விமர்சனத்திற்குள் செல்ல விரும்பவில்லை.

பத்திரிகையாளர்: நீங்கள் சீட் ஏதாவது கேட்டீர்களா?

பி.கே.சேகர்பாபு: நான் முதலில் ஏற்கெனவே கூறியதுபோல், இந்த இயக்கத்தின் தலைமை சுட்டிக்காட்டுகின்ற திசை நோக்கி சீறிப் பாய்கின்ற சிப்பாய்கள் கூட்டத்தில் நானும் ஒருவனாகச் செயல் படுவேன்.

பத்திரிகையாளர்: தொண்டர்களின் நம்பிக்கையை, அவநம்பிக்கையாக மாற்றிக் கொண் டிருக்கின்ற அ.தி.மு. கவின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

பி.கே.சேகர்பாபு: ஓர் அரசியல் இயக்கம் என்பது மக்கள் நலனை யும், தன்னை நம்பியி ருக்கின்ற இயக்கத் தொண்டர்கள், இயக்கத் தளபதிகள் நலனையும் நம்பி தேர்தல் களத்தைச் சந்திக்கின்ற இயக்க மாகத் திகழ வேண்டும். இன்றைக்கு ஒரு சிலரின் நன்மைக்காக நடத்தப் படுகின்ற இயக்கமாக அ.தி.மு.க இருப்பதால், வருகின்ற காலகட்டம் என்பது, அ.இ.அ.தி. மு.க.விற்குக் கேள்விக் குறியாக மாறும் என்ப தில் எவ்விதமான அய் யப்பாடும் இல்லை.

No comments:

Post a Comment