கலைஞரின் வழியில் கழகப் பணியில் எங்கள் நான்காம் தலைமுறை வை.மு.கவின்மதி

About Me

My photo
Madurai, Tamilnadu, India
" இராம. வைரமுத்து என்கிற நான், தமிழ் சமுதாயத்தினரைத் திருத்தி உலகத்திலே பிற சமுதாயத்தினரைப் போல் அறிவும் மானமுமுள்ள சமுதாயமாக ஆக்க வேண்டும் என்ற தொண்டினை ஏற்று வாழ்கிறேன். அதை செய்வதற்கு எனக்கு யோக்கிதை இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதை செய்வதற்கு வேறு யாரும் முன்வராத காரணத்தினால் நான் அதனை செய்து கொண்டிருக்கிறேன் " - இராம. வைரமுத்து M.S(IT&M),P.G.D(PM&IR), LLB..,

Search This Blog

Labels

Saturday, January 15, 2011

மதம் மக்களைப் பிரிக்கிறது பெரியார் கொள்கைகள் நம்மை இணைக்கின்றன - கவிஞர் கனிமொழி எம்.பி. கருத்து விளக்கம்



மதம் மக்களை ஒன்றுபடுத்து வது இல்லை; அப்படிச் சொல்லுவது ஒரு மாயை. தந்தை பெரியார் கொள் கைகள்தான் மனித குலத்தை இணைக்கிறது. அன்பும், அறிவும்தான் வாழ்வுக்கு அவசியம். தந்தை பெரியார் சுய மரியாதைப் பாதை அது தான் என்றார் கவிஞர் கனிமொழி.


திருச்சியில் 08.01.2011 அன்று நடைபெற்ற உலக நாத் திகர் மாநாட்டில் பங் கேற்று உரையாற்று கையில் அவர் கூறியதா வது:


எப்பொழுதும் எனது ஆசிரியர் என்று நான் பெருமைப்படும் ஆசிரி யர் அவர்களின் தலை மையில் நடைபெறும் உலக நாத்திகர் மாநாட் டில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

கொள்கை வாரிசு என்பதற்காகப் பெருமைப்படுகிறேன்

என்னை அறிமுகப் படுத்தி வரவேற்ற மதிப் புக்குரிய கவிஞர் கலி.பூங் குன்றன் அவர்கள். கலை ஞரின் நாத்திகக் கொள்கை வாரிசு என்று குறிப் பிட்டார். அதற்காக நான் பெருமைப்படுகிறேன். (பலத்த கரவொலி!).

தீச்சட்டி ஏந்தும் இரகசியம்

தீச்சட்டியை நான் கையில் ஏந்தியது இப் பொழுது இரண்டாவது முறை-முதல் தடவை பெரியார் திடலில் ஏந்தி னேன், கை சுடவில்லை; இன்னும் சொல்லப் போனால் இதமாகக்கூட இருந்தது என்று சொல்ல வேண்டும். இதன் இரக சியம் என்ன என்று கேட்டேன். பெரியார் திடல்-அறிவியல் கண் காட்சியில் அந்தப் பெண்கள் எனக்கு விளக்கம் சொன்னார் கள். சட்டியில் கீழ் தானி யங்களை வைத்து அதன்மேல் நெருப்புக் கட்டிகளை வைத்தால் தானியங்களைத் தாண்டி நெருப்பு சுடாது என் பதுதான் அந்த இரக சியம்.
கோயில்களிலும் அதைத்தான் செய்கி றார்கள். கடவுளின் பெயரால், மதச்சடங்கு களின் பெயரால் இப் படித்தான் மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். குறிப் பாகத் தாய்மார்கள் ஏமாந்து போய்விடுகி றார்கள்.

கலை நிகழ்ச்சிகள் அருமை!

அறிவியலால்தான் நாடு முன்னேற முடியும் அறிவியலின் அடிப் படையில் சிந்தித்தால் யாரும் நம்மை ஏமாற்றி விட முடியாது.
பெரியார் கல்வி நிறு வனங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மிகச் சிறப்பான கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினார்கள்.
உலகம் உருண்டை, பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்கிறது என்று சொன்ன-கண்டு பிடித்த கலிலியோவுக்கு மதம் தண்டனை வழங் கியது என்பதைச் சிறப் பாக நடத்திக் காட்டி னார்கள். சமூகம் மதத் தின் பிடியில் சிக்கினால் வளர்ச்சி அடையவே முடியாது என்பதுதான் உண்மை.

ஆணையிடும் மதவாதிகள்

தந்தை பெரியார், அவர்கள் பல எதிர்ப்பு களைச் சந்தித்தவர்தான். அதைவிட இப்பொழுது அதிகப்படியாக மதவா தங்கள்-மதத் தலை வர்கள் செயல்படுவதைக் காண முடிகிறது.
பெண்கள் எதைப் படிக்க வேண்டும்? எந்த உணவைச் சாப்பிட வேண்டும்?எந்த உடையை உடுத்த வேண் டும் என்று ஆணையிடு பவர்களாக மதத் தலைவர்கள் விளங்குகிறார்கள்.
அரசியலை எப்படி நடத்த வேண்டும்? ஏடுக ளில் எவ்வாறு எழுத வேண்டும் என்று கட் டளை பிறப்பிக்கிறார் கள். இந்த அதிகாரங் களை இவர்களுக்கு யார் கொடுத்தார்கள்?
தலிபானசம் என்ற சொல் அதிகமாக அடி பட ஆரம்பித்துள்ளது. யார் பெண்களை அதிக மாக அடக்கி ஆள் கிறார்கள் என்பதில்தான் அவர்களுக்குள் போட்டி.

கடவுள்கள் எல்லாம் ஆண்களே!

எல்லா மதங்களும் கடவுள்களை ஆண்க ளாகத்தான் சித்திரித்துள் ளன. சின்ன சின்ன- சிறு வழிபாட்டுக்குரிய வகை களில் வேண்டுமானால் பெண் கடவுள்கள் இருக் கலாம்.
இந்த நிலையில் ஆண் களான கடவுள்களிடத் தில் பெண்களுக்கு என்ன பந்தம் இருக்க முடியும்? இன்ஸ்டன்ட் காபி போல கடவுளிடம் சென்று உடனே பலன் கிடைக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.
பிரச்சினைகள் பற்றி சிந்திப்பதில்லை. அதனை எப்படித் தீர்ப் பது என்று சிந்திப்ப தில்லை. நேராகக் கோயிலுக்குச் சென்று கடவுளிடம் கூறி உட னடித் தீர்வு-இன்ஸ் டன்ட் தீர்வு கிடைக்க வேண்டும், கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.

கடவுளும் மதமும், தீர்வுகளைக் கொடுக்குமா?

கடவுளும், மதமும் தீர்வுகளைக் கொடுத் துள்ளதா? கெட்ட நாள், கெட்ட நேரம் என்று மாதத்தில் 20 நாள்களை வீணடிப்பது தான் மதம் கொடுக்கும் தீர்வா?
இங்கு ஏன் புரட்சி வரவில்லை? எதிலும் அடக்குமுறை-சிந்தனை அடக்குமுறை. இன்று கஷ்டப்படு; ஏன், எதற்கு என்று கேட்காதே! வாயைமூடு! அடுத்த ஜென்மத்தில் உனக்கு நல்லது கிடைக்கும் என்று நம்பவைத்து விட்டனர்- கடவுளின் பெயரால்-மதத்தின் பெயரால்.
அடக்க நினைப்பவர் களுக்கு இந்தக் கடவு ளும், மதமும் வசதியாக இருக்கின்றன.

பின்னணியில் ஜாதி

நகரங்களில் சில விளம்பரங்கள் வருகின் றன. வீடு வாடகைக்கு விட விரும்புபவர்கள் கொடுக்கும் விளம்பரம் அது.
‘ONLY FOR VEGETARIANS’ என்று அந்த விளம்பரத்தில் நிபந்தனை வைக்கப் படுகிறது. இதன் பின் னணியில் இருப்பது பெரும்பாலும் ஜாதி யில்லையா? இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். சில திருமண மண்டபங்களில் கூட அசைவ உணவு என் றால் இடம் கொடுப் பது கிடையாது. இதில் ஜாதியில்லையா?
திரைப்படம், தொலைக்காட்சிகளில் எல்லாவற்றிலும் ஒருவகை அரசியல் இருக்கத்தான் செய் கிறது. அவர்களிடம் உள்ள ஆயுதங்களால் நம்மைக் குறிபார்த் துத் தாக்குகிறார்கள்.

பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுப்போம்!

தந்தைபெரியார் அறிஞர் அண்ணா, நமது ஆசிரியர் போன் றவர்கள் நமக்கெல்லாம் நல்ல அளவு விழிப்புணர்வை ஊட்டி வந்துள்ளனர். அவற்றையெல்லாம் நாம் நம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நம்மை நாம் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

மதம் இணைக்கிறதா?

மதம் நம்மை ஒன்றாக இணைக்கிறது என்று சொல்லுவதெல்லாம் உண்மையல்ல. அது ஒரு மாயை! உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் மதத்தின் பெய ரால், ஜாதியின் பெயரால் சிந்தப்பட்ட ரத்தம்தான் அதிகம். சிறுவயதிலிருந்து எப்படி வளர்க்கப்பட்டு இருக்கிறோம் என்பது தான் முக்கியம்.

மதம் மாறுவது குற்றமா?

முதியோர் இல்லம் பற்றி பல கருத்துகள் உள்ளன. நான் ஒரு முதி யோர் இல்லத்துக்குச் சென்றேன். ஒரு பெரிய வரைக் காண நேர்ந்தது. ஏன் நீங்கள் முதியோர் இல்லத்தில் இருக்கிறீர் கள்? என்று கேட்டேன். என்மகன் எனக்குப் பெரிய துரோகம் செய்து விட்டான் என்றார். அப்படியென்ன பெரிய துரோகம் செய்துவிட் டான்? என்று கேட் டேன். என் மகன் இன் னொரு மதத்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு விட் டான்; அதற்காக இவ னும் மதம் மாறிவிட் டான் என்றார். நான் அந்தப் பெரிய வரைப் பார்த்துக் கேட் டேன், மகன்தானே மதம் மாறிவிட்டான்? உங் களை மதம் மாறச் சொல்லவில்லையே! என்று கேட்டேன்.
மதம் மாறுவது அப் படியென்ன பெரிய துரோகம்? இன்று கூட கவுரவக் கொலைகள் நடக்கின்றனவே! மதம் மாறி, ஜாதியைக் கடந்து திருமணம் செய்து கொண்டால், இன்றுகூட பாதிப்பு வருகிறதே?
இந்து மதமும், அதன் கடவுள்களும் மக்களை ஒன்றாகப் பிணைக்கிறதா- மோதல்களை விதைக் கின்றதா?
கலப்புத் திருமணம் என்பதைக் கூட தந்தை பெரியார் ஒத்துக்கொள் வது இல்லை. மனிதனுக்கு மனிதன்தானே திருமணம் நடக்கிறது- அது எப்படி கலப்புத் திருமணம் ஆகும் என்று கேட்டார் தந்தை பெரியார். மனிதனுக்கும் மிருகத்துக்குமா கல் யாணம்-கலப்புமணம் என்று சொல்ல? பெரி யாரின் கேள்விக்கு என்ன பதில்?

அன்பும், அறிவும் அவசியம்

மனிதன் சுயமரியாதை யுடன் கலந்த சமத்துவமாக வாழ அன்பும், அறிவும் அவசியம் தேவை. அதைத் தான் தந்தை பெரியார் வாழ்நாள் எல்லாம் வலி யுறுத்தினார். அய்யாவின் அந்த வழிதான் நாட்டுக் குத் தேவை. அதுதான் மனித குலத்தை வாழ வைக்கும் என்றார் கவிஞர் கனிமொழி எம்.பி.,

No comments:

Post a Comment